உதயநிதியின் ‘இப்படை வெல்லும் ‘

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் , மஞ்சுமா மோகன்,  ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி , ஆர் கே சுரேஷ் நடிப்பில் , 

தூங்கா நகரம் , சிகரம் தொடு படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’ . 
 
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் முன்னோட்டமும் பாடல் ஒன்றும்  திரையிடப்பட்டது . 
 
“யாருக்கு எப்போ எப்படி பிரச்னை வரும்னு யாருக்கும் தெரியாது . ஆனா அப்போ அதில் இருந்து தப்பிக்க பதினைஞ்சு அங்குலம் கொண்ட கை பலம் தேவை இல்லை .
 
மூளையைப் பயன்படுத்தினால் போதும்” என்று சொல்லும் முன்னோட்டம்,  ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவில் இமான் இசையில் கே எல் பிரவீன் படத் தொகுப்பில் மிக ஈர்ப்பாக இருந்தது . 
 
உதயநிதி இன்னும் ஸ்லிம்ஆகி இருக்கிறார். இன்னும் சிறப்பாக ஆடுகிறார் . சண்டைக் காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன . மஞ்சுமா மோகன் மிக அழகாகத் தெரிகிறார் . 
 
இயக்குனர் கவுரவ்  இதை நல்ல காதல் காமெடி ஆக்ஷன் படமாக உருவாக்கி இருப்பது தெரிகிறது . 
 
பாடல் இனிமை . காட்சியும் அழகு . 
 
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் “கவுரவ் சொன்ன கதை பிடித்து,  தயாரிக்க முடிவு செய்த நிலையில், 
 
அவர் ‘உதயநிதி ஹீரோவாக  நடிக்க வேண்டும் ‘ என்றார் . அவர் வெளிப் படங்கள் செய்து இருக்காத நிலையில்,  ஒத்துக் கொள்வாரா என்ற தயக்கத்துடனே கேட்டோம் . அவர் ஒத்துக் கொண்டார் . உதயநிதி நடிக்கும் முதல் வெளிப் படத்தின் தயாரிப்பாளர் நாங்கள் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி .
 
படம் மிக சிறப்பாக  காதல், காமெடி , செண்டிமெண்ட் , ஆக்ஷன் கலந்து வந்துள்ளது ” என்றார் . 
 
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு நாதன் ” லைக்கா புரடக்ஷன்ஸ் , உதயநிதி ஸ்டாலின் , கவுரவ் என்ற காம்பினேஷன் கேட்கும்போதே உற்சாகமாக இருந்தது .
 
அந்த உற்சாகத்தோடு தீவிரமாக உழைத்து உள்ளோம் . கடமையை  செய்து உள்ளோம் . பலன் கிடைக்கும் ” என்றார் . 
 
எடிட்டர் பிரவீன் பேசும்போது ” ஸ்கிரிப்டை படித்த போது கொஞ்சம் நீளத்தைக் குறைக்கலாம் என்று தோன்றியது . ஏனென்றால் எடுத்து ஏன் வீணாக்க வேண்டும் ?
 
நான் சொன்ன உடனே ஒத்துக் கொண்டு குறைத்துக் கொடுத்தார் கவுரவ்  . அந்த டீம் ஒர்க்கே படம் நல்லபடியாக அமையக் காரணம் ” என்றார் . 
 
நடிகர் டேனியல் பாலாஜி  தன் பேச்சில்  “இந்தப் படத்தில் என் கேரக்டர் சஸ்பென்ஸ் ஆனது . கிட்டதட்ட மூன்று கெட்டப் .   
 
‘தான்  சொன்னதை மட்டும் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் உள்ளவர் இயக்குனர் கவுரவ் . நான் என் தரப்பிலும் இம்ப்ரூவ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் .
 
சவாலாக இருந்தது . ஆனால் நன்றாக வந்தது ” என்றார் . 
 
ஆர் கே சுரேஷ் பேசும்போது “இந்தப் படத்தில் என் கேரக்டர் மிக வித்தியாசமானது . சண்டைக் காட்சியில் பல சமயம் நான் உதயநிதியை நிஜமாகவே அடித்து விட்டேன்.
 
ஆனால் அவர் பொறுத்துக் கொண்டார் . சூரியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் ” என்றார் . 
 
நடிகர் சூரி தன் பேச்சில்  ” இயக்குனர் கவுரவ் என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்பார் . ஸ்பாட்டில் ஒரு வாத்தியார் மாதிரி இருப்பார்.
 
மஞ்சிமா மோகனை மிக அழகாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு நாதன் .
 
சண்டாளி…. அந்த பொண்ணு என்னா அழகா தெரியுது! ” என்றார் 
 
ராதிகா பேசுகையில் ” இந்த கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார் இயக்குனர் கவுரவ் . அது எனக்கு  சந்தோஷமாக இருந்தது .
 
இந்தப் படத்துக்காக பஸ் ஓட்டக் கற்றுக் கொண்டு நிஜமாகவே ஓட்டி நடித்தேன் . 
 
உதயநிதி சிறுவயது முதலே நான் அறிந்தவர் . அவர் நடித்த ஒகே ஒகே படம் பார்த்து இருக்கேன் .
 
இந்தப் படத்தில் அவர் தனக்கே உரிய பாணியில் நடித்து உள்ளதை உணர்ந்தேன் .படம வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் 
 
இயக்குனர் கவுரவ் தன் பேச்சில் “உதயநிதி ஸ்டாலின் , சூரி . இமான் மூவரையும் முதன் முதலில் ஒன்றிணைத்தது நான்தான் .
 
ஆனால் அவர்கள் இணைப்பில் முன்பே படங்கள் வந்து விட்டன . 
 
ராதிகா மேடம் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாத கேரக்டர் ஒன்று . எனவே அவரையே கொண்டு வந்தேன் . 
 
டேனியல் பாலாஜி அசத்தி இருக்கிறார்.  சூரி ஆர் கே சுரேஷ் எல்லாரும் அப்படியே ” என்றார் .
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது” படத்தில் முதல் பத்து நிமிடம் நான் வர மாட்டேன் . டேனியல் பாலாஜி ராஜ்ஜியம்தான் . படம பார்க்க வந்த என் நண்பரின் மகன், 
 
‘ அங்கிள் .. இந்தப் படத்தில் நீங்கள் ஹீரோ இல்லையா ?’ என்று கேட்டு விட்டான் . அந்த அளவு டேனியல் பாலாஜிக்கு ஸ்கோப் . அவரும் அசத்தலாக நடித்துள்ளார் . 
 
இந்தப் படத்தில் இதுவரை நான் பார்த்திராத விதம் விதமான கேமராக்கள் எல்லாம் பயன்படுத்தினார்கள் .
 
ஒரே ஷாட்டை ஆறு ஏழு கேமராக்கள் படம் பிடிக்கும் . காலுக்கு அடியில் கூட ஒரு கேமரா ஓடும் . 
 
இப்படி எல்லாம் கேமரா இருப்பதே இப்போதான் எனக்கு தெரியும் . 
 
சண்டைக் காட்சியில் டேனியல் பாலாஜி அடிப்பது போல அழகாக நடிப்பார் . ஆனால் ஆர் கே சுரேஷ் நிஜமாகவே அடிப்பார் . படத்துக்காக வாங்கினேன் . 
 
இமான் அற்புத பாடல் இசையும் பின்னணி இசையும் கொடுத்து உள்ளார் . மஞ்சிமா மோகன் சிறப்பாக நடித்த்துள்ளார் . 
 
சூரி சீரியஸ் நடிப்பில் கண் கலங்க வைப்பார் . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *