எம்பிரான் @ விமர்சனம்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா தயாரிக்க ரெஜித், ராதிகா பிரீத்தி , மவுலி , கல்யாணி நடராஜன் நடிப்பில் கிருஷ்ண பாண்டி எழுதி இயக்கி இருக்கும் படம் எம்பிரான் .

மருத்துவமனையில்  நினைவுகள் அசைவுகள் இன்றி சிகிச்சையில் இருக்கும் பெண் ஒருத்தி (ராதிகா பிரீத்தி),  ஒரு மருத்துவரின் (ரெஜித்) கனவில் அடிக்கடி வருகிறாள் . 

அது குறித்த சிந்தனையில் அவன் இருக்கும்போது பெண்ணின் கதை விவரிக்கப்படுகிறது.

 கோவில் குருக்கள்  ஒருவரின் ( மவுலி) பேத்தியான அந்தப் பெண் (தாய் தந்தையை இழந்தவள்) மேற்படி மருத்துவர் மீது காதல் கொள்கிறாள் . அவனிடம் பேசவும் முடியாமல் , அவனை சந்திக்கும் முயற்சிகளும் தள்ளிப் போக,

ஒரு நிலையில் தீர்மானித்து, தாத்தாவோடு  மருத்துவரை சந்திக்க கிளம்பும்போது , விபத்து ஒன்றில் சிக்கி நினைவுகள் அசைவுகள் இல்லா நிலைக்குப் போய் விடுகிறாள் .

 எனினும் அவளது காதல் எண்ணம் அவனது கனவில் அவளை அடிக்கடி கொண்டு வருகிறது . 

அவளை அவன் கண்டு பிடித்தானா ? அவள் குணமானாளா? காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த எம்பிரான் . 

மிக மெல்லிய கதை . சின்னச் சின்ன காட்சிகளையும் மிக அழுத்தமாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ண பாண்டி .  நல்ல படமாக்கல் . 

ரெஜித் ஜஸ்ட் லைக் தட் நடிக்கிறார் . ராதிகா பிரீத்தி அழகாக இருக்கிறார் . நடிப்பும் ஒகே . மவுலி வழக்கம் போல் சிறப்பான நடிப்பு . 
கல்யாணி நடராஜன் செஞ்சு வச்ச பொம்மை . 

புகழேந்தியின் ஒளிப்பதிவு துவக்கம் முதல் முடிவு வரை அசத்துகிறது . ரம்மியம் .

 பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஒகே . ஆனால் பின்னணி இசையில்தான் ஆன் பண்ணி விட்டு தூங்கி விட்டவர் போல ஒரு  இசைக் குறிப்பையே திரும்பத் திரும்ப வாசிக்கிறார், இடை வெளியே இல்லாமல் . 

கலை இயக்கமும் அழகு . 

திரைக்கதையில்தான் ஏகப்பட்ட குழப்பங்கள்  மற்றும்  விட்டேத்தித்தனம் .

டாக்டரை சந்திக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி கத்தி எடுத்துக் குத்திக் கொள்ளவும் , காலில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொள்ளவும் கொதிக்கிற நீரில் காலை வைக்கவும் முயல்வது எல்லாம் வெட்டி எறிய வேண்டிய  விபரீதக் காட்சிகள் .

 இதில்” பசங்க எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுக்கறாங்க. ஆனா நாம ஒரு காயம் கூட ஏற்படுத்திக்க முடியல” என்று சோகத்தோடு சொல்வது போல வசனம் வேறு. 

தலை வலி என்று சொல்லி விட்டு டாக்டரை பார்க்கப் போகக் கூடாதா ? 

ஒரே நேரத்தில் சில்லென்ற கோக் , மேங்கோ ஜூஸ்,  ஐஸ் கிரீம் , தயிர் எல்லாம் குடித்து காய்ச்சலை வரவழைத்துக் கொள்வாராம் நாயகி . 

சரி காய்ச்சல் வந்தது அல்லவா ? டாக்டரை பார்க்க அப்பாயின்ட்மென்ட்  வாங்குவாராம். ஆனால் போகாமல தூங்கி விடுவாராம் .

 தாத்தா வந்து ஜெயா என்று மெல்லிய குரலில் அழைத்தாலே விழித்துக் கொள்வாராம் . ஆனால் மருத்துவமனையில் இருந்து மாறி மாறி  போன் அடித்ததாலும் விழிக்க மாட்டாராம்.

 நாயகனை பின் தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பாராம் . ஆனால் அவனை சந்திக்க இவ்வளவு களேபரங்கள் செய்வாராம் . 
திரைக்கதையில் அநியாயத்துக்கு அலட்சியம் .

 மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் பெண் எப்படி ஒருவரின் கனவில் அடிக்கடி வர முடியும் என்பதற்கு விளக்கமே இல்லை . டெலிபதி என்றாவது சொல்லி இருக்கலாம் . 

சரி போகட்டும் என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் பகுதியில் பலமுறை பார்த்து சலித்த காட்சிகள் . 

நல்ல கதை திரைகதை கைவரப் பெற்றால் சிறந்த இயக்குனராக ஜொலிக்கலாம் கிருஷ்ண  பாண்டி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *