பலூன் @ விமர்சனம்

’70mm Entertainment’ நிறுவனம் தயாரிக்க, ”’Auraa Cinemas’ தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய, இரண்டு  கதாபாத்திரங்களில்  ஜெய் நடிக்க,  அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடிக்க ,  யோகி பாபு , மாஸ்டர் ரிஷி , நாகி நீடு ஆகியோரின் உடன் நடிப்பில்,  

சினிஷ் இயக்கி இருக்கும் படம் பலூன் . உயரப் பறக்குமா ? பார்க்கலாம் . 

தரமான படங்களை படைக்கத் துடிக்கும் அறிமுக இயக்குன இளைஞன் ஜீவா (ஜெய் ) , தன் மனைவி  ஜாக்குலின் (அஞ்சலி)வேலைக்குப் போய் சம்பாதித்தும், 
 
பணம்  போதாத நிலையில் கூட்டுக் குடும்பமாக உள்ள அண்ணனின்  (சுப்பு பஞ்சு)  பொருளாதாரத்தில் வாழ்கிறான் . 
 
அதனால் அண்ணன் மற்றும் உறவினர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகிறான் . 
இந்த நிலையில் ரொம்ப நம்பிக்கை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் , இவன் சொல்லும் கதை நன்றாக இருந்தாலும் கூட ,
 
கதை பேசும் சமூகப் பிரச்னைகளால்   அந்தப் படத்தை எடுக்கத் தயங்குகிறார் . 
 
அதற்குக் காரணம் யாராவது சினிமா எடுக்க ஆரம்பித்தாலே அதில் புகுந்து பிரச்னை செய்து பணம் பார்க்க நினைக்கும் சாதி அமைப்புகள் . 
 
எனவே ‘பேசாம ஏதாவது பேய்ப் படம் பண்ணு . அதற்குக் கதை கொடு;’  என்று தயாரிப்பாளர் சொல்ல , அதே முடிவுக்கு வருகிறான் ஜீவா  
 
 அதே நேரம் கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருவதால் மனைவி ஜாக்குலினுக்கும்  விடுமுறை  கிடைக்க , 
 
ஜாக்குலின்  , அண்ணன் மகன் பப்பு (மாஸ்டர் ரிஷி) , இரண்டு உதவி இயக்குன நண்பர்கள் (யோகி பாபு, கார்த்திக்) ஆகியோருடன் சேர்ந்து கதை எழுத ஊட்டிக்குப் போகிறான் . 
அங்கே இருக்கும் ஒரு பேய் வீடு பற்றி அறிகிறான் . அந்த வீட்டில் பல காலம் முன்பு  சார்லி என்ற,  பலூன்  விற்பவன்  ( இரண்டாவது ஜெய் ) இருந்ததாகவும் ,
 
அவன் செண்பகவல்லி என்ற பெண்ணை ( ஜனனி ) காதலித்ததாகவும் தவிர ஒரு சிறுமியை ( பேபி மோனிகா) தத்து எடுத்து வளர்த்ததாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப் பட்டதும்  தெரிகிறது . 
 
அவர்கள் அங்கே பேயாக இருப்பதும் சொல்லப் படுகிறது . 
 
இந்த நிலையில் செத்துப் போன சிறுமியின் ஆவி பப்புவை பிடிகிறது . செண்பக வல்லியின் ஆவி ஜாக்குலினைப் பிடிக்கிறது. 
 
தன் கணவன் சார்லியைப் பார்த்தால்தான் போவேன் என்று செண்பகவல்லியின் ஆவி சொல்ல , அது முடியாத நிலை .
காரணம் சார்லி வர வேண்டுமானால் ஜீவா சாக வேண்டும் . ஏனெனில் சார்லியின் மறு பிறப்புதான் ஜீவா  என்ற திடுக்கிடும் உண்மை வெளிப்படுகிறது . 
 
இப்படி ஒரு அதிர்ச்சிக்குப் பிறகு நடந்தது என்ன என்பதே இந்த பலூன் . 
 
டைட்டில் போடும் விதத்திலேயே அசத்த ஆரம்பித்து விடுகிறார் இயக்குனர் . 
 
படம் முழுக்க  அழகான ஷாட்கள் , சிறப்பான ஃபிரேமிங் ,அழுத்தமான  படமாக்கல் என்று , கைவசப்பட்ட திரைக்கதையை சிந்தாமல் சிதறாமல் படமாக்கி மனம் கவர்கிறார்  இயக்குனர் சினிஷ். 
 
இவருக்குள் ஒரு நல்ல பிலிம் மேக்கர் இருப்பதை உணர முடிகிறது . வளர வாழ்த்துகள் . 
 
டைட்டிலில் டைரக்ஷன்  கார்டுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் பெயரைப் போட்டு பெருமை தந்திருக்கிறார் இயக்குனர் . அதற்கேற்ப பின்னணி இசையால் பெரும் பலம் சேர்த்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா . 
 
மர்மம்., வன்மம் , அவலம், எளிமை,  இளமை , நெகிழ்வு , அமானுஷ்யம்  என்று அத்தனை உணர்வுகளையும் தன் இசையால் மொழி பெயர்க்கிறார் யுவன் . ஒலி வடிவமைப்பும் மிக சிறப்பு 
 
சரவணனின் ஒளிப்பதிவு நேசத்துக்குரியது . இருள் ஒளி ஆளுமை ,  வண்ணப் பயன்பாடு, துல்லியம் என்று எல்லா வகைகளிலும் ஸ்கோர் செய்யும் ஒளிப்பதிவு . 
 
 
ரூபனின் படத்தொகுப்பும் சிறப்பு 
 
இட்டை வேடங்களை தனக்கே உரிய பாணியில் ஜஸ்ட் லைக் தட் செய்திருக்கிறார் ஜெய் . 
அஞ்சலி சிறப்பாக நடித்துள்ளார் . ஒரு இடைவேளைக்குப் பிறகு அவரிடம் இருந்து நல்ல குரல் நடிப்பையும் பார்க்க முடிகிறது . 
 
யோகி பாபுவின் காமெடி பன்ச்கள் பாதிக்குப் பாதி தேறுவதால் படத்தில் காமெடி கலகலப்புக்கு பஞ்சமில்லை .
 
பப்புவாக நடித்து இருக்கும் மாஸ்டர் ரிஷி வாவ் … துறுதுறுப்பாய் அட்டகாசமாய் உற்சாகமாய், மிக சிறப்பாக நடித்துள்ளான் . அதுவும் எல்லோரையும் கலாய்க்கும் யோகி பாபுவையே இவன் கலாய்க்கும் காட்சிகள் செம செம . 
 
இவற்றுக்கும் மேலாக டைரக்டரும் தன் பங்குக்கு வசன காமெடியால் கவர்கிறார் . உதாரணம் … “கமல் படத்துக்கு பூஜை போட்டுட்டாரு . வா அங்க போய் பிரச்னை பண்ணுவோம் “
” பூஜைதான் போட்டு இருக்காரு . அங்க போய் என்ன பிரச்னை பண்ண முடியும்?” 
“அவர் பூஜை போட்டாலே பண்ணலாம் யா .. “
 
ஜனனி அய்யர் நைஸ் . 
 
உதவி இயக்குனராக வரும், படத்தின் நிஜ அசோசியேட் இயக்குனர் கார்த்திக் யோகியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் . 
 
இதுவரை பல்வேறு பேய்ப் படங்களில் நாம் பார்த்த பல காட்சிகளையும் இந்தப் படத்தில் இன்னும் ஒரு முறை  அழகான மேக்கிங்கில் கலர்ஃபுல்லாக  பார்க்க முடிகிறது 
 
நெகிழ்வான கிளைமாக்சுக்கு பிறகு வரும் அந்த கூடுதல் கிளைமாக்ஸ் … ஓர் அடடே சுவாரஸ்யம் . 
 
அதன் முடிவு ..  ஹா ஹா ஹா ….
 
சினிமாக்காரர்களை எதிர்த்து அநியாயமாக பிரச்னை பண்ணி பணமோ புகழோ சம்பாதிக்க நினைப்பவர்களின் மீது.. இயக்குனருக்குள்ள பேய்த்தனமான கொலை வெறியைக் காட்டுகிறது . 
 
மொத்தத்தில்  பலூன்….கண்கள் விரிய அண்ணாந்து பார்க்கச் சொல்லும் கலர்ஃபுல் ஜாலம் .
மகுடம் சூடும் கலைஞர்கள் 
————————————————
சினிஷ், யுவன் சங்கர் ராஜா , சரவணன் , மாஸ்டர்  ரிஷி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *