அதே கண்கள் @ விமர்சனம்

adhe 1

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க, கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் , ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் நடிப்பில் 

ரோகின் வெங்கடேசன் மற்றும் முகில் ஆகியோரின் கதை திரைக்கதையில் , முகில் வசனத்தில், ரோகின் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் அதே கண்கள் . இந்தக் கண்கள் ரசிகர்களை ஈர்க்குமா ? பார்க்கலாம் 

சிறுவயதில் பார்வை இழந்த நிலையிலும்  , சமையல் கலை கற்று சொந்தமான ஒரு நவீன உணவகம் தொடங்கி முன்னேறி இளம் தொழிலதிபர் விருது பெற்ற வருண் என்ற இளைஞனை (கலையரசன்) ,

adhe 2

அவனது சிறு வயது தொட்ட  தோழியான சாதனா (ஜனனி அய்யர்)  கல்யாணம் செய்து  கொள்ள விரும்புகிறாள் . 
வருணின் பெற்றோரின் விருப்பமும் அதுவே . 

இந்த நிலையில் ஏழைகளைத் தேடிச் சென்று உணவளிக்கும் தீபா (ஷிவதா)  என்ற பெண் வருணுக்கு  அறிமுகமாகிறாள் . வருணுக்கும் தீபாவுக்கும் இடையே காதல் பூக்கிறது .

தீபாவின் அக்கா திருமணத்துக்கு  தீபாவின் அப்பா வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்த தாதாவின் ஆட்கள் தங்களை மிரட்டுவதாக கூறும் தீபா , ”இருபது லட்ச ரூபாய் இருந்தால் பிரச்னையை முடிக்கலாம்”  என்கிறாள் . 

adhe 3

தன்னிடம் உள்ள பணத்தை தர வருண் சம்மதிக்கிறான் . அந்த நிலையில் வருணுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது . மூன்று வார சிகிச்சைக்கு பின்பு குணமாகும் வருணுக்கு கண் பார்வையும் வருகிறது . 

தீபாவை வருண் தேட , அவளை கண்டு பிடிக்க முடியவில்லை . காலப் போக்கில் சாதனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான் வருண் 

Adhe Kangal

திருமணத்துக்கு முதல் நாள்  தீபாவின் அப்பா வருணை சந்தித்து , ” நீ பணம் தராததால் என் மகளை கடன்காரர்கள் கடத்தி வைத்து கொடுமை செய்கிறார்கள்” என்று கூற , 

கல்யாணத்துக்கு செய்த நகையோடு வருண் போகிறான் . போன இடத்தில் தீபாவின் தந்தை கொல்லப்படுகிறார் . நகையும் பறிபோகிறது . தீபாவையும் காப்பாற்ற முடியாத நிலை . 

adhe 7

அதே நேரம் சாதனா — வருண் திருமணமும் நின்று போகிறது  . சில நாட்களுக்குப் பிறகு கன்யாகுமரியில் கார் விபத்தில் அடி பட்டு இறந்த ஒருவரின் உருவத்தைப் பார்த்தால் … அது தீபாவின் அப்பா !

நம் கண் முன்னாள் பல நாட்களுக்கு முன்பு இங்கே இறந்த தீபாவின்  அப்பா , இப்போது  கன்யாகுமரியில் விபத்தில் சிக்கி மறுபடியும் இறந்தது எப்படி என்று குழம்பும் வருண் கன்யாகுமரிக்கு செல்கிறான் . 

adhe 8

அங்கே காவலர் பஞ்சு (பால சரவணன் ) உதவியோடு உண்மைகளை தேடும்போது கிடைக்கும் எதிர்பாராத,  தலை கீழ், சம்பவங்களே இந்த அதே கண்கள் . 

யாரும் இல்லாத தனிமையில் எந்தத் தொந்தரவும் இல்லாத சூழலில் செல்போனை அணைத்து விட்டு, ராஜேஷ்குமார் அல்லது பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு துப்பறியும் கதையை ,

ஒரே மூச்சில் படித்து முடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஓர் உணர்வை தருகிறது படம் . 

adhe 44

வருண் கேரக்டரை மிக இயல்பாக நடித்து கவனம் கவர்கிறார் கலையரசன் . மீண்டும் ஒருமுறை தான் ஓர் இயல்பான நடிகன் என்று நிரூபிக்கிறார். 
 
நல்ல பொண்ணு கதாநாயகி பாத்திரத்தில் கண்கள் விரிய விரிய ஜனனி அய்யர் ! முகத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிக்கிறது அந்தக் கண்கள் . 

adhe 33

நெடுஞ்சாலை , ஸீரோ படங்களில் மனம் கவரும் மணமான பூவாக நடித்த ஷிவதா இந்தப் படத்தில் பூ நாகமாக மாறி இருக்கிறார் .  நல்ல நடிப்பு . 

பால சரவணன் வழக்கம் போல . படத்தின் கதைக்கு  ஏற்றபடி ஏதாவது டிரை பண்ணுங்க சார் . 

ரவிவர்மன் நீல மேகத்தின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் நன்றாக வந்துள்ளது  ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகேதான் . பின்னணி இசை சிறப்பு .

adhe 66

நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதையை கவனமாக நறுக்கி இரண்டு மணி ஒரு நிமிட நேரத்தில் முடித்து போரடிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார் படத் தொகுப்பாளர் லியோ ஜான்பால் . 

ஆரம்பத்திலேயே சொன்னது போல ஒரு நாவல் படிக்கிற உணர்வை மட்டுமே படம்த ருகிறது . சினிமாவுக்கான மீடியத்துக்கு ஏற்ற  ‘காலப்’ , அழுத்தம்  படத்தில் குறைவே . அதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம் . 

adhe 55

படத்தின் முக்கியத் திருப்பத்தை யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளையும் படமாக்கிய விதத்தையும் இன்னும் சிறப்பாக வடிவமைத்து இருக்கலாம் .

எனினும் ஆர்ப்பாட்டமில்லாத   சொல்ல வரும் விசயத்தை தெளிவாக சொலகிற , அதே நேரம்  சமூகத்துக்கு ஒரு…..  ‘ஜாக்கிரதை மக்கா’ என்ற சேதி சொல்லும் படமாகவும் வந்துள்ளது அதே கண்கள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *