ஆறடி@ விமர்சனம்

விஜய ராஜ், தீபிகா ரங்கா ராஜு, சாப்ளின் பாலு, ஜீவிதா, நடிப்பில் சக்திவேல் என்பவரின் கதை திரைக்கதை வசனத்துக்கு சந்தோஷ் குமார் என்பவர் படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் ஆறடி 

சுடுகாட்டு வெட்டியான் . இரண்டு மகள்கள் . நடுவில் ஒரு மகன் .  குடும்பம் விரும்பாவிட்டாலும் வசதி இல்லாத காரணத்தால் மகனும் அப்பாவுக்கு உதவியாக அதே தொழிலில் இறங்குகிறான் . 
 
ஒரு விபத்தில் தம்பி இறந்து அப்பா பக்கவாதத்தில் படுக்க, சுடுகாட்டுக்குள்ளேயே பெண்கள் அனுமதிக்கப் படாத சூழலையும் மீறி , இரண்டு பெண்களும் ஊருக்கு வெட்டியாள்களாக மாறுகின்றனர் . 
 
பிணங்களை மேளம் அடித்து கொண்டு வருவது , குழி தோண்டி , சடங்கு செய்து புதைப்பது எரிப்பது உட்பட எல்லா சடங்குகளையும் செய்கின்றனர் . 
 
அக்காவை பத்திரிகையாளன் ஒருவன் காதலிக்கிறான் . ஆரம்பத்தில் சமூக ஏற்றத் தாழ்வை காரணம் காட்டி,  தானே மறுக்கும் அவள்,  ஒரு நிலையில் ஏற்கிறாள் . 
 
கல்யாணத்தை நோக்கி போகும் போது காதலனின் அப்பாவுக்கு சமூக அவமானம் வர, அதை வரதட்சணைமூலம் சரி செய்யப் பார்க்கிறார் . பக்கவாதம் வந்த வெட்டியான் கஷ்டப்பட்டு  வரதட்சணைப் பணம் சம்பாதிக்க , அது திருடு போக அப்புறம் என்ன ஆனது என்பதே ஆறடி 
 
கதை பழசு . ஆனால் களம் புதுசு. பெண்கள் வெட்டியான் தொழில் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பாக  விவரிக்கப் படுகின்றன. அந்த பெண்களின் வாழ்வியல் சூழல் யதார்த்த மன நிலை போன்றவை ( சமைத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஆள் செத்துப் போன தகவல் வரும்போது காட்டும் சந்தோஷம்) விவரிக்கப்படும் விதமும் அருமை . 
 
படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார் நாயகி தீபிகா. அபாரமான குரல் . நல்ல நடிப்பு . எல்லா சூழல்களிலும் அவர்  அழுத்தமாக வசனம் பேசுவது ஆரம்பத்தில் செயற்கையாக பட்டாலும் ஒரு நிலையில் அதுதானே சரி என்று நம்மை நாமே திருத்திக் கொள்கிறோம் . அந்த அளவுக்கு நவீன கண்ணாம்பாவாக ஜொலிக்கிறார் தீபிகா .
 
தங்கையாக நடித்து இருக்கும் இரண்டாம் கதாநாயகி ஜீவிதாவும் சிறப்பு   
 
சாப்ளின் பாலு இயல்பு . 
 
மற்றவர்கள் ஜஸ்ட் ஒகே 
 
அபி ஜோ ஜோ இசையில் பாடல்கள் எளிமை . சில நல்ல வரிகளும் காதுக்குள் விழுகின்றன 
 
படமாக்கல் சிறப்பாக இல்லை என்றாலும் திரைக்கதை  நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கிறது. 
 
கிளைமாக்ஸ் ஏரியாதான் பலவீனமாகி நிற்கிறது . 
 
‘நம்ம கல்யாணத்துக்கு பிறகு உன் தங்கையின் கல்யாண விசயத்தை நாமே பார்த்துக்கலாம் ‘ என்று காதலன் சொல்லி இருக்க,   ஒரு நிலையில் எல்லோரும் திரும்பி  வந்த பிறகும்  இந்த கிளைமாக்ஸ் . வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது . 
 
படத்துக்கு வேறு நல்ல கிளைமாக்ஸ் முயன்று இருக்க வேண்டும் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *