திரில்லர் படம் ‘அந்த நிமிடம்’

ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’

இந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கிய வருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்று நடித்திருக்கிறார்.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கிய தமிழ்த்திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும்,

சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி, இசை – எஸ்.என்.அருணகிரி (இவர் சண்டிவீரன், கோலிசோடா, கடுகு போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்), பின்னணி இசை – சஜித் ஆண்டர்சன், எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ் (இவர் மைனா, கும்கி, தொடரி, கயல் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்)

சண்டைப்பயிற்சி – எஸ்.ஆர்.முருகன், நடனம் – ரேகா, கலை – செல்வராஜ், பாடல்கள் – அருண்பாரதி, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.குழந்தை ஏசு

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *