கூர்க்கா @ விமர்சனம்

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியீட்டில் யோகி பாபு, எலிசா , சார்லி, மயில்சாமி, ராஜ் பரத் நடிப்பில் டான் சாண்டி இயக்கி இருக்கும் படம் கூர்க்கா.  

கூர்க்கா இன ஆண், வட சென்னைப் பெண் கலப்பு மணத்தில் பிறந்த பாரம்பரிய வழி வந்த பகதூர் பாபு( யோகி பாபு)வுக்கு போலீஸ் ஆக ஆசை . டென்ஷன் போலீஸ் அதிகாரி ( ரவி மரியா)  ஒருவரால் தகுதியற்றவராக அறிவிக்கப் பட்ட நிலையில் , மால் ஒன்றில் செக்யூரிட்டியாக சேருகிறாந பகதூர் . அங்கே சீனியர் செக்யூரிட்டி ஒருவர் ( சார்லி)
 
அமெரிக்க துணைத் தூதர் பெண் ஒருத்தியை ( எலிசா)  டாவடிக்கிறான் பகதூர் பாபு.
 
போரில் பாதிக்கப்பட்ட மற்றும் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை அரசு பராமரிக்கும் விதத்தால் அதிருப்தி அடைந்த இருவர் , கமிஷனர் , மந்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை, இலவச ஆஃபர் ஆசை காட்டி ஒரு குறிப்பிட்ட நாளில் பணயக் கைதிகளாக பிடித்து  வைத்து மிகப் பெரும் தொகையை கேட்கிறார்கள் . 
 
இந்த நிலையில்தான் பகதூரும் அவனது சீனியரும்,  தீவிரவாதிகளின் கவனத்தில் இல்லாமல் மாலுக்குள் இருப்பது காவல்துறைக்கு தெரிய வர, அவர்கள் உதவியை நாடுகிறது . 
 
போலீசாரால் புறக்கணிக்கப்பட்ட பகதூர் பாபு போலீசின் கோரிக்கையை ஏற்று மக்களை காப்பாற்றினானா?  இல்லை மீண்டும் போலீஸ் அவனை தகுதியற்றவனாக முடிவு செய்யும் நிலைக்கு ஆளானானா ? என்பதே கூர்க்கா . 
 
கூர்க்கா இன பின்னணியில் ஒரு கதை என்பது சுவாரஸ்யம் . அதை விளக்கும் ஆரம்பக் காட்சிகள் அருமை . இங்கே தெரிகிறார் இயக்குனர் சாம் அன்டன் . 
 
யோகி பாபுவின் காமெடி கமெண்டுகள் சிரிக்க வைக்கின்றன . 
 
தவிர, நோட்டாவை விட கம்மியாக ஓட்டு வாங்கிய கட்சியின் ஆணவப் பிரமுகர், பெண் சீடர்கள் புடை சூழ் சாமியார் , டி ஆர் பி க்கு அலையும் டி வி ஓனர் என்று பல சட்டயர் சமாச்சாரங்களும் உண்டு .
 
 
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு சிறப்பு . 
 
ராஜ் ஆர்யனின் பின்னணி இசை ஒகே 
 
காமெடி என்ற பெயரில் பாட்டி உட்பட பலரையும் வாடி போடி என்று யோகிபாபு பேசுவது ஓவர் . 
 
காட்சிகள் பலவற்றின் நீளம் அதிகம் . 
 
கிளைமாக்ஸ் பகுதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
 
எனினும் தியேட்டர் கலகலக்கிறது 
 
கூர்க்கா 3.25/ 5 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *