எங்க காட்டுல மழை @ விமர்சனம்

வள்ளி பிலிம்ஸ் சார்பில் சி.ராஜா தயாரிக்க,  மிதுன், சுருதி ராம கிருஷ்ணன் , அப்பு குட்டி , அருள் தாஸ் , சாம்ஸ் நடிப்பில் ,

குள்ளநரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கி இருக்கும் படம் எங்க காட்டுல மழை . வளமா? ஜலதோஷமா ? பேசலாம் . 

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்து விழுந்த ஓர் இளைஞனுக்கும் (மிதுன்) ஷாப்பர்ஸ் ஸ்டாப் பணியாளப் பெண் ஒருத்திக்கும் (சுருதி)காதல் 
 
சேட் ஒருவன் பெரிய அளவு அமெரிக்க டாலரை சென்னைக்குள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப் போவது, 
 
ஊழல் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு  (அருள் தாஸ்) தெரிகிறது . 
 
அந்தப் பணத்தை அவர் அடித்து விடுகிறார் . ஆனால் அவரால் அநியாமாக பாதிக்கப்பட்ட கோபத்தில் இருக்கும் நாயகன் ,அதை அடித்து விடுகிறான் .
அவனும் நண்பனும் (அப்புக்குட்டி) அதை ஒரு பாழடைந்த வீட்டில் புதைத்து வைக்க , அங்கே போலீஸ் ஸ்டேஷன் வந்து விடுகிறது . 
 
காதலிக்கு அவளது முறை மாப்பிள்ளையுடன் (சாம்ஸ்) திருமணம் நடக்கும் என்று அஞ்சும் நாயகன் , அதை சமாளிக்கும் முயற்சியில் பணத்தை மறக்கிறான் . 
 
ஆனால் சேட் இவனை மோப்பம் பிடித்து வந்து விடுகிறான் . காதலியை  சிறை பிடிக்கும் சேட் ,
 
‘பணத்தோடு வா .. உன் காதலியோடு போ ‘  நாயகனை போலீஸ் இன்ஸ்பெக்டரும் மோப்பம் பிடித்து வர , 
அப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்த எங்க காட்டுல மழை .
 
ஹீரோ மிதுன் இயல்பாக நடிக்கிறார் . சுருதியும் அப்புகுட்டியும் ஒகே . 
 
வில்லனாக மிரட்டுகிறார் அருள்தாஸ் . சாம்ஸ் ஒகே 
 
 ஸ்ரீ விஜய் இசையில் முத்தம் பாடல் இனிமை . 
 
படமாக்கல் எளிமை மற்றும் இனிமை .
 
வழக்கமான கதை . தெரிந்த திரைக்கதை . பார்த்து சலித்த காட்சிகள் என்பதுதான் படத்தின் குறை . 
 
அதில் இன்னும் கொஞ்சம் முயன்று இருந்தால் அடைமழை ஆகா விட்டால் கூட ”அட  .. மழை !” என்று சந்தோஷப் பட வைத்து இருக்கும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *