‘100 % காதல்’ ஆகும் ‘100 % லவ்’ .

சமந்தாவின் கணவர் நாக  சைதன்யாவும் தமன்னாவும் ஜோடியாக நடிக்க, 

சுகுமார் என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் வந்து சக்கைப் போடு போட்ட படம் 100 % லவ் . 

சற்று சோம்பிக் கிடந்த நாக  சைதன்யாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் இது . 

 இந்தப் படம் இப்போது மேற்படி சுகுமாரே தயாரிக்க,
 
அவரது நண்பரான சந்திர மவுலி இயக்க ,
 
ஜி  வி பிரகாஷ் குமார்  நாயகனாக நடிக்க , 100 % காதல் என்ற பெயரில், 
 
 
தமிழில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது . இசையும் ஜி வி பிரகாஷே  
 
படத்தில் நாயகியாக நடிப்பவர் ஷாலினி பாண்டே .
 
தெலுங்கில் சக்கைப் போடு போடும் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி .
 
இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் . 
 
நந்தவன தேரு , ஜில்லா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கணேஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் . 
 
நடிகை ஜெய சித்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . 
 
படத்தின் பூஜையில் பாரதிராஜா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  வாழ்த்தினார் .
 
ஆர்கே செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர் 
 
100 % லவ்  தெலுங்குப் படத்துக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் , இந்த 100 % காதல்  படத்தின் பூஜைக்கு வந்து வாழ்த்தியதோடு, 
 
”என்னை விடவும் ஜி வி பிரகாஷ் போடப் போகிற சிறப்பான பாடல்களை கேட்க ஆவலாக உள்ளேன்” என்றார் . 
 
“ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில், 
 
முக்கிய கேரக்டரில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது ” என்றார் ஜெயசித்ரா 
“நண்பர் சந்திர மவுலி நல்ல டெக்னீசியன் .
 
என்னை விட படத்தை சிறப்பாக கொடுப்பார் .
ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடிப்பது ரொம்ப சந்தோசம் ” ” என்றார் சுகுமார் .
 
“ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டியில் சிறப்பாக நடித்து இருந்தார் .
நல்ல திறமைசாலி நடிகை .
 
இந்தப் படம் தமிழில் அவருக்கு பெரிய அறிமுகமாக அமையும் ” என்றார் ஜி வி பிரகாஷ் . 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *