சென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்

விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் புரடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் பிஜு இருவரும் எழுத, பிஜுவின் இயக்கத்தில் பிரவீன் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த மாரிமுத்து , இயக்குனர் பிஜு மற்றும் பலர் நடித்து வந்திருக்கும் படம் சென்னை பழனி மார்ஸ்.

மனதின் சக்தியை பலப்படுத்தி ஒன்று கூட்டுவதன் மூலம் செவ்வாய் கிரகத்துக்குப் போக முயலும் அப்பாவையும் அவரது இருபது வருட முயற்சியின் தோல்வியையும் பார்த்த பின்னரும் அதே முயற்சியில் இறங்குகிறான் மகன். 
 
செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் அதிகம் படுகிற பழனி மலையில் நின்று , பூமிக்கு நெருக்கமாக செவ்வாய் வருகிற ஒரு குறிப்பிட்ட நாளில் முயன்றால் செவ்வாய் கிரகத்துக்கு போய் விடலாம் என்பது அப்பா மற்றும் அவனது முடிவு. 
 
தவிர அவனுக்கு போதை பவுடர் பயன்படுத்தும் பழக்கமும் உண்டு . 
 
இதனால் ஆனந்த் என்ற நபரின் கொலை விவகாரத்தில் அவனை போலீஸ் கைது செய்கிறது. கைது செய்த இன்ஸ்பெக்டருக்கும் அவரோடு பணி செய்யும் உதவி போலீஸ் அதிகாரியின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு 
 
போதை விஞ்ஞானி சக போதை நண்பனோடு போலீசிடம் இருந்து தப்பித்து,  செவ்வாய் கிரகம் போய்ச் சேருவதற்காக பழனிக்கு கிளம்புகிறான் . 
 
இடையில் போதைப் பொருள் கடத்தும் ஒரு கும்பல்,  ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து திடீரென வேலை நீக்கம் செய்யப் பட்டதால் தற்கொலைக்கு முயலும் ஒரு நபர், ஆகியோரை இவர்கள் எதிர்கொள்கிறார்கள் . 
 
போலீசும் துரத்துகிறது . 
 
விஞ்ஞானி செவ்வாய் கிரகம் போனானா இல்லையா என்பதே இந்தப் படம் . பெண்களே இல்லாத படம் .
 
வித்தியாசமான கதை முயன்றதற்காக பிஜுவை மனமாரப் பாராட்டலாம் . ஆரம்பக் காட்சிகள் சிறப்பு . 
 
ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஓவர் ஆக்டிங், அசந்தர்ப்ப சிரிப்புகள், காட்டுக் கூச்சல் , செயற்கையான நாடகத்தனமான படமாக்கல் என்று மண்டை காய வைக்கிறார்கள் . 
 
சரி அவர்கள்தான் அப்படி என்றால் போதைப் பொருள் பயன்படுத்தாத கேரக்டர்களும் அப்படியே ஓவராக பேசுகிறார்கள் . சிரித்தால் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் . நீள நீளத்துக்கு காட்சிகள் நீள்கின்றன . திரைக்கதையும் போதையில் தறிகெட்டு தள்ளாடுகிறது. 
 
கிளைமாக்ஸ் நெகிழ்ந்து கனக்க வைக்கிறது . 
 
போதை மருந்து,  எக்சென்ட்ரிக் எச்சில்கள் , இவற்றை எல்லாம் தூக்கி விட்டு சீரியசாகவே ஒரு லோக்கல் விஞ்ஞானி அவனது செவ்வாய்  பயண முயற்சிகள் , உள்ளூர் கேலி கிண்டல்கள்,
 
அவனது  யதார்த்த வாழ்க்கை பிரச்னைகள் அவனுக்கு ஆதரவு இல்லாத நிலை என்று சின்சியராக திரைக்கதை அமைத்து நாடகத்தனம் இல்லாமல் படத்தை உருவாக்கி இதே கிளைமாக்ஸ் கொடுத்து இருந்தால் படம் வெற்றி கிரகத்துக்கு போயிருக்கும் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *