ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் “தனுஷு ராசி நேயர்களே”
படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் பல படங்களில் நடித்தவர் . இவரது தந்தை இயக்குனர் சந்தான பாரதி . ( சந்தான பாரதியின் தந்தை சண்முகம் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படத்தில் அமைச்சர் தானாதிபதிப் பிள்ளையாக நடித்தவர் . பாசமலர் படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப் பட்டவர்)
ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வித்தியாசமான இந்த படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து Youtube தளத்தில் சாதனை படைத்து வருகிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அது திரையிடப்பட்டது .
தனுசு ராசியில் பிறந்த பையன் ராசிப்படி தனக்கு கன்னி ராசி பெண்ணோடு கல்யாணம் ஆனால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தேடிப் போகிறான். அப்படி பட்ட பெண்ணை பார்க்கிறான் . அவளை நேசிக்கிறான் .
அவள் பப்பில் சரக்கடிப்பது போன்ற காட்சியும் டிரைலரில் வருது
படம் பற்றி பேசிய இயக்குனர் சஞ்சய் பாரதி , “இந்தப் படம் சுரேஷ்சாரால் தான் ஆரம்பித்தது. அவர் தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப்படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள்.
ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கலயாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும்.
செவ்வாய் தோஷத்துக்கு பயப்படும் பையன் செவ்வாய் கிரகத்துக்கே போக ஆசைப்படும் பெண் என்று இன்னொரு கோணமும் உண்டு . எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் படத்தின் ஹீரோ ஹரீஷ். அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.
படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது.
நாயகிக்கு ர் விஜயா என்று பெயர் வைத்ததும் ஜஸ்ட் ஒரு வித்தியாசத்துக்குதான் . ஆனால் அதில் ஒரு இன்ட்ரஸ்டிங் விசயமும் இருக்கு . படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.
டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் கதாநாயகிகள்.
5 பாடலகள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம் “என்றார்.
“உங்க டீசரை பார்த்தா கன்னி ராசி பொண்ணுங்க சரக்கடிப்பாங்க என்று சொல்ல வருவது மாதிரி இருக்கே ?” என்றேன் .
” கன்னி ராசி மட்டுமில்ல … இப்ப எல்லாம் எல்லா ராசி பெண்களும் அடிக்கறாங்க ” என்றார் .
மகளிர் திலகங்களே .. பொங்கி எழுங்கள் … டயரைப் போட்டு கொளுத்துங்கள் ….
படத்துக்கு கொஞ்சம் பரபரப்பான விளம்பரம் வரட்டும் !