இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்

ஷார்மிளா மாண்ட்ரே , ஆர் சர்வண் தயாரிப்பில் விமல் , ஆஷ்னா சாவேரி, பூர்ணா , மியா ராய் , ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் , சிங்கம் புலி நடிப்பில் ,

திரைக்கதை வசனம் எழுதி ஏ ஆர் முகேஷ் இயக்கி இருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ . ரசிகனுக்கு ஏதும் மிச்சம் இருக்குமா ? பேசலாம் . 

லண்டனுக்கு வேலைக்குப் போன இடத்தில், கன் ஃபைட்  காஞ்சனா (மியா ராய் ) என்ற செக்ஸ் வெறி பிடித்த பெண் கேங்ஸ்டரிடம் சிக்கி பலகீனப்பட்டு ,
 
அவளிடம் பொய் சொல்லி பத்து லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு அதையும் லண்டனிலேயே தொலைத்து விட்டு  தப்பித்து வந்திருக்கும் ஹரியும் ( விமல்)….
 
பூட்டு சாவி ரிப்பேர் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் இரண்டு பிள்ளைகளையும் பெற்ற சூழ்நிலையில், 
 
பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புடவை கூட வாங்கித் தர முடியாமல் இருக்க, அவள் துணிக்கடைக்காரனுடன், 
 
ஓடிப்போய் விட்ட நிலையில்  பிள்ளைகள் மற்றும் மற்றும் அம்மாவுடன் வாழும் கிரியும் (சிங்கம் புலி), 
 
ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார்கள் .
 
எனினும் ,   இரவு நேரத்தில் வீடு புகுந்து விலை மதிப்புக் குறைவான பொருட்களாக திருடி (விலை உயர்ந்த பொருட்களை திருடினால் ,
 
பாதிக்கப்பட்டவன் போலீஸ் போவான் ; பிரச்னை பெரிதாகும் ; மாட்டிக் கொள்வோம் என்று ஒரு லா…. லா… லாஜிக்.. ஜிக்… ஜிக் !), 
 
வேறு இடத்தில் கடை பரப்பி விற்பதே அவர்களது நிஜ தொழில் . 
 
அப்படி திருடப் போன இடத்தில் சாதாரண டப்பா என்று சின்னஞ்சிறு டப்பா ஒன்றை  எடுத்துக் கொண்டு வர ,
 
அதில் இருப்பதோ ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருள் . 
 
அது மட்டுமல்ல ,,, கடத்தலை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு  கடத்தும் தாதா ( ஆனந்தராஜ் )
 
இன்ஸ்பெக்டருக்கு ( மன்சூர் அலிகான் ) பத்து லட்சம் லஞ்சம் கொடுக்க , 
 
அவர் அதை ஐந்து ஐந்து லட்சமாக இரண்டாக பிரித்து தனித்தனியே சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து, 
 
சின்ன வீட்டுக்கு ஒரு பேக்கையும் பெரிய வீட்டுக்கு ஒரு பேக்கையும் தருகிறார் . 
 
இரண்டு வீடுகளுக்கும் திருடப் போகும் ஹரி கிரி கூட்டணி , ஆளுக்கு ஒன்றை எடுத்துப் போட்டு… கொண்டு வந்த பிறகு பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து ,
 
திருப்பி வைக்க முயன்று முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஆளுக்கொரு பேக்கை அமுக்கிக் கொள்கிறது . 
 
வேலை செய்த மெடிக்கல் ஷாப்பிலும் திருடிக் கொண்டு எஸ்கேப் ஆகிறது 
 
தொலைந்த பணத்தை மீட்டு குற்றவாளிகளை கைது செய்ய சப் இன்ஸ்பெக்டர் கீதாவை  (பூர்ணா) பணிக்கிறார் இன்ஸ்பெக்டர் 
 
தாதாவின் ஆட்கள், மெடிகல் ஷாப் ஓனர், இன்ஸ்பெக்டர் , சப் இன்ஸ்பெக்டர் அனைவரும் அரி கிரியை துரத்த ,
 
இது போதாதென்று அரியை மீண்டும் கொண்டு போக  கன் ஃபைட்  காஞ்சனாவும் லண்டனில் இருந்து வர , 
 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. 
 
இளமை கிளுகிளுப்பு நகைச்சுவைப் படம் .
 
எனினும் கடைசி காட்சிகளில் சில சைவ நகைச்சுவைகள் வருவதையும் பாராட்டலாம் 
 
விமல் ஜஸ்ட் லைக் தட் நடித்து இருக்கிறார் . சிங்கம் புலி அவருக்கே உரிய பாணியில் !
 
ஆஷ்னா சவேரி கிளாமருக்கு மட்டும் !
 
எனினும் அவரது அண்ணியாக வரும் பெண் அவரை விட பெட்டராக இருக்கிறார் .
 
மியா ராய் கவர்ச்சி , சண்டை என்று எல்லா வகையிலும்  எகிறி அடிக்கிறார் . 
 
ஆனந்த் ராஜ் , மன்சூர் ஒகே 
 
பூர்ணா  ஸ்மார்ட் . 
 
அண்ணியோடு கள்ள உறவு கொண்டிருப்பவனை ரசித்து மோகம் கொண்டு அப்புறம்  காதலித்து ,
 
ஒரு இரவில் அவன் அண்ணியை புறக்கணித்து விட்டு தன்னுடன் வந்து  படுக்கும்போது சந்தோஷப்பட்டு , அவனை நம்பி ஓடிப் போகும் 
 
ஒரு  கதாநாயகி கதாபாத்திரத்தைப் படைத்து புரச்சீ செய்து இருக்கிறார் இயக்குனர் . 
 
‘வ்வ்வ்வ்வா’ என்ற ஒற்றை  சொல்லில் அதிரடிக்கிறார் மியா ராய் . ஆள் மாறிய நிலையில் சிங்கம் புலியின் திவ்ய திருப்தி முகபாவம்  ஹா ஹா ஹா . 
 
அவரது மனைவி கள்ளக் காதலன் முன்னிலையில் அவரை விட்டு நெகிழ்வோடு பிரிந்து கள்ளக் காதலனோடு போகும் காட்சியும் நகைச்சுவை. 
 
கிளுகிளுப்புக் காமெடி என்பதில் ஒரு வரையறை வேணும் . சில இடங்களில் எல்லை மீறுவது அருவறுப்பு. தவிர்த்து இருக்கலாம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *