143@ விமர்சனம்

ஐ டாக்கீஸ் சார்பில் சதீஷ் சந்திர பாலேட் தயாரிக்க, ரிஷி , பிரியங்கா , விஜயகுமார், புன்னகை அரசி கே ஆர் விஜயா நடிப்பில், 

கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகன் ரிஷி இயக்கி இருக்கும் படம் 143 . i love you என்பதன் சுருக்கம். படம் காதலிக்கும்படி இருக்கிறதா ? பார்க்கலாம் .

கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு நண்பர்களோடு தண்ணி அடித்துக் கொண்டு சுற்றும் இளைஞன் கார்த்தி (ரிஷி) .
 
பணக்கார மகனால் புறக்கணிக்கப்பட்ட வயதான பெண்மணி ஒருவருக்கு (கே ஆர் விஜயா) ஆறுதல் காட்டும் அவன்,
 
அந்த பெண்மணி சாகும்போது வாரிசுக்கு உரிய அனைத்து ஈமச் சடங்குகளையும் செய்கிறான் . 
 
அந்த ஊர் பண்ணையாரின் மகள் கீர்த்தி மீது (நட்சத்திரா) கார்த்திக்கு ஆசை. ஆனால் கீர்த்திக்கு கார்த்தி மீது காதல் . எனவே அவள் சொல்லாமல் தள்ளி வைக்கிறாள் .
 
கார்த்தி் வெட்டியாக ஊர் சுற்றுவது  குறித்து வருந்தும் அப்பா (விஜயகுமார்) , அவனை சென்னையில் உள்ள நண்பனின் உணவு விடுதிக்கு வேலை செய்ய அனுப்பி வைக்கிறார். 
 
சென்னையில் மது என்ற  பெண் மீது (பிரியங்கா ஷர்மா)  கார்த்திக்கு காதல் வருகிறது . அவளுக்கு அவனை முன்பே தெரியும் .
 
அவனுக்குத்தான் அவளை தெரியாது . அவளும் அவனை  காதலிக்கிறான் . இந்நிலையில் ஒரு ரவுடி (ராஜ சிம்மன்)  கார்த்தியை கத்தியால் குத்துகிறான். 
ஏன் குத்தினான்? கார்த்திக்கு என்ன ஆச்சு ?  கீர்த்தியின் காதல் என்ன ஆனது ?  மதுவுக்கு எப்படி கார்த்தியை தெரியும் ? மதுவின் காதல் என்ன ஆனது ..?
 
— என்பது பற்றி எல்லாம் படம் எடுத்தவர்களுக்கே கவலை  இல்லாத போது நாம என்ன செய்வது?
 
ஒரு திரைக்கதையில் ஒரு காட்சி அல்லது காட்சித் தொகுப்பு வருகிறது பின்னால் அது கதைக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் .
 
படத்தின் துவகத்துக்கும் முடிவுக்கு சம்மந்தம் இருக்க வேண்டும் . படத்தில் வரும் கண்ணீர் கோபம் எல்லாவற்றுக்கும் காரணம் இருக்க வேண்டும் . 
 
முந்தைய காட்சி பயன்படும்படி அடுத்து வரும் காட்சி இருக்க வேண்டும் . 
 
கிளைமாக்சுக்கு ஒரு நியாயம் இருக்க வேண்டும் . நோக்கம் இருக்க வேண்டும் . இதற்கெல்லாம் முதலில் கதை இருக்க வேண்டும் . 
 
செயற்கையான நடிப்பு 
 
விஜய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை . கார்த்தியை எப்படி தெரியும் என்று மது சொல்லும் காரணம் பரவாயில்லை
 
ஒரு முழு படத்துக்கு இது மட்டும் போதுமா ?
 
143 யில் இந்த 4க்குப் பதில் வேறொரு நான்கெழுத்து வார்த்தை போட்டால் என்ன அர்த்தம் வருமோ, அதுவே இந்தப் படம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *