செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணி

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் , கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.

விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

“சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும்” என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி. “கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், எங்களது  கால்பந்து அணியும் சிறப்பாக விளையாடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது.

பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமையான விஷயம்” என்றார் பைஜு.

“நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணிக்காக விளையாடுவதில் பெருமை  “என்றார் மிஷா கோசல்.“விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.

பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள்.

வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன. இப்போது மக்களிடம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாங்கள் சென்னை மதுரை கோவையில் 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் திறமையாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம்” என்றார் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் ஹேமச்சந்திரன். 

“1968ல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம்.

ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.எங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள் “என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன். 

விழாவில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *