தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’

தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ நடத்தும் இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க  விழா
 
மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர் . 
 
இளையராஜா  விற்பனையை துவக்கி வைத்தார் ..
 
நிகழ்ச்சியில் பேசிய விஷால் ” சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த
 
மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
இந்நிகழ்ச்சி 2019பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல.
 
மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது.
 
இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது.
 
அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.
 
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள்
 
இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.
 
இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு
 
தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
 
அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும்,
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். 
 
விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.
 
மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று
 
அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம்.
 
அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம்.
 
பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு
 
விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *