பாகமதி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ ஞானவேல் ராஜா, மற்றும் UV கிரியேஷன்ஸ் சார்பில்  வம்சி கிருஷ்ணா, உப்பலா பட்டி பிரமோத் தயாரிப்பில் , 

அனுஷ்கா, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத்,  நடிக்க , அசோக் ஜி என்பவரின் இயக்கத்தில்  வந்திருக்கும் படம் பாகமதி .  அனுமதிக்கலாமா,  பர்சில் கை வைக்க ? பேசலாம் .
 
நேர்மையான அமைச்சர் என்று பெயர் பெற்று இருக்கும் ஒருவரை (ஜெயராம்) வீழ்த்த விரும்பும் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் அவருக்கு எதிராக ஆதாரங்களை தேடுகிறார்கள் . 
 
தனது கணவனையே கொன்று விட்டு இப்போது ஜெயிலில் இருக்கும் என்ற சஞ்சலா என்ற – மேற்படி அமைச்சரின் முன்னாள் உதவியாளரான ஐ ஏ எஸ் அதிகாரியை ( அனுஷ்கா) ,
தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து தகவல் பெற முயல்கிறார் . கண்டிப்பான சி பி ஐ அதிகாரி (ஆஷா சரத்) . 
 
பந்தோபஸ்துக்கு வரும் போலீஸ் அதிகாரி , சஞ்சலாவின் கணவனின் அண்ணன் . அவருக்கு சஞ்சலா மேல் வஞ்சம் . 
 
விசாரணை யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக ஒரு காலத்தில் சிற்றரசியாக இருந்த பாகமதி என்ற பெண்ணின் கோட்டைக்குள் வைத்து விசாரணை செய்கிறார்கள் . 
 
இந்த நிலையில் பாகமதியாக மாறும் சஞ்சலா என்ன செய்தார்  என்பதே பாகமதி . 
 
அணைகட்டும் திட்டம் , அதற்காக கிராமங்களை துறக்கும் மக்கள் , அதில் தேவை இல்லாமல் சில கிராமங்களை சேர்த்து காலி செய்து அவற்றை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று பணம் கொழிக்க முயலும் அரசியல்வாதி, அதற்கு எதிராக போராடும் நேரமையான இளைஞன் (நாயகன் உன்னி முகுந்தன்) , அவனை விரும்பி காதலிக்கும் சஞ்சலா , 
 
ஒரு நிலையில் அவளே  அவனையே கொலை செய்வது ஏன் என்ற ஏரியா நல்லா இருக்கு . 
 
அதே போல மகளின் குறும்பான உத்தி மூலம் விசாரணையில்  சி பி ஐ அதிகாரி துப்பு துலக்கி வெற்றி பெறுவதும் ஒகே . 
 
பாகமதி அரண்மனைக்கான கலை இயக்கம் அருமை . 
 
மிக முக்கியமாக அயோக்கிய அமைச்சருக்கு அமித் ஷா போன்ற கெட்டப் கொடுத்து இருக்கும் இயக்குனருக்கு அன்பாக ஒரு ரசனை முத்தம் . சூப்பர் புரோ !
 
மற்றபடி… ம்ஹும் !அருந்ததி எப்படி அனுஷ்காவின் தோற்றப் பொருத்தத்துகாகவே ஓடியதோ அது போல பாகமதி பாத்திரத்தை அனுஷ்காவின் தோற்றம் மட்டும் காப்பாற்றும் என்று நம்பி இருக்கிறார்கள் . ஆனால் அய்யகோ . !
 
திரைக்கதை இப்படி தலையைச் சுற்றி மூக்கை தொடும் … ம்ஹும் ..முதுகு மற்றும் காலை எல்லாம் சுற்றி மூக்கை தொடும் விசயமாக இருந்தால் அனுஷ்காவின் சிற்ப எழில் முகம் மட்டும் என்னதான்  செய்ய முடியும் ?
 
பக்குவமும் நேர்த்தியும் இல்லாத பாத்திரப் படைப்புகள் , ஓவராக ஜவ்வு போல இழுக்கும் திரைக்கதை , புதிதாக எதுவும் இல்லாத காட்சிகள் , தேவைக்கும் மேல் பல காட்சிகள் நீளுவது , காரணமில்லாத டமார் டுமீர் சத்தங்கள் என்று பாகமதி நம்மை வெகுவாக சோதிக்கிறாள் . பாகமதி கதையை சஞ்சலா பயன்படுத்திக் கொண்டார் என்றால் திரைக்கதையில்  அப்படியே விட்றணும் . இல்லன்னா பாகமதியை களத்தில் இறக்கி , பாகமதியின் எதிரிதான் இந்த ஜென்மத்தில் நவீன வில்லன் என்று ஒரு லிங்க் கொடுத்து அதிர அடிக்கணும் . 
 
இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் எதுக்கு இந்த கிளைமாக்ஸ் கோமாளித்தனம் ?
 
பாகமதி ..  பாவமதி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *