விஜய் நெஞ்சில நிக்கிற அஞ்சல பாடல் வெளியீடு

anjala 3

பிரபல திரைப்படச் சண்டை இயக்குனரும் தமிழார்வலருமான  சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயனும் முதல் தரமான சண்டை இயக்குனர்தான்.  எந்திரன் – 2 படத்துக்கே  சண்டை இயக்குனர் இவர்தான் . 

இது ஒரு பக்கம் இருக்க,  உள்குத்து உள்ளிட்ட பல படங்களில்  வில்லன் நடிகராகவும் சிறப்பாக இயங்கும் திலீப்,  இன்னொரு பக்கம் சினிமாவை உண்மையாக  நேசிக்கும் சிறந்த தயாரிப்பாளர் என்றும் பெயர் வாங்கி இருக்கிறார் . 
ஃபார்மர் புரடக்ஷன்ஸ்  (farmer productions – விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் . இந்த பேருக்கே ஒரு நெல் மணி  வணக்கம் திலீப் !) என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி,
anjala 4 
விமல் ,பசுபதி, நந்திதா , இயக்குனர்  ஆர்.வி.உதயகுமார்  ஆகியோர் நடிக்க தங்கம் சரவணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஞ்சல  என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்  திலீப் .
அஞ்சல என்பது சூப்பர் சுப்பராயனின் அம்மா பெயர் .  (அஞ்சல என்ற சொல் ஒரு பெண்ணின் பெயராக இருந்தாலும் நான் யாருக்கும் அஞ்சவில்லை என்ற பொருளும் வருகிறது . இரண்டு விசயமும் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் . பார்ப்போம் என்ன சொல்லப் போகிறார்கள் என்று )
anjala 1
கால மாற்றத்துக்கு ஏற்ப  தனது உருவத்தை மாற்றிக் கொண்டே வரும் ஒரு டீக்கடை, இரண்டு தலைமுறையாக அதை நடத்தும் ஒரு ஒரு அப்பா – மகன் , அந்த டீக்கடைக்கு வரும் மனிதர்கள் , அங்கு நடக்கும் சம்பவங்கள், அந்த ஊர் மனிதர்களின் வாழ்வை  அந்த டீக்கடை  பிரதிபலிக்கும் விதம்..
அந்த டீக்கடைக்கு ஏற்படும் ஆபத்து, அதனால் பாதிக்கப்படும் அந்த ஓனர் குடும்பம் , மண் வாசனை, லட்சிய வாழ்வு, உறவுகளின் பிணைப்பு … என்று படத்தின் கதை போவது படத்தில் முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்க்கும்போது  தெரிகிறது . 
anjala 5
இயக்குனர் தங்கம் சரவணன் கிராமத்து உணர்வுகளை சரியாக பிரதிபலித்து இருப்பார் என்ற நம்பிக்கையும் அவற்றைப் பார்க்கும்போது ஏற்படுகிறது . 
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன . வசனம் சிறப்பாக இருக்கிறது . மகாகவி பாரதியாரை எல்லாம் நீண்ட இடைவெளிக்கு பின்பு  தமிழ் சினிமாவில் அதுவும் முன்னோட்டத்திலேயே போட்டு ஞாபகப்படுத்தி வியக்க வைக்கிறார்கள்.
ஒரு திரைச் சண்டை இயக்குனராக தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் போட்டு,  படத்தைத்  தயாரித்து இருக்கிறார் திலீப் சுப்பராயன் . 
anjala 7
படத்தை அவ்ரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்  வாங்கி வெளியிடுகிறார் . 
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய எல்லோருமே திலீப் சுப்பராயனின் சினிமாவை நேசிக்கும் குணத்தை நேர்மையை உழைப்பை மற்றவர்களிடம் பழகும் விதத்தை நெகிழ்வோடு பாராட்டினார்கள். அது வழக்கமான — காதுகளைப் புளிக்க வைக்கும் பொய்யான புகழுரை இல்லை என்பது புரிந்தது .
படத்தில் நந்திதாவுக்கு தந்தையாக இயக்குனர் ஆர் வி உதயகுமார் நடித்து இருக்கிறார் . பசுபதி இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் . 
நிகழ்ச்சியில் பேசிய எடிட்டர் பிரவீன்
anjala 6 ” இயக்குனர் தங்கம் சரவணன் நல்ல கதையை  சொல்லி இருக்கார். நல்லா எடுத்தும் இருக்கார். . திலீப் சுப்பராயனின் டெடிகேஷன் அபாரமானது. ரொம்ப நல்ல படம் இது ” என்றார் . 
திலீப் சுப்பராயன் பேசும்போது ” என் பங்காளி விமல் இந்தப் படத்துக்குக் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . பசுபதியின் நடிப்பு இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்துக்குப் போய் இருக்கிறது .
கோபி சுந்தர் பாடலில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையில் அசத்தி இருக்கிறார் . குறித்த நேரத்தில் அவர் பின்னணி இசை கோர்த்துத் தரவில்லை என்று கோபத்தில் அவரைப் பார்க்கப் போனேன் . இசை கோர்ப்பு முடிந்த இரண்டு ரீல்களை போட்டுக் காட்டினார் . கோபம் பறந்து பிரமிப்பு வந்தது . 
anajala 9
படத்தின் பாடல்களை தனது அலுவலகத்தில் வெளியிட்டார் இளைய தளபதி விஜய் சார் . இடை விடாமல்  படப்பிடிப்பு  நடந்து  கொண்டிருந்ததால்  அவரிடம்  சென்று சி டி வெளியிட  முடியுமா என்று கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சரி என்பது போல தலையாட்டினார் .
நான் வந்து விட்டேன் . அதன்பிறகு மீண்டும் நினைவு படுத்த தயக்கமாக  இருந்தது . திடீர் என்று ஒரு நாள்  வாங்க என்றார் . போனோம் . உடனே வெளியிட்டுக் கொடுத்தார்  அவர் என்னிடம் அன்றுக் கூறிய  ஊக்க வார்த்தைகள்,  திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றி பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்  எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம் , ‘. ” என்றார் . 
திலீப்பின் மிக நெகிழ்ச்சியான பேச்சால்  நெஞ்சில் நிற்கிறது அஞ்சல பாடல் வெளியீட்டு விழா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →