19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிப்பு

golla

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருதின்படி,

கடந்த 2015ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்  தேர்வு   செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர்

ஜெயபிரகாஷ் ராதா  கிருஷ்ணன்  இவ்விருதினைப்  பெறவிருக்கிறார்.

இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மரணம்  அடைந்தார்.

இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார்.

golla 2

இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப் பட்டு ,  கடந்த 18 ஆண்டுகளாக

இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு விருதளித்து  கவுரவித்து வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக,

“The  Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார்.

கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Copy of Copy of golla 2

மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம்,தனது தந்தையான சாருஹாசன்  எழுதிய

“Thinking  on  my  feet” என்ற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடைநாடகத்தினை இயக்குகிறார்.

இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்துநடிக்கின்றனர்.

இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கிலமேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *