தேவ்@ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார்  தயாரிப்பில்  கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ஆர் ஜே விக்னேஷ் , அம்ருதா நடிப்பில் இளம் இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கி இருக்கும் படம் தேவ். ‘வாவ்’ ஆ ? ‘ஆவ்’ ஆ ? பேசலாம் .

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டு இருக்கும் நாயகன் பனிப் புயலில் சிக்கி உயிராபத்தில் மயக்கத்துக்கு போக , அவனின் நினைவுகளாக துவங்குகிறது படம் .

நகைச்சுவையாளர்கள் சங்கத்தின் புகழ்பெற்ற பேச்சாளனான ஒருவனின் பேச்சின் ஊடே , உயிராபத்தில் சிக்கிய இளைஞன் தேவ்|(கார்த்தி)  என்பவனின் காதல் கதை சொல்லப் படுகிறது.

 கொஞ்ச பணமும் நிறைய நிம்மதியும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழும் முறையுமே சிறப்பான வாழ்வு என்று எண்ணும் சாகசவியல் புகைப்படக் கலைஞனான தேவ் ,

விக்கி ( ஆர் ஜே விக்னேஷ்) நிஷா (அம்ருதா சீனிவாசன்) என்ற இரண்டு இணை பிரியா நண்பர்களுடன்தான் எங்கும் எப்போதும்  இருப்பான் .பணமும் பாசமும புரிதலும் உள்ளவர் தேவின் அப்பா ( பிரகாஷ்ராஜ்).

 தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகும் நண்பன் விக்கி , தேவ்- ஐ  விட்டுப் பிரிய எண்ணி , ‘இவனை காதலில் தள்ளி விட்டால் நாம் தப்பிக்கலாம்’ என்று முடிவு செய்து முக நூல் மூலம் , மேக்னா ( ரகுல் பிரீத் சிங்) என்ற அழகிய இளம் பெண்ணை அறிமுகப் படுத்துகிறான் . 
தேவுக்கும் மேக்னா மீது காதல் வருகிறது .

 ஆனால் சிறுவயதில் அப்பாவின் கொடுமைக்கு அம்மாவோடு (ரம்யா கிருஷ்ணன்)  சேர்ந்து ஆளாகி,  பின்னர் அப்பாவால் கை விடப்பட்டு அம்மாவோடு இணைந்து போராடி உயர்ந்து,  இப்போது அமெரிக்காவில் மாபெரும் தொழில் அதிபராக இருக்கும் மேக்னாவுக்கு , ஆண்கள் என்றாலே வெறுப்பு .

 எனவே ஆரம்பத்தில்  அவமானப் படுத்தி புறக்கணிக்கும் மேக்னா ஒரு நிலையில் காதலை ஏற்கிறாள் .

 ஒரு பக்கம் அதீத காதல், இன்னொரு பக்கம் அவநம்பிக்கை மற்றும்  தனித் தன்மையை உணராதிருத்தல்  ஆகிய காரணங்களால் சண்டைகள் வந்து , ஒரு நிலையில், பிரச்னை பெரிதாகிறது . 

அவனை புறக்கணித்து மேக்னா அமெரிக்க சென்று விட , மனதாலும் உடலாலும் விபத்தில் சிக்கும் தேவ் , ஒரு வழியாக பிழைத்து , விரக்தியின் உச்சிக்கு போய் மீண்டு , 

தனது ஆசைகளில் ஒன்றான எவரெஸ்டில் ஏறும் ஆசையை  நிறைவேற்றிக் கொள்ள எண்ணி ,  ஹில்லாரி ஸ்டெப் என்ற இடத்தை நெருங்கிய நிலையில் பனிப் புயலில் சிக்கி …. ஓவர் டூ முதல் காட்சி !

தேவ் பிழைத்தானா ? அவனது காதல் பிழைத்ததா ? அப்புறம் யாருக்கு எதற்கு என்ன ஆனது? என்பதே இந்த தேவ் .

இளமையும் இதயமும் பொங்கி வழியும்  காதல் படம் !

படமாக்கல் ,ஃ பிரேமிங் , நடிக நடிகையரிடம் வேலை வாங்குதல் இவற்றில் அசத்தி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ரஜத் ரவி சங்கர். தமிழ் சினிமாவுக்கு  மேலும் ஒரு நல்ல தொழில் நுட்பக் கலைஞர் கிடைத்து இருக்கிறார். வாழ்த்துகள் .

வேல்ராஜின் ஒளிப்பதிவு .. அடடா .. கண்களைக் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறது . சூழலின் உணர்வை அப்படியே கண்கள் வழியே இதயத்துக்கு கடத்துகிறது . சிறப்பு .

தனது டியூன்களையே  ஆங்காங்கே காப்பி அடித்து(அல்லது அதுதான் தனித்தனமையா ?) இருந்தாலும் பாடல்களால் உற்சாகம் உல்லாசம் கூட்டுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ் . பின்னணி இசையும் சிறப்பு. குறிப்பாக மேகனாவின் காரை தேவ் தன் காரில் துரத்தும் காட்சியில் வரும் அந்த 70 கள் பாணியிலான பின்னணி இசைத் துணுக்கு ஆசம் அட்டகாசம் !

அன்பறிவின் சண்டைக் காட்சிகள் அதிரடி அசத்தல். குறிப்பான கர்நாடகாவில் நடக்கும்  பயண வழி கொள்ளையர்கள் சண்டை !
ரூபனின் படத் தொகுப்பு முடிந்த வரை படம்  வேகமாக போக போராடுகிறது .

தேவ் ஆக வாழ்ந்திருக்கிறார் கார்த்தி . உருவம் இந்த நவ நாகரீக இளைஞன் பாத்திரத்துக்கு ஒத்து வராவிட்டாலும் நடிப்பால் சமன் செய்கிறார் .

 சிறுவயதில் கஷ்டப்பட்டு ஆண்களை வெறுத்து சுயமாக முன்னேறிய காரணத்தால் , காதலனை கூட தன் கூட சும்மா இருக்கும் ஆளாக வைத்துக் கொள்ள நினைக்கிற — பணம் தான் முக்கியம் என நினைக்கிற மேக்னா கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங், சிறப்பு.

 அம்ருதா, ரம்யா கிருஷ்ணன் ஒகே . பிரகாஷ் ராஜ் படு செயற்கை . விக்னேஷ் ஓவர் டோஸ் .

 டைரக்டர் என்ன சொன்னாலும் மறுக்காமல் பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார் தயாரிப்பாளர் . ஜஸ்ட் லைக் தட் உக்ரைனில் படம் நடக்கிறது . 

குழந்தை செண்டிமெண்ட் நைஸ் . எவரெஸ்ட் அனுபவம்  வெகு ஜன ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைக்கும் . 

கரையில் இருந்து கல் கால்களை விரித்து குப்புறிக்க தண்ணியில் குதிக்கும் கார்த்தி, அடுத்து வரும் அண்டர் வாட்டர் ஷாட்டில் தலை கீழ் கால் மேலாக கரணம் அடித்து தண்ணீரை கிழிக்கிறார் . ஆக்ஷன் கன்டினியுட்டி மிஸ்ஸிங்!

 லவ் பண்ணனும்னா மனசுக்கு புடிச்ச பொண்ணு வேணாமா ” என்று சொல்லும் போது கார்த்தியின் பார்வை நெருங்கிய தோழியின் மார்பைப் பார்த்து அப்புறம் முகத்துக்கு வருகிறது . கேரக்டர் அசாசினேஷன் !

இது போன்ற விசயங்களில் இன்னும் கவனமாக  இருந்து இருக்க வேண்டும் ரஜத்.

இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் அக்கறை முதல் பாதியில் இல்லை . இன்னும் நேர்த்தியும் உள்ளீடும்  வேண்டும் . இரண்டாம் பாதியில் கூட தேவுக்கும் மேக்னாவுக்கும் இடையில் சண்டை  வருமா இல்லையா என்பதில் பிங்கி பிங்கி பாங்கி ஆட்டம் ஆடுகிறது திரைக்கதை . தேவை இல்லை . பத்து நிமிஷம் மிச்சம் ஆகி இருக்குமே கண்ணுகளா.

படத்துக்கு இன்னும் கூட நல்ல பெயர் வைத்து இருக்கலாம் .

கடைசியில் மேக்னா எல்லாம் உடைந்து அடிமை போல வந்து நிற்கும்போது , ” இல்ல எனக்கு அந்த திமிர்புடிச்ச மேக்னாதான் வேணும்” என்று தேவ் சொல்வது கவிதை .

 காதல் என்பது  குறைகள் இருந்தாலும் நேசிக்கும்போதுதான் அழகாகிறது . 

எனவே இந்தப் படத்தையும் நேசிக்கலாம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *