”நேர்த்தியான பாகுபலி இரண்டாம் பாகம் ” — ராஜ மவுலி

baahu 4

பாகுபலி முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி பாகம் இரண்டு வரும் ஏப்ரல் 28 அன்று தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது .

இந்த நிலையில் பாகுபலி 2 தமிழ்ப் பதிப்பின்  பாடல் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஓய எம் சி ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தேற,

அதற்கும் முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .

நிகழ்வில் பாகுபலி பாகம் இரண்டின் முன்னோட்டம் திரையிடப்பட்டது . அழகியல், ஆக்ஷன், செண்டிமெண்ட், பிரம்மண்டம்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை தமன்னா “பாகுபலி படம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று . இந்த இரண்டு பாகங்களில் நடித்தது என் வாழ்வில் முக்கியமான நிகழ்வு .

baahu 1

மும்பையில் உள்ள என் தோழிகள் எல்லாம் பாகுபலியாக நடித்துள்ள பிரபாஸின் தீவிர ரசிகர்களாக ஆகி விட்டார்கள் ” என்றார் .

அனுஷ்கா தன் பேச்சில் ” முதல் பாகத்தில் என் கதாபாத்திரம் கதைக்கு அடிப்படையாக  இருந்தது . இந்த இரண்டாம் பாகத்தில் என் பங்கு விரிவாக இருக்கும் .

பாகுபலி முடிந்து விட்டது என்ற நினைவே வருத்தமாக இருக்கிறது ” என்றார் .

படத்தின் தயாரிப்பாளர் ஷோபி பேசும்போது ” பாகுபலி முதல் பாகத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த அதரவு மறக்க முடியாதது . அதே ஆதரவை இந்த இரண்டாம் பாகத்துக்கும் தர வேண்டும் ” என்றார்

நாசர் தன் பேச்சில் ” படத்தில் பிஜில தேவா மற்றும் பிங்களத் தேவன் என்ற என் கேரக்டரை இயக்குனர் ராஜ மவுலி விவரித்த விதம் மறக்க முடியாத ஒன்று .

baahu 5

அதாவது படத்தின் கதைப்படி நானும் அரசுரிமைக்கு உரியவன் . என்னிடம் இருந்துதான் அது பாகுபலிக்கு போய் இருக்கும் .

எனவே கதை சொல்லும்போது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சொல்லி ‘அது மட்டும் நடக்காவிட்டால் நீங்கதான் பாகுபலி’ என்று என்னிடம் ராஜாமவுலி சொன்னார் . அதுதான் என்னை ஆரவத்தோடு நடிக்க வைத்தது ” என்றார் .

முத்தாய்ப்பகப் பேசிய ராஜ மவுலி ” பாகுபலி பாகம் ஒன்றை தமிழில் கொண்டு வரும்போது ஒரு ஒரு டப்பிங் படத்துக்கு அப்பாற்பட்டு, 

நேரடித் தமிழ்ப் படமாக வர வேண்டும் என்பதையும் மீறி அதன் மொழியில் மிக்க கவனமாக் இருந்தோம் .

baahu 2

மிகப் பழைய தமிழை பயன்படுத்தினால் புரியாமல் போய் விடும். நவீன தமிழ் என்றால் பொருத்தமாக இருக்காது . எனவே வசனகர்த்தா மதன் கார்க்கி, சத்யராஜ் சார்

எல்லாரும் உட்கார்ந்து மொழியை முடீவு செய்தோம் . காளகேய மொழி என்று ஒரு தனி மொழியும் எழுதினோம்
அதை விட நேர்த்தியாக இந்த இரண்டாவது பாகம் தமிழில் இருக்கும் .

பாகுபலி கேரக்டருக்கு பிரபாசை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை .

தமிழின் வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வனை நான் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள் . ஆங்கிலத்தில் அதைப் படித்தபோதே ஆடிப் போய்விட்டேன் .

baahu 3

ஆங்கிலப் பதிப்பு என்பது ஒரிஜினலில் முப்பது சதவீதம்தான் இருக்கும் . அதுவே என்னை அப்படி மிரட்டியது என்றால் ஒரிஜினல் எப்படி இருக்கும் ?

மணிரத்னம் கமல் சார் போன்றவர்களே முயன்று முடியாது என்று விட்டு விட்ட காவியம் அது . என்னால் மட்டும் எப்படி முடியும்? எனவே என்னாலும் பொன்னியின் செல்வனை எடுக்க முடியாது .

பாகுபலி போல ஒரு வரலாற்றுப் படம் என்றால் நான் மகாபாரதத்தை எடுப்பேன் ” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *