இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்க,
 
அட்ட கத்தி தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி ,மயில் சாமி  நடிப்பில், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  ராஜ்குமார் இயக்கியுள்ள படம்  ‘அண்ணனுக்கு ஜே ‘ 
 
அர்ரோல் கொரளி இசை. .விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக  அறிமுகமாகி உள்ள இந்தப் படத்தின் எடிட்டிங்  G .B வெங்கடேஷ்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தினேஷ் “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
 
இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மஹிமா அருமையாக நடித்துள்ளார்.
 
இசையமைப்பாளர் அரோல் நன்றாக இசையமைத்துள்ளார் .  7 பாடல்கள்  .ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது.
 
இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் ” என்றார் .இயக்குனர்  ராஜ்குமார்  ” முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார் .
 
நடிகர் தினேஷ். அவரை முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். 
 
மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள்.
 
இந்தப் படத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்றார். 
இசைஅமைப்பாளர் அர்ரோல் கரோலி தன் பேச்சில்  ” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு
 
என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசைஅமைத்துள்ளேன்.
 
7 பாடல்களும் ஒவ்வொரு விதம் “என்றார் .
நடிகை மஹிமா நம்பியார் ” வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.
 
இந்தப் படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.
 
எனது சொந்த குரலில் பின்னணி பேசி இருக்கிறேன் ” என்றார் . 
இயக்குனர் வெற்றிமாறன்  ” நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த  நடிப்பை தந்துள்ளார்.படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.
 
.இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார்.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார். 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *