போகன் – கலக்கும் கதை அசத்தும் பாடல்கள்

bok 7

பிப்ரவரி 2 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் ஒன்றாம் தேதி மதியம் சூட்டோடு சூடாக பத்த்ரிக்கையாலர்களை சந்தித்து  போகன் படக் குழு .

நிகழ்வில் நான்கு  பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் . ஜெயம் ரவி , அரவிந்த் சுவாமி , ஹன்சிகா மூவரும் அசத்தி இருக்கும் அந்த முன்னோட்டம் தவிர

 மாஸ் பாடலான டமாலு டுமீலு விசில் பறக்கும் பாடலாக இருந்தது . போகன் போகன் பாடல் கவர்ச்சி ஆட்டம் வாராய் பாடலில் காட்சிகள் அற்புதமாக இருந்தன

செந்தூரா பாடல் மெட்டு, இசை , பாடகியின் இசை , காட்சி அமைப்பு எல்லாவற்றிலும் மனத்தைக் கொள்ளையடிக்கும் முழுமையான பாடலாக ஜொலித்தது.

bok 22

தவிர படத்தின் மிக முக்கியமான இடைவேளைக் காட்சியை திரையிட்டு மிரள வைத்தார்கள் .  அதாவது ….

பழனி மலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யும் குழுவில் இருக்கும் அரவிந்தசாமி கையில் ஓர் அற்புதமான விஷயம் சிக்குகிறது .

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழனி முருகரின் சிலையை நவபாஷாணத்தில் செய்த சித்தரான போகர் எழுதி வைத்த கூடு பாயும் வித்தை பற்றிய விளக்க உரைதான் அது .

அதன் படி  யார் ஆன்மாவையும் தன் உடம்பில் ஏற்றிக் கொண்டு தன் ஆன்மாவை அவர்கள் உடம்பில் செலுத்தி அவர்களை வைத்தே  தான் நினைக்கும் எல்லாவற்றையும் செய்ய அரவிந்தசாமியால் முடியும் .

bok 2

போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவியின்  தந்தை உடம்பில் அந்த வித்தைப்படி நுழையும்  அரவிந்த்சாமி அந்த தந்தையை வைத்தே பல கோடி கொள்ளை அடிக்கிறார் .

இப்படி பலரின் உடம்புக்குள்ளும் போய் கொள்ளை அடித்து சுக போகத்தில் திளைக்கும் அரவிந்த் சாமிக்கு நண்பராக நடித்து கைது அவரை  செய்கிறார் ஜெயம் ரவி .

ஜெயிலில் தன்னை அடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை இன்னொரு போலீஸ் உடம்புக்குள் நுழைந்து கொல்கிறார் அரவிந்த சாமி .

bok 3

அதன் உச்சமாக ஜெயம் ரவியின் உடம்புக்குள்ளேயே நுழையும் அரவிந்த் சாமி , ஜெயம் ரவியின் குடும்பம் , காதலி, நண்பர்கள் , போலீஸ் துறை இவற்றை துவம்சம் செய்ய முயல … இடைவேளை .

நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் “நல்ல கதை , நல்ல படைப்பாளிகள் , நல்ல டெக்னீஷியன்கள் சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளனர்  

bok 33

எங்களது தேவி படம் வெற்றி பெற்றது போலவே இதுவும் ஜெயிக்கும் ” என்றார் .

 நடிகர் வருண்  பேசும்போது ” ஒரு இரவில் படத்துக்கு பிறகு வினோதகன்  படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.

இந்த நிலையில்  இவ்வளவு பெரிய போகன் படத்துல எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த என் மாமா ஐசரி கணேஷ், பிரபு தேவா சார், ஜெயம் ரவி சார், டைரக்டர லக்ஷ்மன் சார்..

bok 9

எல்லாருக்கும் நன்றி ” என்றார் .

இயக்குனர் லக்ஷமன்  தன் பேச்சில் ”  ஜெயம் ரவி சார் — ஹன்சிகா நடிப்பில் நான் இயக்கிய  ரோமியோ ஜூலியட் படத்தை பிரவு தேவா மாஸ்டர் , கணேஷ் சார் இருவரும் அந்தப் படத்தைப்  பார்க்க விரும்பினார்கள் .

பார்த்த உடன் பாராட்டி விட்டு  என்னிடம் கதை கேட்டார் பிரபு தேவா . ஜெயம் ரவியே – ஹன்சிகா ஜோடியே மீண்டும் என்று முடிவானது . நான்கு கதைகள் சொன்னேன் .

ஜெயம் ரவி, பிரபு தேவா ,இருவருக்கும் பிடித்த கதை இது. இன்னொரு ஹீரோ கேரக்டருக்கு அரவிந்த் சாமியை சொன்னது ஜெயம் ரவி சார்தான் . கதை கேட்ட அரவிந்த சாமி பிடித்தால் ஒத்துக் கொண்டார் .

bok2

இவர்கள் இருவர் மட்டுமல்லாது ஹன்சிகாவும் படத்தில் கலக்கி இருக்கிறார் . மூன்று பேருமே அடிப்படையில் சேட்டைக்கார ஆட்கள் . படத்துக்கு அது சிறப்பாக பயன்பட்டது

யாருடைய படமா இருந்தாலும் ‘இந்தப் படத்தை ரசிகர்கள் 120 கொடுத்து ஏன் பார்க்கணும் . என்ன அவசியம்/’னு எனக்குள்ள ஒரு கேள்வியை நான் வைப்பேன் .

என் படத்துக்கும் அந்த கேள்வியை வச்சேன் . இது எல்லாரையும் திருப்திப் படுத்தும் படம்னு உணர்ந்தேன். உங்க எல்லாருக்கும் படம் பிடிக்கும் ” என்றார் .

bok 8

“இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான ஒன்று . அவ்வளவு சிறப்பாக படம் வந்துள்ளது .  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் ஹன்சிகா

ஐசரி கணேஷ் பேசும்போது “படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர் . குறிப்பாக ஹன்சிகா மிக சிறப்பாக நடித்துள்ளார் . லக்ஷ்மன் சிறப்பாக இயக்கி உள்ளார் .

எங்களது தேவி படத்தை வெற்றி  பெற வைத்தது போல இந்தப் படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் .

எனது சகோதரி மகன் வருண் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் .

bok 5

அவருக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் ” என்றார் .

ஜெயம் ரவி தன் பேச்சில் ” ரோமியோ ஜூலியட் படம் முடிந்த பிறகு லக்ஷம்னை அழைத்து என்னை விட பெரிய ஹீரோவோடு போய் படம் பண்ணுங்க என்றேன் . அவர் என்னிடமே வந்தார் .

பிரபு தேவா மாஸ்டரும் , ஐசரி கணேஷ் சாரும் என்னை வைத்து படம் பண்ண விரும்பினார்கள் . இருவரும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் .

இந்த நிலையில் ரோமியோ ஜூலியட் படம் படம் பார்த்த பிரபு தேவா மாஸ்டரும் , ஐசரி கணேஷ் சாரும் லக்ஷ்மன் இயக்கத்தில் படம் பண்ண விரும்பினார்கள்.

bok 4

லக்ஷ்மனிடம் நான் கதை கேட்டேன் . அவர் சில கதைகள் சொன்னார். எனக்கு அது திருப்தியாக இல்லை அப்புறம் இந்த படத்தின் கதையை சொன்னார் .இதை பண்ணலாமே என்றபோது

‘ இதை  ஐந்தாவது படமாக பண்ண வைத்துள்ளேன் . இரண்டாவது படமா வேணாம் சார்’ என்றார் . நான்தான் ‘இதை பண்ணினாதான் மீண்டும் ஜெயிக்க முடியும்’ என்று சொல்லி பண்ண வைத்தேன் .

இந்தப் படத்துக்கு பிறகு அவர் வெளியே பொய் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணனும்.

ஹன்சிகாவுக்கும் எனக்கும் இது மூணாவது படம் . இனி ஹன்சிகாவும் என்னை விட பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணனும் .

bok 11

இந்தப் படத்தில் லவ், ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி கிளாமர் திரில், அமானுஷ்யம், புராணம், என்று எல்லாமும் கலந்து இருக்கு . கொடுக்கற டிக்கட் காசுக்கு தகுதியா இருக்கும் ” என்றார்

நிறைவாகப் பேசிய பிரபுதேவா ” டைரக்ட் பண்றது , நடிக்கறது, டான்ஸ் இது எல்லாத்தையும் விட புரடியூஸ் பண்றது ஈசியா இருக்கு . ஏன்னா பணம் கணேஷ் சார் பணம் . கம்பெனி பேரு என் பேர்ல .

அதான் ரொம்ப ஈசியா இருக்கு . ஜஸ்ட் இந்த கதை ஒகே ன்னு கருவை கேட்டு சம்மதம் சொன்னதோடு சரி .மத்தபடி இது இந்த ரவி அரவிந்த் சாமி , லக்ஷமன் இந்த யூனிட்டோட வெற்றி .

மின்சாரக் கனவுல பார்த்த அந்த அரவிந்த் சாமியா இதுன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு . அப்படி மாறி வேற ஒரு ஆளா ஜொலிக்கிறார் அரவிந்த் சாமி ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *