தர்மதுரை நூறாவது நாள் வெற்றி விழா .

dharma-4

ஒரு காலத்தில் சந்தோஷமான  சினிமா நிகழ்வுகளில் ஒன்று நூறாவது நாள் வெற்றி விழா. அந்த வெற்றி விழாவில் வழங்கப்பட்ட கேடயங்கள், 

பல சீனியர் சினிமா பிரமுகர்களின் வீடுகளை அலங்கரிப்பதை இப்போதும் பார்க்க முடியும் . ஆனால் இன்றைய தலைமுறை சினிமாக் கலைஞர்கள் பலரும் அறியாத அந்த அற்புத நிகழ்வை ,

dharma-2

மீண்டும் நடத்திக் காட்டிய வகையில் சாதனை படைத்துள்ளது, ஸ்டுடியோ 9 ஆர் கே சுரேஷ் தயாரிப்பில் , விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை .படம்.

ஆம் !

தர்மதுரை படத்தின் நூற்றாண்டு விழாவில் படத்தின் கலைஞர்களோடு ,கலைப்புலி  எஸ் தாணு கலந்து கொண்டு அனைவருக்கும் கேடயம் வழங்கினார் .

dharma-8

இந்த வெற்றி விழாவோடு , அடுத்து தான் வாங்கி வெளியிட இருக்கும் அட்டு  என்ற படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவையும் நடத்தினர் ஆர் கே சுரேஷ் 

அதோடு  ஆடியோ உலகிலும் நுழையும் ஆர் கே சுரேஷின் ஸ்டுடியோ 9 மியூசிக் நிறுவன துவக்க விழாவும் நடந்தது .

dharma-7

நிகழ்ச்சியில் பேசிய ஆர் கே சுரேஷ் ” அண்ணன் சீனு ராமசாமி இந்தப் படத்தின் கதையை சொன்ன உடனே சந்தோஷமாக தயாரித்தேன் . படத்தை துவங்கி வைத்தவர் அண்ணன் தாணுதான்  .

அப்போது நான் மருது படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன் . இந்தப் படத்தில் மக்க கலந்குதய்யா பாட்டில் ஒரு சிறு காட்சியில் தோன்றி ஆடினேன் .

dharma-1

சீனு ராமசாமி அண்ணனும், சகோதரர் விஜய் சேதுபதியும் இதை வெற்றிப் படம் ஆக்கிக் கொடுத்தனர் .அவர்களுக்கு நன்றி .

இப்போது அதே தாணு அண்ணன் வெற்றி விழாவுக்கு வந்து இருப்பது சந்தோசம் . அவருக்கும் நன்றி

அண்மையில் நான் பார்த்த அட்டு படம் மிக சிறப்பாக இருந்தது . அதை வாங்கி வெளியிடுகிறேன் . தவிர ஸ்டுடியோ 9 மியூசிக் சார்பில் ஆடியோ  துறையிலும் இறங்குகிறேன் .” என்றார் .

dharma-6

“மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன் பேச எதுவுமில்லை. ரொம்ப மகிழ்ச்சி ” என்றார் விஜய் சேதுபதி  . “எனக்கு சீனு ராமசாமி ஒரு படம் இயக்கித் தர வேண்டும் ” என்றார் எஸ் தாணு .

சீனு ராமசாமி பேசும்போது ” இது எனக்கு மிக முக்கியமான நாள் . ஏனெனில் நான் சினிமாவுக்கு வந்த காலம் முதலே  நான் கலந்து கொள்ளும் முதல் நூறாவது நாள் இதுதான் .

dharma-5

நான் இந்தக் கதையை சொன்ன உடனே அதை உணர்ந்து நல்ல விதமாக் தயாரித்து  இன்று வரை அதை தூக்கி சுமக்கும் ஆர் கே சுரேஷுக்கு நன்றி  சொல்ல வார்த்தைகளே இல்லை .

நான் இயக்கிய இடம் பொருள் ஏவல் என்ற படம் வெளிவராத நிலையில் என்னை நம்பி இந்தப் படத்தை நடித்துக் கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி

dharma-3

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ராஜேஷ், எம் எஸ் பாஸ்கர் எல்லோரும் அற்புதமாக நடித்தார்கள் .

தென் மாவட்ட பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை மட்டும் ராதிகாவுக்கு அனுப்பி, உங்கள் கேரக்டர் இப்படி இருக்கும் என்றேன் . அப்படியே அவராகவே வந்து நின்றார் .

dharma-9

இவர்களோடு அற்புதமான பாடல் வரிகளால் வைரமுத்து சார், சிறப்பான ஒளிப்பதிவால் சுகுமார் , அற்புதமான இசையால் யுவன் சங்கர் ராஜா …இப்படி எல்லோரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது

இந்தப் படம் வெற்றிகரமாக ஓட மக்களிடம் இருக்கும் அற உணர்ச்சிதான் காரணம் . நான் தேவை இல்லாமல் காமெடி , கமர்ஷியல் வைக்க மாட்டேன்.

dharma-99

அப்படி இருந்தும் இந்தப் படத்தை எல்லா பகுதியிலும் வெற்றி பெற வைத்த மக்கள் , நல்ல படங்கள் கட்டாயம் ஓடும் என்ற நம்பிக்கையை தருகிறார்கள் .

அவர்களுக்கு நன்றி ” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *