பள்ளி மாணவராக டெல்லி கணேஷ் நடிக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’

பள்ளி மாணவியாக சித்ரா, மாணவராக டெல்லி கணேஷ் – கலகலப்பான காமெடிப் படமாக உருவாகும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’
 
திரில்லர், திகில் என என்னதான் வித்தியாசமான ஜானரில் படங்கள் வந்தாலும், தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் ஒரே ஜானர், 
 
கலர்ஃபுல்லான கமர்ஷியல் படங்கள் தான். அதிலும் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் கமர்ஷியல் படங்கள் என்றால், நூறு சதவீதம் வெற்றி தான்.
 
இதற்கு சான்றாக ‘கலகலப்பு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று பல படங்களைச்  சொல்லலாம்.
 
அந்த வரிசையிலான கலர்ஃபுல் காமெடிப் படமாக உருவாகியுள்ள படம் தான் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.
எஸ்.எச்.மீடியா ட்ரீம் நிறுவனம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் இப்படத்திற்கு நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்குகிறார்.
 
இவர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு கேமரா உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.
 
இதில் ஹீரோவாக விகாஷ் நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், ராகுல் தாத்தா,
 
அம்பானி சங்கர், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்க, நடிகை சித்ராவும், டெல்லி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க விரும்பிய நடிகை சித்ரா, பல்வேறு கதைகளை கேட்டு திருப்தியடையாத நிலையில்  இந்தக் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லியிருக்கிறார்.
 
டெல்லி கணேஷின் மனைவியாக நடித்திருக்கும் அவர்,  படத்தில் எந்த அளவுக்கு காமெடி இருக்கிறதோ, அதே அளவுக்கு குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் இருந்ததால், உடனே சம்மதம் தெரிவித்தாராம்.
 
மேலும், பிளாஷ் பேக் காட்சி ஒன்றில் சித்ரா பள்ளி மாணவியாகவும், டெல்லி கணேஷ் மாணவராகவும் வருகிறார்களாம்.
 
இந்த காட்சிக்கு ஒட்டு மொத்த திரையரங்கமே வயிறு வலிக்க சிரிப்பது உறுதி என்று கூறும் இயக்குநர் நவீன் மணிகண்டன்,
“யாரையும் சாதாரணமாக நினைக்க கூடாது, யார் எப்போது எந்த நிலைக்கு வருவார்கள் என்றே தெரியாது” என்பதை கருவாக வைத்து, காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தையும் சேர்த்து ஜாலியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறேன்.
 
குட்டி சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். படத்தில் காமெடி ஹைலைட்டாக இருக்கும்.
 
ராகுல் தாத்தா, ராமர் ஆகியோரது காமெடி பெரிய அளவில் பேசப்படும்.
 
படம் முழுவதும் நாகர்கோவிலில் படமாக்கியிருக்கிறோம். பாடல்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் நாகர்கோவிலில்தான் நடத்தினோம்.
 
அதே சமயம், ‘நாகர்கோவிலா இது!’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இதுவரை திரைப்படங்களில் காட்டாத லொக்கேஷன்களை தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறோம்.
படம் ரொம்பவே கலர்ஃபுல்லாக இருக்கும். எப்படிப்பட்ட மனநிலையோடு தியேட்டருக்குள் வந்தாலும், படம் முடிந்து வெளியே செல்லும் போது ரசிகர்கள், 
 
சந்தோஷமான மனநிலையோடு செல்வார்கள், அதை மனதில் வைத்துதான் இந்த படத்தின் திரைக்கதையும், காட்சிகளையும் நான் வடிவமைத்திருக்கிறேன்.” என்றார்.
 
லோகேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கவி கார்கோ எழுதியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்க,
 
பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார். சாஜித் எடிட்டிங் செய்திருக்கிறார். மக்கள் தொடர்பு பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
 
தற்போது, முழு படப்பிடிப்பும் முடிந்து பின்னணி வேலையில் இருக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் விஜய் டிவியின் கலகல்லப்போவது யாரு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
 
விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கும் படக்குழு அதை தொடர்ந்து படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *