அபியும் அனுவும் @ விமர்சனம்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் , பியா பாஜ்பை ஜோடியாக நடிக்க, பிரபு , சுகாசினி , ரோகினி  உடன் நடிக்க,

உதயபானு மகேஸ்வரனின் கதை திரைக்கதைக்கு கே. சண்முகம் வசனம் எழுத , பி ஆர் விஜயலட்சுமி தயாரித்து இயக்கி இருக்கும் படம் அபியும் அனுவும். 

ஒட்டிக்கலாமா ? வெட்டிக்கலாமா ? பேசுவோம் . 

ஐ டி கம்பெனி இளைஞனான அபி என்ற அபிமன்யூவுக்கும் ( டோவினோ தாமஸ் ) , புற்று நோய் விழிப்புணர்ச்சிப் பணி செய்யும் இளம்பெண் அனுவுக்கும்( பியா பாஜ்பை) இருவருக்கும் முக நூல் வழிக் காதல் . 
 
அனு தன் அம்மாவிடமும் (ரோகினி) அபி தனது அப்பா அம்மாவிடமும் (உதயபானு மகேஸ்வரன்– தீபா ராமானுஜம்) சொல்லாமல் கூட திருமணம் செய்து கொண்டு பிறகு சொல்கின்றனர். பெற்றோரும் ஏற்கின்றனர் . 
 
அனு கர்ப்பம் ஆகிறாள். 
 
இந்த நிலையில் அனுவின் அம்மாதான்  வாடகைத்தாயாக உயிரணுவை ஏந்தி அபியையும் பெற்றுக் கொடுத்தவள்; ஆக, அபி அனு இருவருக்கும் அம்மா ஒருவர்தான் .
 
அப்பாதான் வேறு வேறு, இருவரும் உறவுப் படி அண்ணன் தங்கை என்ற உண்மை   வேலைக்காரப் பெண்மணி ( கலை ராணி) மூலம் , தெரியவருகிறது . 
 
கருவைக் கலைத்து விட்டு விவாகரத்து செய்து பணத்தைக் கொடுத்து அனுவை செட்டில் செய்து விட்டு வரும்படி அபியின் அப்பா அம்மா சொல்கின்றனர் .
 
ஆனால் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியாக வாழலாம் என்கிறாள் அனு. 
 
குழப்பத்தில் அனுவின் அம்மா சாக, அவருக்கு மகனாக சடங்குகள் செய்து  விட்டு, அப்பா அம்மா சொன்ன வழியில் அனுவைப் பிரிய முடிவு செய்கிறான் அபி. ”கருவைக் கலைக்க முடியாது . நான் பெற்று வளர்த்துக் கொள்கிறேன் . குழந்தை பிறக்கும்வரையாவது  கூட இரு” என்கிறாள் அனு.
 
ஆரம்பத்தில் அபி சம்மதிக்கிறான் . பின்னர் அதிலும் பிரச்னை . 
 
அபியின் பக்கத்து வீட்டில் வாழும் குழந்தை இல்லாத ஜோடி(பிரபு – சுகாசினி) இருவரையும் கணவன் மனைவியாக வாழ வைக்க முடிவு செய்கிறது .
 
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் 
 
— என்று முடிக்க எல்லாம் ஒன்றும் இல்லை . 
 
ஏனென்றால் ஒண்ணும் நடக்கல . 
 
அனுவின் அம்மாவுக்கு மகனாக சடங்குகள் செய்ய முடிவு செய்யும் அபி அதன் மூலம் அனுவை பிரிய முடிவு செய்கிறான் என்ற ஒரு இழை மட்டும்   கவனம் கவர்கிறது . எப்போதோ ஆனந்தக் கும்மி என்ற பெயரில் வந்து இளையராஜாவின்  காலத்தால் அழியாத பாடல்கள் கிடைத்தும் படு தோல்வி அடைந்த கதையை, 
 
இப்போது ஒருத்தர் எழுதி , எந்த சுவாரஸ்யமும் இல்லாத உப்பு சப்பற்ற காட்சிகளுடன் திரைக்கதை எழுதி  , 
 
ஏதோ ரேடியோ டிராமா கணக்காக ஒருவர் வசனம் எழுத , 
 
பலரும் பார்க்காத ஒரு சேனலின் பிரைம் டைம் அல்லாத நேரத்தில் அழுது வடியும் ஒரு அரைவேக்காடு சீரியல் போன்ற மேக்கிங்கில் நத்தையாக ஊர்கிறது படம் , சொத்தையாக !
 
தமிழ் பேசுவதாக நினைத்துக் கொண்டு மலையாள நெடி மண்டையை உடைக்க வசனம் பேசும் டோவினோ தாமஸ்  இன்னொரு பக்கம் எரிச்சல் மூட்டுகிறார் . 
 
பியா பாஜ்பை படு செயற்கை . சுகாசினி பிரபு கேரக்டர்களும் அப்படியே . 
அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது எனும்போது எதற்கு அந்த கதாபாத்திரங்கள் , காட்சிகள் ? 
 
திரைக்கதையில் ஒரு கேரக்டர் மற்றும் காட்சி வருவதற்கு ஒரு கரணம் மற்றும் விளைவு வேண்டாவா ?
 
ஒரு உண்மை சம்பவம் என்று சும்மாவாச்சும் கூறிக் கொள்ளும் இந்தக் கதையில் இவ்வளவு கூத்தும் அடித்து விட்டு, 
 
கடைசியில் அனு வாடகைத்தாய் மூலம் பிறந்தவள் அல்ல . டெஸ்ட் டியூப் பேபிதான் என்று கடைசியில் ஒரு தகவல் வேறு . 
 
என்னதான்பா சொல்ல வர்றீங்க . ? என்னமோ போங்கப்பா . 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *