அமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’

L.W. பிலிம்ஸ் சார்பில் திருமதி மஞ்சுளா தயாரிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’ 
ME TOO பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு கதை திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப் படத்தை, 
 
 கே. பாலச்சந்தர், எஸ் பி முத்துராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவரும்
 
சிங்கள மொழியில் மூன்று திரைப்படங்களை இயக்கி இருப்பவருமானகுழந்தை இயேசு எழுதி இயக்குகிறார் .
“சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் நாயகன் அங்கே ME TOO பிரச்னையில் சிக்கிக் கொள்கிறான் .
 
அதனால் ஏற்படும் விபரீதங்களை சொல்லும் படம் இது” என்கிறார் குழந்தை இயேசு 
 
‘சின்னதா ஒரு சக்கர பொங்கல்’ என்ற தமிழ்ப்படம் (எப்போ பரிமாறுவாங்களோ?)  மற்றும்
 
‘பிக் சல்யூட்’ என்ற மலையாளப் படம் (ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ருத்ரா கதாநாயகனாக நடிக்கிறார் . 
 
அமெரிக்காவை சேர்ந்த நாசிங்கான் (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை !)  தெலுங்கு கன்னட படங்களில்
 
நாயகியாக நடிக்கும் சஞ்சனா ( மாற்றான் தோட்டத்து மல்லிகை) என்று வித விதமாய் கதாநாயகிகள் படத்தில் ! 
 
(மேலும் சில மேடு பள்ளங்கள்  பூஜையில் தென்பட்டதே . அப்போ அது எல்லாம் வில்லிகளா ?)
 
சிங்கள மொழியில் 34 படங்களில் வில்லனாக நடித்திருக்கும் லால் வீர சிங் மற்றும் போலீஸ் அதிகாரியாக சன்னி பெரேரா  ஆகியோரும் நடிக்கிறார் . 
 
மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறது . 
 
படப்பிடிப்பு சென்னை, மலேசியா மற்றும் இலங்கையில் சீதையை சிறைவைத்த ராவண கோட்டை ஆகிய இடங்களில் நடக்கிறது 
 
ஒளிப்பதிவு -மாட்ஸ் 
இசை — கோலி சோடா சண்டி வீரன் , கடுகு படங்களுக்கு இசை அமைத்த அருணகிரி 
 
பாடல்கள் – அருணபாரதி 
எடிட்டிங் – மைனா , கும்கி , தொடரி படங்களின் எடிட்டரான எல் கே வி தாஸ் 
 
சண்டை- எஸ் ஆர் முருகன் 
நடனம் – ரேகா 
 
தயாரிப்பு நிர்வாகம் -எஸ்வி சந்துரு 
மக்கள் தொடர்பு – பெரு. துளசி. பழனிவேல் 
தயாரிப்பு – L.W. பிலிம்ஸ் திருமதி. மஞ்சுளா 
கதை, திரைக்கதை, வசனம் , டைரக்ஷன் — ஆர். குழந்தை ஏசு
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *