தனுசு ராசி நேயர்களே @ விமர்சனம்

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்க, ஹரீஷ் கல்யான், டிகங்கனா சூரியவன்ஷி, ரெபா மோனிகா ஜான் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கி இருக்கும் படம் தனுசு ராசி நேயர்களே . 

அப்பாவின் அகால மரணத்துக்கு காரணம் ஜாதகத்தில் இருந்த தோஷத்துக்கு பரிகாரம் செய்யாததுதான் என்று சிறு வயதில் நம்ப வைக்கப்படும் சிறுவன் ஒருவன், வளர்ந்து இளைஞன் ஆன பிறகு (ஹரீஷ் கல்யான்) அதிலேயே ஊறிப் போகிறான் . 

அவனது தனுசு ராசிக்கு கன்னி ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதுதான் பொருத்தம் என குடும்ப ஜோசியர் (  பாண்டிய ராஜன்)  சொல்கிறார்.

தேடி வந்து நேசிக்கும் பெண்ணை கன்னி ராசி இல்லாத பெண் என்று ஒதுக்கி விட்டு, கன்னி ராசி உள்ள பெண்களாக பார்த்து காதல் சோழ முயலும் அவன் , அதே கன்னி ராசியைச் சேர்ந்த , செவ்வாய் கிரகத்தில் செட்டில் ஆகத் திட்டமிடும் ஒரு வானியல் நிபுணப் பெண்ணை நேசிக்க , அப்புறம் என்ன ஆனது என்பதே படம். 

படம் முழுக்க பெண்கள் …. யப்பா யப்பா ..பெண்கள் பெண்கள் .. விதம் விதமான பெண்கள்.. வெள்ளை வெள்ளையான பெண்கள் …  நடிகைகள் தேர்வில் மிக கவனமாக இருந்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் சஞ்சய் .

பிகே வர்மாவின்  வண்ணமயமான ஒளிப்பதிவு , உடைகள், இரண்டும் கண்ணுக்கு குளிர்ச்சி . 

ஜிப்ரானின் இசையில் ”யாரு மேல குத்தமுன்னு… ” பாடல் முணுமுணுக்க வைக்கிறது . இசை , நடனம், நாயகி டிகங்கனாவின் பங்களிப்பு எல்லாம் அந்த பாடலை ரசிக்க வைக்கிறது .

ஹரீஷ் கல்யான் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் . 

சிறு வயது முதல் நடிப்பில் அனுபவம் வாய்ந்த நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி மிக சிறப்பாக நடிக்கிறார் . திருத்தமான முகம் . அழகாக சிரிப்பு .  

அடிப்படைக் கதையே  பழசு . அப்படி  இருக்க திரைக்கதையில் முக்கியமாக  இரண்டாம் பகுதியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் . 

அக்கா மகனுக்காகவே வாழ்வதாக சொல்லும் முனீஸ்காந்த் முக்கியமான காட்சியில் அக்காவையும் அக்கா மகனையும் பார்த்து எப்படியோ போங்க என்று கும்பிடு போட்டு விட்டு போகிறார் . கேரக்டரைசேஷன் குறைபாடுகள் !

சகலகலா வல்லவன் , நல்லவனுக்கு நல்லவன் படங்களில் வந்த மாதிரியான செட்கள், பாடல்கள் இன்னும் தேவையா ?

தனுசு ராசி நேயர்களே … புதுசா  அட்டை போட்ட – செல்லரித்த பழைய  பஞ்சாங்கம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *