ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிலம்பரசன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் , ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ,

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, தியாக ராஜன்  நடிப்பில் மணிரத்னம் தயாரித்து  சிவா ஆனந்துடன் எழுதி , மற்றும்   இயக்கி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா !

கண்களை விரிய வைத்த வண்ண ஒளிக்கற்றைக் (லேசர்)  காட்சியில்  படத்தின் ஒரு பாடலை பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் ஏ ஆர் ரகுமான் . 
படத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பகுதி மேடையில் இசைக்கப் பட ,  படத்தில் நடித்தவர்கள் இடையிடையே மேடைக்கு வந்து பேசினார்கள். 
 
“மணிரத்னம் நடித்த எட்டு படங்களில் நான் நடித்து விட்டேன் என்று எல்லோரும் பொறாமையும் ஆச்சர்யமுமாக பார்க்கிறார்கள் பேசுகிறார்கள்
 
ஆனால் பனிரெண்டு படங்களில் நான் இல்லையே என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு ” என்றார் அரவிந்த்சாமி . 
 
அதிதி ராவ் கூட  தமிழில்  பேச ஆரம்பித்தார் .  
ஆனால் அதை முயன்று வம்படியாக ஆங்கிலத்தில் பேசி மாற்றினார் நிகழ்ச்சியை தொகுக்க வந்த சின்மயி. .
 
வைரமுத்து அழகுத் தமிழில் அற்புதமாக ஓர் உரையாற்றி எல்லோரும் அந்த உணர்வில் இருந்த போது கூட, 
 
திட்டமிட்டு ஆங்கிலத்தில் பேசியபோது
சின்மயியின் உணர்வில் தெரிந்த தமிழுக்கு எதிரான வன்மம் கேவலமானது . 
 
தமிழில் பாடி பேசி பிழைத்துக் கொண்டு எப்படி  இவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய ஆச்சர்யம் !
 
நன்றி சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை . என்று சொல்லி விட்டு ,
சின்மயி கூப்பிடக் கூப்பிட ஓடினார் சிம்பு . 
 
மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்தது பெரிய வாய்ப்பு என்றார்கள் அருண் விஜய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும் . 
 
வைரமுத்து தனது பேச்சில் , ” படத்தின் தலைப்பு அற்புதமானது . இதை உச்சரிக்கும் போது ச் என்ற எழுத்துக்கு , அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும் . அங்கேதான் தமிழ் அழுத்தமாக உட்கார்ந்து இருக்கிறது 
 
இத்தனை வருடமாக மணி ரத்னம் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறார் என்றால் அவருக்குள் இருக்கும் கலை உணர்வுதான் காரணம் . 
 
மணிரத்னம் தயாரித்த தயாரிப்புகளிலேயே மிகச் சிறந்த தயாரிப்பு ஏ ஆர் ரகுமான்தான் . 
நான் மணி ரத்னம் ஏ ஆர் ரகுமான் என்ற இந்த முக் கூட்டணியை உருவாகிய இயக்குனர் சிகரம் பாலச் சந்தரை நாங்கள் மறக்க முடியாது .
 
இந்தப் படத்தில் நான் எழுதிய ஒரு கவிதைக்கு மெட்டுப் போட்டு பாடல் ஆக்கி இருக்கிறார்கள் .
 
பாரதியார், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை இவர்களுக்கு பிறகு கவிதை பாடலாக்கப் பட்ட பெருமையை எனக்கும் கொடுத்து இருக்கிறார்கள். அதற்காக நன்றி   ” என்றார் . 
மூவரும் உருவாக்கிய பாடல்களில் அவரவர்க்கு பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வைரமுத்து சொன்ன பதில் ,
 
” உயிரே படத்தில் இடம் பெற்ற உயிரே உயிரே பாடல்தான் . எனது பாடல்களிலேயே சிறப்பாக படமாக்கப்பட்ட பாடல் என்று நான் நேசிப்பவை மூன்று பாடல்கள் .
பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுகளே …
 
கே. பாலச்சந்தரின் புன்னகை மன்னனில் இடம் பெற்ற ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் … பிறகு இந்த உயிரே உயிரே பாடல்” என்றார் . 
மணிரத்னம் எனக்குப் பிடித்த பாடல்,  ”தமிழா தமிழா….. ” என்றார் .  உடனே அரங்கில் சிலரிடம் இருந்து கைதட்டல் வர , அந்த திசையை கூர்ந்து கவனித்தார் மணிரத்னம் . 
 
ஏ ஆர் ரகுமான் சொன்ன பாடல் .. ” கண்ணாளனே .. எனது கண்ணை .. ” பாடல் என்றார் . 
அது பற்றி பேசிய வைரமுத்து , ” கண்ணாளனே பாடல்  முழுக்க எழுதி விட்டேன் . ஆனால் முதல் வார்த்தை அமையவில்லை .
 
என் ஜீவனே .. என் நண்பனே .. என் அன்பனே என்று என்ன சொல்லியும் மணிரத்னம் திருப்தி அடையவில்லை . கடைசியில் கொஞ்சம் பழசா சொல்லட்டுமா என்றேன் . சொல்லுங்க என்றார் மணி ரத்னம்  . கண்ணாளனே என்றேன் . இதான் வேணும் என்றார்  மணிரத்னம் 
 
அது மட்டுமல்ல …
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏ ஆர் ரகுமானின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து போடச் சொல்லி விரும்பிக் கேட்டு விட்டுப் போன பாடல் அது ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *