87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’

கலை சினிமாஸ் சார்பில் கலைச் செல்வன் தயாரிக்க, சாருஹாசன் , ஜனகராஜ், ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி,

நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடிப்பில்  விஜய ஸ்ரீ ஜி என்ற புது இயக்குனர் இயக்கி இருக்கும் படம் ‘தாதா 87’ . 

நிஜத்தில்  87 வயதான நடிகர் சாருஹாசன் இந்தப் படத்தில் அதே வயதில் – ஆனால் தாதாவாக வருகிறார் . 
தாதாவாக வந்து, சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தும் நபர்களை மண்ணெணெய் ஊற்றி , தான்  புகைக்கும் சுருட்டை அவர்கள் மேல் வீசி எரிக்கிறார் . 
 
படத்தில் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன. 
 
ஒரு பக்கம் வயதானவரின் சாகசம் இன்னொரு பக்கம் இளம் ஜோடிகளின் கிளாமர் இரண்டும் படத்தில் இருந்தன . 
 
சாருஹாசனை கஷ்டப்படுத்தாமல் அதேநேரம் கமர்ஷியலாக படம் பிடித்து இருக்கும இயக்குனரின் செய் நேர்த்தி கவனிக்க வைத்தது .
பாடல்களும் படமாக்கலும் நன்றாக இருந்தது . 
 
கண்ணை உருட்டி கம்பீர வெறியோடு  சிரித்து ”பெண்ணைத்  தொட்டா.. கொளுத்திடுவேன் ” என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார் சாருஹாசன் . 
 
சாருஹாசன் பற்றிய ஒரு செய்திப் படம் ”அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை , ஒரு முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் .
 
ஆனால் அவர் நடித்திருக்கும் விதத்தைப் பாருங்கள்” என்று சொல்லி வியக்க வைத்தது . 
நிகழ்ச்சியில் பேசிய ஜாகுவார் தங்கம் , “பெண் அடிமை ஒழிய வேண்டும் . பெண்களுக்கான வன் கொடுமை ஒழிக்கப் பட வேண்டும். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் .
 
இந்தப் படத்தை இயக்குனர் எடுத்து இருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர்  இன்னொரு மணிரத்னம் ஆக வருவார் ” என்றார் .  
சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை கௌதமி உட்பட அனைவரும் படத்தில் வரும் பெண்ணைத் தொட்டா கொளுத்துவேன் என்ற வசனத்தை பாராட்டிப் பேசினார்கள் 
 
அதே கருத்தைப் பேசிய கவிஞர் சினேகன் தொடர்ந்து, 
” தண்ணீர் தண்ணீர் என்று  எல்லோரும் கேட்டோம். இப்போ வருது . அனால் சேமிக்காம வீணாக்கறோம்” என்றார் .
 
சரோஜா பாட்டி பேசும்போது , ” தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளணும்னு இல்லே.  . யார் வேண்ணா ஆளலாம் . யார் வேண்ணா வாழலாம் .
 
ஆனா தமிழர்கள் ஒண்ணுமே இல்லாம போயிண்டு இருக்காளே . அதான் தாங்க முடியல . அவா அவா வேலையை அவா அவா சரியா செய்யணும் .
இந்தப் படத்தோட இயக்குனர் ஒரு லாயர் . ஒரு முறை நாங்க ஷூட்டிங் முடிஞ்சு வந்துண்டு இருந்தப்போ , ஒரு ஆக்ஸிடென்ட் . உடனே எங்க காரை விட்டு இறங்கனார் .
 
ராங் சைடுல வந்து டூ வீலர் மேல இடிச்ச அந்த காரை போலீஸ்ல ஒப்படைச்சுட்டுதான் வந்தார் . 
 
அவ்வளவு சரியானவர் . மழை பெஞ்சா தண்ணி வர தான் செய்யும் . ஆனா நாம கேட்டப்போ அவங்க தரலையே ” என்றார் . படத்தின் நாயகன் ஆனந்த் பாண்டி பேசும்போது , ” சேலம் ஆத்தூர் எனது சொந்த ஊர் . நிறைய போராட்டத்துக்கு பிறகு, 
 
சினிமாவில் வாய்ப்பு பெற்று இருக்கிறேன். தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் . அதுதான் சரி ” என்றார் 
 
சாருஹாசன் பேசும்போது ,
” லாயர்களுக்குள் சமூக அக்கறை இருக்கறது அதிசயம் இல்ல. சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான, 
 
மகாத்மா காந்தி , நேரு,  ராஜ கோபாலாச்சாரியார் எல்லோரும் லாயர்கள்தான் . (அம்பேத்கார் கூட லாயர்தான் சாரு சாரே ) .
 
இந்தப் படத்தில் என்னை வைத்தே நிறைய எடுத்துக் கொண்டு இருந்தார்கள் . நான் கூட ‘என்னை வச்சே எடுத்தா எப்படி சரி வருமா?’ என்று கேட்டேன் .
 
ஆனால் இப்போ பார்க்கிறேன் . எல்லாமும் எடுத்து இருக்கிறார் . நன்றாகவும் எடுத்து இருக்கிறார் “என்றார் . 
படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மனோஜ்குமார், ” சாரு அண்ணாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த தபர்ன கதா கன்னடப் படத்தின் கதை …
 
பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியத்துக்கு அலையும் ஒரு முதியவரைப் பற்றியது . அவருக்கு முதல் ஓய்வூதியம் வரும்போது அந்த முதியவர் செத்தே இருப்பார்.
 
அந்த படம் வந்த பிறகு , ஒய்வு பெற்றவருக்கு உடனே ஓய்வூதியம் கிடைக்க அரசுகள்  ஏற்பாடுகள் செய்தன  . அதே போல இந்தப் படத்தில் சாரு அண்ணா பேசும்,
 
‘ பெண்ணைத் தொட்டா கொளுத்துவேன் ‘ என்ற வசனமும் சட்டமாக்கப்படவேண்டும் ” என்றார் . 
 
நிறைவாகப் பேசிய இயக்குனர்  விஜய ஸ்ரீ ஜி ,
“அப்படி சட்டமானால் என்னை விட சந்தோஷப் படுபவன் யாரும் இருக்க முடியாது .
 
அவசியம் சட்டமாக வேண்டிய விசயம்தான் அது. 
 
ஏனென்றால் பாலியல் பலாத்காரம் என்பது உலகிலேயே மிகக் கொடிய துன்பம்.  வளர்ந்த பெண்களுக்கே அப்படி எனில், 
பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் சிறுமிகளை எண்ணிப் பாருங்கள் . மாற்றுத் திறனாளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமையை, 
 
என்ன என்று சொல்ல முடியும்?  அதிலும் மனநிலை பாதிக்கப்பட்ட  பலாத்காரம் செய்யும்போது அவர்கள் என்ன வென்றே புரியாமல் சிரித்துக் கொண்டு இருப்பார்களாம் .
 
எனில் அந்த பாலியல் பலாத்காரம் எவ்வளவு கொடூரம்  ? எனவே பெண்ணைத் தொட்டா கொளுத்தணும் . அது சட்டம் ஆகணும் ” என்றார் . 
 
உண்மை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *