மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தில் இருந்து ஒரு திரைப்பட நாயகன் !

IMG_4962
பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ராம்போ  ராஜ்குமாரின் மகன் ராம்போ  நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’.
 Dissonance என்றால் ஒத்திசைவின்மை அதாவது ஒலிக் கோர்வையில் ஏற்படும் முரண்பாடு என்று பெயர். ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படம் பல சர்வதேச திரை விழாக்களில்   பங்கேற்கவுள்ளது. .
நாயகன் குணாநிதி
நாயகன் குணாநிதி

நாயகன்  குணாநிதி  பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர்   ராமதாசின்  பேரன்  மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரர்.

ஆங்கில மருத்துவம்  படித்த மருத்துவரான இவர்,   தமிழ்த் திரையுலகில் நாயகனாகக்  கால்பதிக்க உள்ளார்.  மேற்படி குறும்படம் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது . 
IMG_4881
நிகழ்வில் அன்பு மணி ராமதாஸ், கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர்கள் விக்ரமன் , ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர் . 
 படத்தை  முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது திரையிடப்பட்டது.
IMG_4960
” நான் ஒரு காலத்தில்  உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி-  மனோவியல் ரீதியிலான திரைப்படங்களின் பாணியில் இந்தப் படத்தை  இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்குபோட்டியாக வர வேண்டும்”  என்று வாழ்த்தியிருந்தார் கமல். 
IMG_4963
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் குணாநிதி ” சிறு வயதிலிருந்தே நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது.
தியேட்டர் லேப் சார்பில்  நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘A Stroke Of Dissonance’ ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட முப்பது நிமிடக் குறும்படம்.
IMG_4959
சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு  வயலின் கலைஞனைப் பற்றிய  பரபரப்பான  கதை இது. இந்த  கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம்,
 நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன். எனது நடிப்பார்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர்.
IMG_4957
எனது நடிப்பார்வத்தை பார்த்த எனது தாத்தாதான்,  நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார்.
திரையுலகம்  பற்றியும் நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் திரையுலகில்  கால்பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்” என்றார் 
IMG_4956
கலைப்புலி எஸ் தாணு. தனது பேச்சில் “இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு திரைப்பட  இசை வெளியீட்டு விழாவில்தான்  நான்அ ன்புமணி ராமதாஸை சந்தித்தேன். அன்று தொடங்கிய  நட்பு இன்று வரை தொடர்கிறது.
IMG_4955
அரசியலில் எதிர் துருவங்களில் இருந்த போதும் தொடர்ந்தது . ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும் மோதல் நடந்த காலத்தில்,
 ரஜினிக்கும், அன்புமணிக்கும் பாலமாக இருந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். 
பெரிய இடத்து பிள்ளை என்றாலும் குணாநிதிக்கு தொழிலில் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது.
IMG_4954
இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்த குறும்படத்தை போட்டுக் காட்ட நான் முயற்சி செய்வேன்.
ஆளவந்தான் போல ஒரு படைப்பை கொடுத்த கமல்ஹாசன் இந்த குறும்படத்தை பற்றி கணித்திருப்பது உண்மை. இந்த குழுவினர் என் நிறுவனத்திற்கு ஒரு படத்தை செய்து கொடுக்க வேண்டும்” என்றார் 
தியேட்டர்  லேப்  நடிப்புப் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜெயராவ். பேசும் போது
IMG_4896
” என்   பயிற்சி மையத்தின் வெற்றிக்கு காரணம் குணாநிதி. என் சிறந்த மாணவன் குணா .
அவர் நடித்த ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வயலின் வாசிப்பது போல ஒரு காட்சி வைக்க  வேண்டும் . ஆனால் வைக்க முடியவில்லை . அதை இதில் சிறப்பாக செய்து உள்ளார் . 
திரைப்பட உலகில்  நிறைய சம்பாதிக்கலாம், புகழ் பெறலாம் என பலரும்  வருகிறார்கள்.
IMG_4952
பணம், புகழை தாண்டி கலை ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார் இந்த குணா” என்றார்  
இயக்குனர் சீனு ராமசாமி தனது பேச்சில் “மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் பல வித கதைகள், தமிழ் சினிமா கதை சொல்லலில் சாத்தியமில்லை.
வணிக நோக்கத்தில் படங்கள் எடுக்கப்படுவதால், நேரடியாக நாங்கள் சொல்ல வேண்டி உள்ளது.
IMG_4950
அப்படி நேரடியாக சொல்ல  முடியாத விஷயங்களை குறும்படங்களில் சொல்ல முடியும்.
அந்த வகையில் மிகவும் நேர்த்தியோடு  இந்த குறும்படத்தை குணாநிதி மற்றும் குழுவினர் எடுத்திருக்கிறார்கள். இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் இந்த படத்தை நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டும்.
அன்புமணி அவர்கள்  தர்மதுரை படத்தை பார்த்து விட்டு பாராட்டினார், நல்ல படங்களை என்றும் அவர் ஆதரிப்பவர் ” என்றார் 
 IMG_4949
சிறப்புரை ஆற்றிய அன்புமணி ராமதாஸ். “குணாநிதியை குழந்தையில் இருந்தே எனக்கு தெரியும். ஐந்து வயதில் லட்சக்கணக்கான மக்கள் முன் மேடை ஏறியவன் குணாநிதி.
அவன் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞன். மருத்துவம் படித்து விட்டு வந்தாலும் திரைக்  கலையில்தான் அவனுக்கு ஆர்வம்.
IMG_4948
ஒட்டு மொத்த குடும்பத்தையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிரிக்க வைக்கும் திறமையானவன். இந்த குறும்படத்தில் புகை புடிக்கும் காட்சியை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
ஆனாலும் புகை பிடிப்பதை உயர்த்திச்  சொல்லவில்லை என்பது ஆறுதல்.
திரைப்படங்களுக்கு  நாங்கள் எதிரி என்பது போல சித்தரித்து விட்டார்கள். அப்படி கிடையாது, நான் வாரம் ஒரு படம் பார்ப்பேன், அப்பா மாதம் ஒரு படம் பார்ப்பார்.
IMG_4946
என் குழந்தைகள் வாரம் இரண்டு மூன்று படம் பார்ப்பவர்கள்.  எங்கள் வீட்டுப் பெண்கள் வாரம் மூன்று படம் பார்ப்பார்கள் .
சிறுவயதில் அப்பா என்னை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பாண்டிச்சேரிக்கு அழைத்துப் போவார் . ரெண்டு படம் பார்த்து விட்டு வருவோம் . 
IMG_4945திரைப்படம்  பொழுதுபோக்காக இருப்பதில் பிரச்னை இல்லை . தமிழ் நாட்டில் அது வாழ்க்கை ஆகி விட்டதில்தான் சிக்கல் .
அதனால்  படைப்பாளிகள் பொறுப்பான படங்களாகக் கொடுக்க வேண்டும் என்றுதான்  நாங்கள் எதிர்பார்க்கிறோம். திரைப்படைப்புகளை  நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்”  என்றார் 
IMG_4911ட்ரெண்ட்லௌட் சிதம்பரம், , இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பதநிச தயாரிப்பாளர் சங்கமித்ரா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *