“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படம்”- இயக்குனர் சுசீந்திரன்

சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார்.
 
படத்தை பற்றிக் கூறும்  இயக்குனர் சுசீந்திரன் , “ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன்.
 
ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார்.
அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார்.
 
அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது. 
 
 நல்ல படித்த , பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் ,
— என்று யோசிக்கும் போது தோன்றிய கதைதான் இப்படத்தின் கதை. இக்கதையை நான் விஜய் , அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன்.
 
அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.
 
ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.  
இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில், 
 
ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
 
எனக்கும் அந்த ஆசை இருந்தது அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார்.
படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் “என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *