எவனவன் @ விமர்சனம்

eva 1

ட்ரீம்ஸ் ஆன் ஃபிரேம்ஸ் சார்பில் தங்கமுத்து , பி கே சுந்தர், கருணா, நடராஜ் ஆகியோர் தயாரிக்க, 

முகில், நயனா, சரண், வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் நடிப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி நட்டிகுமார் இயக்கி இருக்கும் படம் எவனவன் . ரசிகனுக்கு எவன் இவன்? பார்க்கலாம் . 
காதலி (நயனா) குளிக்கும் காட்சியை மொபைல் போனில் காதலன் (முகில்) படம் எடுத்து வைத்திருக்க, அது தொலைந்து போகிறது . அதை எடுக்கும் ஒருவன் (சரண்) அதில் இருக்கும் வீடியோவைப் பார்த்து விடுகிறான். 
”நான் சொல்கிற வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் உன் காதலியின் வீடியோவை யூ டியூபில் ஏற்றி உலகம் பார்க்கச் செய்வேன்” என்கிறான் . 
eva 2
காதலியின் மானம் காப்பாற்ற வேண்டி அப்படியே செய்கிறான் காதலன்.
மனைவி பற்றிய தப்பான எண்ணத்தை அதிகாரிக்கு ஏற்படுத்துவது , ஒரு அரசியல்வாதி மீது செருப்பு வீசச் சொல்வது இப்படி பல வேலைகள் . 
அவன் ஏன் அப்படி செய்யச் சொல்கிறான் ? அந்த நபர்களுக்கும் போனை எடுத்தவனுக்கும் என்ன சம்மந்தம்? மேற்படி செயல்களை செய்ய அவன் , இந்தக் காதலனை பயன்படுத்துவது ஏன் என்பதே எவனவன் . 
கேமரா வைத்த செல்போன், கொஞ்சம் வக்கிர மனம், கொஞ்சம் அலட்சியம் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை சொல்லும்படியாக ஆரம்பிக்கும் படம் ,
eva 3
ஒரு நிலையில் வில்லன் போல தெரிந்தவனை நல்லவனாக காட்டும் விதம் அருமை . சின்னச் சின்ன திருப்பங்கள் ஈர்க்கிறது 
நடிப்பில் முகிலும் சரணும் சிறப்பு . அதே போல விசாரணை அதிகாரிகளாக வரும் வின்சென்ட் அசோகன் , சோனியா இருவரும் நன்றாக நடித்துள்ளனர் . நாயகி ஓவர் டோஸாக இருக்கிறார் . பாடல்கள் ஈர்க்கவில்லை .
எடுத்துக் கொண்ட கதையை தன்னால் முடிந்தவரை சிறப்பாக சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் நட்டிகுமார் . 
ஆனால் வெற்றிக்கு அது போதுமா?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *