நிஜமான வெற்றி விழா கண்ட ‘இரும்புத் திரை’

விஷால் சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கிய இரும்புத் திரை படம் நிஜமாகவே வெற்றிப் படமாக அமைந்தது.

இதை அடுத்து படத்தின் நூறாவது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது .

இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், சமந்தா,குட்டிபத்மினி,லலிதகுமாரி, உட்பட ஐந்து பெண்கள் குத்துவிளக்கு ஏற்றினர்

விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுக்கும் விஷால், 

இந்த நிகழ்ச்சியிலும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகையாக வழங்கினார்.விஷாலின்  தந்தை ஜி.கே.ரெட்டி, விஜய்யின்  தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “எவனொருவன் தாய் தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான்.

முன்பெல்லாம்  பல திரைப்படங்கள் நூறு நாட்கள் வரை ஓடும். ஆனால் இப்போது அது ஒரு சில படங்களுக்கு மட்டுமே அமையும்.

ஜில்லாவிற்கு பிறகு இந்த படம்தான் நூறு நாட்களை எட்டியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் போகவில்லை என்றாலும், அதை மதிக்கிறேன். திரையரங்க உரிமையாளர்கள் சிறு படங்களை மதிப்பதேயில்லை. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இன்னும் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். விஷால்….  உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது.

திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, எதிர்த்து போராடவில்லை என்றால் அடையாளத்தை இழந்து விடுவோம்.

ஆகையால், அதை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது

மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். மக்களாகிய நீங்கள் திருந்தி விட்டு, பிறகு வழிநடத்த வாருங்கள் என்று எங்களிடம்  சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்” என்றார்.

ஆர்.கே.செல்வமணி தனது பேச்சில், “இப்போதுள்ள ஆட்சியாளர்கள் யாரும் காந்தியோ நேருவோ இல்லை.

ஆகையால், சினிமா துறைக்கு நன்மை செய்வதுபோல் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் விஷால் அரசியலுக்கு வருவதைநான் வரவேற்கிறேன் ” என்றார் 

இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் பேசும்போது, ” இப்படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவதற்குள் விஷாலுக்கு 3 பிறந்தநாள், 3 தேர்தல் மற்றும் 3 வேலைநிறுத்தம் பார்த்துவிட்டேன்.

1௦௦ நாள் விழா வரை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. பல மேடைகளில் சொல்லிவிட்டேன் இப்படத்தின் கதை என்னுடைய சொந்த அனுபவம். இந்த கதையின் மீது முதலில் நம்பிக்கை வைத்தது விஷால்தான்.

அடுத்தது சமந்தா. பிறகு யுவன் ஷங்கர் ராஜா தான். அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகப் பெரிய கனவாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.பிறகு, அர்ஜுனிடம் இந்த கதையை சொன்னேன். அவர் எப்பொழுது நடிக்க ஒப்புக் கொண்டாரோ அப்போதே இப்படம் வெற்றியடைந்து விடும் என்று நினைத்தேன்” என்றார் 

அர்ஜுன் தனது பேச்சில், “15௦ படங்களில் நான்  நடித்து விட்டாலும், அதில் நிறைய 1௦௦ நாட்கள், வெள்ளிவிழா பார்த்திருந்தாலும், கடந்த 1௦, 15 வருடங்களில் 1௦௦ நாட்கள் பார்ப்பது  என்பது அரிது.

இந்த படத்துக்கு  1௦௦ நாள்  விழா பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் இப்படத்தின் கதையை கேட்கும்போது வில்லன் கதாபாத்திரம் என்றதும், கொஞ்சம் யோசித்தேன்.

நாட்டுப்பற்று படங்களில் நடித்துவிட்டு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பது, சரியாக வருமா என்று யோசித்தேன். ஆனால் ‘திருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும், இங்கு நீங்கள் எல்லாம் திருடனுங்க, நான் தேள், நான் கொட்டுனா போத்திகிட்டு இருக்கணும்’ என்ற வசனத்தைக் கேட்டவுடன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அது தவிர ஒரு படம் நன்றாக வருவதற்கு இயக்குநர்தான் காரணம்.

சிறு வயதிலிருந்தே விஷாலை எனக்குத் தெரியும். நான் வேதம் படம் இயக்கிக் கொண்டிருக்கும்போது தான் ஜி.கே.ரெட்டி விஷாலை அழைத்து வந்தார்.

என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அப்போதுதான் நான் அவர் அப்பாவிடம் கூறினேன்.

உங்க பையன் நிறம் குறைவாக இருந்தாலும் முக அமைப்பு ஒரு கதாநாயகனைப் போல் இருக்கிறது என்று. இன்று அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.இன்னொன்று சொல்கிறேன் . தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளணும் என்று யாரும் சொல்லக் கூடாது .

எங்க இருந்தும் வந்த யார் வேண்டுமானாலும் ஆளலாம் . அவன் இந்தியனா இருக்கணும் . அது போதும் ” என்றார் 

விஷால் தன் பேச்சில், “சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள்தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் இரும்புத் திரையும். 

இந்தப் படத்தின் கதையை என்னிடம் முதன் முதலில் சொன்னது எடிட்டர் ரூபன்தான் . அவர் சொன்னதால் இந்தக் கதையைக்கேட்டேன்.

அவர் சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.  ரூபன் மட்டும் இல்லாவிட்டால் , இந்த படம் இந்த வெற்றி, இந்த விழா , இந்த மேடை எதுவும் இல்லை 

எடிட்டர் ரூபன்

யுவன் என்னுடன் பிறந்த சகோதரன் மாதிரி. ஒவ்வொரு படத்துக்கும் அவரிடம் போகும்போது எப்படியாவது காப்பாத்தி விடுப்பாஎன்று கேட்பேன் . அவரும் காப்பாற்றி விடுகிறார் 

நான் முதலில் அர்ஜுனிடம் தன் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 1௦௦ ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து ,

என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு shaving kit –ம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன் தான்.

சினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வரமாட்டார்கள்.

அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா ” என்றார் .சமந்தா பேசும்போது, “இவ்விழா ஒரு உண்மையான கொண்டாட்டம். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குட்டிபத்மினி, லிங்குசாமி, மன்சூரலிகான், மிஷ்கின், சுந்தர்.சி.,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் FEFSI நிர்வாகிகள்,

மற்றும் இரும்புத்திரை படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இப்படத்தில் பணியாற்றிய  தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் அர்ச்சனா AGS, லைக்கா குழுமம் GM MR.நிஷாந்த்,

ஐயுப்கான், யுவன்சங்கர்ராஜா, மனோபாலா, A.L.உதயா, பி.கண்ணன், பிரேம், மாரிமுத்து, ஆதவ் கண்ணதாஸ், ரோபோ ஷங்கர், லலிதகுமாரி, Think Music, ஹேமச்சந்திரன், சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ், ராமச்சந்திரன், மீரா மிதுன், கமலா சினிமாஸ், பிரவீன்காந்த்,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்,தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், FEFSI உறப்பினர்கள்,

மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும் விஷால் அனைத்து மாநில ரசிகர்கள் கலந்துகொண்டனர் விழாவை சிறப்பித்தனர்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

ஏனென்றால், கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார் விஷால்.அப்பெண் பிறந்தது முதல் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே,   படத்தின் எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார்.

ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசு என்று விஷால் முடிவு செய்ய , வெற்றி விழாவுக்கு முந்தைய நாளே,   அந்தப் பெண் விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் கேடயத்தை வழங்கினார்.  

விஷாலின் பிறந்த நாள் அன்றே இரும்புத் திரை வெற்றி விழா அமைய , விழாவை அடுத்து பிறந்த நாளை ஒட்டி தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன், 

 அதே கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்தார் .அப்போது பேசிய விஷால் , “வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இந்த மேடை மட்டும்தான் வித்தியாசம் .

உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறிப் பேசுகிறேன்.  இது என்னுடைய வெற்றி அல்ல ;

உங்களுடைய வெற்றி. ஒரு விஷயத்தை  கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்குப் போகக் கூடாது.

நடிகனாக நல்லா சம்பாதித்து ‘நாமளும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டுப் போய்விடலாம்.

ஆனா வீட்டுக்குள் போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும்.  அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களைப்  பார்த்து சும்மா இருக்க முடியாது . அப்படி இருந்தால் அது பிணத்துக்கு சமம். ஏழை பெண்ணோ,ஆணோ,கல்வி உதவி கேட்கும் குழந்தையோ அவர்களுக்கு உதவும் போது முன்பின் தெரியாதவர்கள் வாழ்வை மாற்ற உதவியுள்ளோம் என்ற சந்தோசம் வருகிறது.

இந்த சமூக சேவை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சாயம் என்று கூறுகிறார்கள். 

அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்கு தெரிந்துவிடும். இது நிஜ வாழ்க்கை.  இதில் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை.

நாட்டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ளன. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம். 

ஆனால் மக்கள் பிரச்சனையைத்  தீர்த்து வைக்க வேண்டும் . மக்கள் பிரச்சனை வெவ்வேறு பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் அவற்றை அதை தீர்த்து வைக்கும் பிரதிநிதியே அரசியல்வாதி.  அரசு வழக்கறிஞர்,அரசு ஆசிரியர் போன்று மக்களால் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அரசியல்வாதி.

ஆனால் நம் பார்வையில் அரசியல்வாதி என்பது சம்பாதிக்கும் பதவியாக சினிமாவிலும் நிஜத்திலும் நாம் நினைக்கிறோம்.

அதையெல்லாம் தாண்டி பத்து வருடங்களுக்கு முன்னாடி ஆரம்பிக்கப்பட்டது என் ரசிகர் மன்றம். என் ரசிகர்களிடம் நான் கூறுவது…..

என் படம் வரும் போதெல்லாம் வெளியில் தெரிவதைவிட பிறருக்கு பிரச்சனை ஏற்படும் போது அவர்களுக்கு உதவுங்கள்.  அது தொடர்பாக என்னிடம் கொண்டு வாருங்கள். 

அப்போதுதான் படம் வருவதை விட ரொம்ப சந்தோசப்படுவேன் .வெள்ளம் வரும் போது யாருமே செல்லாத பகுதிக்கு என்னுடன் படகில் வந்து எதையும் பொருட்படுத்தாமல் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நீங்கள் ஒரு நல்லது செய்தால் அதைப் பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் நல்லது செய்வார்கள். இந்த மக்கள் நல இயக்கம் அரசியலை நோக்கி செல்லும் இயக்கம் அல்ல.

நான் வணங்கும் இரண்டு கடவுள் அன்னை  தெரசாவும்,அப்துல் கலாம் ஐயாவும் . இளைய தலைமுறையிரால் மட்டுமே நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என்பது  அவர்களின் கனவு .

அது கண்டிப்பாக நிறைவேறும். அப்துல்கலாம் ஐயா அவர்களை பார்த்தால் அறிவும்,அன்னை திரேசாவை பார்த்தால் அன்பு ஞாபகம் வரும்.

என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் போது துணிவுதான் ஞாபகம் வரும். என் சொத்து ஒண்ணு  நீங்க…. இன்னொன்னு உள்ளிருக்கும் தன்னம்பிக்கை.

ஆர்.கே நகரில் விஷால் ஏன் நிற்கிறார் என்று கேட்டார்கள் . ஏன் நிற்க கூடாதென்று திருப்பி கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. நல்லது பண்ண வேண்டும் என்று யார் நினைத்தாலும் போட்டியிடலாம்.  அதற்கு பெயர் எம்.எல்.ஏ என்றாலோ அமைச்சர் என்றாலோ கட்சி என்றாலோ தப்பே இல்லை.

கட்சி தொடங்குவது தப்பில்லை . நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கேன்…உங்களுக்கு பின்னால் இருக்கேன் என்பதை கூறவே .

உங்களில் ஒருத்தனான நான் போகும் பாதை நீங்க எல்லாரும் பார்க்கும் பாதைதான்.அந்த பாதையை சுத்தம் செய்வது தான் என் நோக்கம்.

இரண்டு வாரத்திற்கு முன் ஒரு பாக்கியம் கிடைத்தது சன் டி.வி யில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

ஏழு வருடத்திற்கு முன் வெறும் பதினைந்தாயிரம் கடனுக்காக முதலாளியிடம் உழைத்து,உழைத்து மாதம் வெறும் 750 ரூபாய் மட்டுமே அந்த குடும்பத்திற்கு கிடைக்கிறது.

அவர்களை மீட்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றினோம்.அவர்களின் கண்ணீரை துடைத்து கொத்தடிமை என்ற முறையை மாற்றி அவர்கள் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கும் போது நான் தெரியவில்லை நீங்கள் தான் தெரிகிறீர்கள்.

நீங்களும் என்னுடன் கை கோர்த்து நல்லது செய்யும் போது எந்த கேள்வியும் வராது. அப்படி செய்யும் போது உங்களை பாராட்டுவார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார்கள்.

என் வாழ்வில் நடந்த விஷயங்களை மட்டுமே உங்களிடம் கூறுகிறேன். சோதனை இல்லாமல் சாதனை வராது. நான் மூன்றரை வருடத்திற்கு முன் கூறினேன்……

கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம் என்று.  அதை அவசரத்தில் கூறவில்லை. என் கனவும் அதுதான். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை  சந்திப்பேன்.” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *