குலேபகாவலி @ விமர்சனம்

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஆர் ராஜேஷ் தயாரிக்க, பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, நடிக்க ,

இதற்கு முன்பு கத சொல்லப் போறோம் என்ற அற்புதமான படத்தை இயக்கிய கல்யாண் இரண்டாவதாக எழுதி இயக்கி இருக்கும் படம் குலேபகாவலி . 

மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தின் தலைப்பு இது . அந்த குலேபகாவலி சாதனை சரித்திரம் . இந்த குலேபகாவலி அறிவாளியா ? இல்லை பிக்காலியா ? பார்க்கலாம் . பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1945 ஆம் ஆண்டு ஒரு வெள்ளைக்காரன் இந்தியாவில் இருந்து  ஒரு பெரும் வைரக் குவியலை கவர்ந்து கொண்டு இங்கிலாந்து கிளம்ப , அவரது உதவியாளர் ஒருவர் அந்தப்  பெட்டியை தனக்கென ஒதுக்கி விடுகிறார் . 
 
அவர் அதை குலேபகாவலி கோவில் என்ற கிராமத்துக் கோவில் மதில் சுவர் அருகில் புதைத்து, ஒரு வேல் சொருகி அதை சின்னக் கோவில் ஆக்கி விடுகிறார் . 
 
அவரது பேரன் (மது சூதன ராவ்) இப்போது அதை எடுக்க முயல்கிறார் . அவருக்கு நண்பர் ஒருவர் ( ஆனந்த் ராஜ்) உதவுகிறார் . ஒரு இன்ஸ்பெக்டரும் (சத்யன்) அவர்கள் அணி . சிலை திருட்டுக் கும்பல் ஒன்றின் தலைவன் (மன்சூர் அலிகான்) மற்றும் முக்கிய தளபதி ( பிரபுதேவா) , ஒரு கார் திருடி (நடிகை ரேவதி) ஆகியோர் தங்களுக்குள் ‘சவால்’ காட்டிக் கொண்டு இருந்த நிலையில் ஒருவரோடு ஒருவர் மோதி , திறமை காட்ட.. 
 
ஒரு நிலையில் எப்படியாவது வைரப் புதையலை எடுக்க எல்லோரும் முயல்கிறார்கள் .  ஒரு கிராமத்து தாதாவும்  (மொட்டை ராஜேந்திரன்) உண்டு
 
கிராமத்து  தெய்வ நம்பிக்கைகள் நிறைந்த ஊர் அது .
 
வைரம் எடுக்கப் பட்டதா ? பெட்டியில் வைரம்தான் இருந்ததா ? யாருக்கு வைரம் போனது என்பதே இந்தப் படம் . ஆரம்பத்தில் வரும் பிரிட்டிஷ் இந்தியா காட்சி அசத்தல் . 
 
பிறகு நிகழ் காலத்துக்கு வந்து இயல்பாக பயணிக்கிறது . ஆங்காங்கே காமெடி இருக்கிறது . ஒவ்வொரு சின்ன கேரக்டருக்கும் இறுதியில் டைரக்டர் கல்யாண் கொடுக்கும் பினிஷிங் டச் சிறப்பு . 
 
ரேவதி அறிமுகக் காட்சி அபாரம் . எதிர்பாராத திருப்பம் . 
 
பிரபு தேவா மேலும் பல புதிய  நடன அசைவுகளுடன் அதே வேகத்தில் ஆடி அசத்துகிறார் . ஹன்சிகா , கவர்ச்சி பொம்மை . கார்   திருடி கேரக்டரில் அசத்தலாக நடிக்கிறார் ரேவதி . 
 
ராஜேந்திரன் சிரிக்க வைக்கிறார் . மன்சூரும் ஒகே . 
 
எல்லோரிடமும் ஏமாந்த சபதம் போட்டுக் கொண்டே இருக்கும்  சத்யன் புன்னகைக்க வைக்கிறார் 
 
கதிரின் கலை இயக்கம் அட்டகாசம் . குறிப்பாக பாடல் காட்சிகளின் பின்னணியில் கண்கவர் கலை இயக்கம் . 
ஆர் எஸ் ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . சேசிங் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார் 
 
விவேக் மற்றும் மெர்வின் இருவரின் இசையும் துள்ளல் மூட் தருகிறது . 
 
இன்னும் சிறப்பான கதை , திரைக்கதை இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும் . 
 
எனினும் ஜஸ்ட் லைக் தட் இயல்பாக பயணிக்கும் வகையில்  கலர்ஃபுல்  கலாட்டாவாக கவனம் கவர்கிறது இந்த குலேபகாவலி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *