இரு முகன் @ விமர்சனம்

iru-99

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு  தமீன்ஸ் தயாரிக்க, அவுரா  பிலிம்ஸ் சார்பில் மகேஷ்  கோவிந்தராஜ் வெளியிட, 

விக்ரம் (இருவேடம்) நயன்தாரா , நித்யா மேனன் , நாசர், தம்பி ராமையா நடிப்பில் ஆனந்த ஷங்கர்  இயக்கி இருக்கும் படம் இரு முகன் .
 இவன் வெறும் முகனா ? திருமுகனா ?  பார்க்கலாம் .
சர்வதேச போதைப் பொருள் மற்றும் போலி  மருந்துகள் தயாரிப்பு மற்றும்  கடத்தல் மாஃபியாவின்  தலைவனான லவ் என்பவனை, 
இந்திய  ரா உளவுப் பிரிவு அதிகாரியான அகிலனும் (நாயகன் விக்ரம்) கணிப் பொறிப் புலியான அவன் மனைவி மீராவும் (நயன்தாரா ) சேர்ந்து 
iru-1
வெடி வைத்துத் தகர்த்துக்  கொல்கிறார்கள். . 
ஆனால் இதன்   எதிர்வினையாக , அந்த போதைப் பொருள் கும்பலின் மூலம் மீரா துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டு மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் விழுந்து போகிறாள் .
மனம் வெறுத்த அகிலன் உளவுப் பிரிவில் இருந்து விலகிக் காணாமல் போகிறான் , 
இது நடந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு வேறொரு விபரீதம் துவங்குகிறது 
உலகப் போரின் போது படை வீரர்களுக்கு மிருக வெறி வருவதற்காக ஹிட்லர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஸ்பீட் என்ற ஊக்க மருந்தை மீண்டும் தயாரிக்கிறது  ஒரு கும்பல் . 
iru-8
ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர் மூலம் இந்த மருந்தை வாய்க்குள் செலுத்திக் கொண்டால் , அதன் மூலம் மூளைக்குள் அட்ரினலின் அதிகம் சுரந்து , பய உணர்ச்சி எல்லை கடந்து , 
எதிரில் இருப்போர் எல்லாம் தன்னை கொல்ல வருபவர்களாகவே தெரிய , தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் உடல் முறுக்கேறி தினவெடுத்து ராட்சஷ பலம் வரும் . 
அடுத்த அஞ்சு நிமிடத்துக்குள் நூறு பேரைக் கூட அடித்தே கொல்லும் பலம் வரும் ( என்று படத்தில் சொல்கிறார்கள் ) 
அப்படி ஒரு சாம்பிளுக்காக 
 iru-9
மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஸ்பீட் மருந்து எடுத்துக் கொண்டு நுழையும் ஒரு முதியவர் ஐந்து நிமிடத்தில் தூதரகத்தையே துவம்சம் செய்கிறார் . 
அதன் மூலம் உலகுக்கு டெமோ காட்ட , பல்வேறு தீவிரவாத கும்பல்கள் அந்த மருந்துக்கு ஆர்டர் கொடுக்கின்றன 
மலேசியா தூதரகம் துவம்சம் செய்யப் பட்டதன் வீடியோ  பதிவைப் பார்க்கும் ரா  அமைப்பின் அதிகாரியான ஆருஷி (நித்யா மேனன் )  இதன் பின்னணியில் ‘லவ்’ இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார் 
அகிலன் வந்தால்தான் இதை சரியாக செய்ய முடியும் என்று ரா பிரிவின்  தலைமை அதிகாரி (நாசர்) முடிவு  செய்கிறார் . அகிலனை தேடிப் பிடித்து உருவேற்றுகிறார் . 
iru-4
தன்னால் ‘கொல்லப் பட்ட’ அகிலன் உயிரோடு இருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியாத அகிலன் , தன் மனைவியைக் கொன்ற அவனை முற்றாக ஒழிக்கும் வெறியோடு மீண்டும் பணியில் சேர்கிறான் . 
ஆருஷியோடு சேர்ந்து மலேசியா  சென்று பல நபர்களின் வழியே ஊடுருவி,  திருநம்பியான ‘லவ்’வை ( வில்லன் ‘ விக்ரம் ) சந்திக்கிறான். 
அங்கே ‘இறந்து போன’ தனது மனைவி மீரா ,’லவ்’வின் முக்கிய உதவியாளராக,  அடிக்கடி ‘ஸ்பீட்’  எடுத்துக் கொண்டு தனது கணிப்பொறித் திறமையின் மூலம் லவ் வுக்கு பெரும் பலமாக இருக்கிறாள் . 
தவிர அகிலனையே  அடித்து வீழ்த்துகிறாள் . 
iru-6
எல்லா தீயரவாதிகளுக்கும் அனுப்ப வேண்டிய மருந்துகளை தயார் செய்யும் லவ் அவற்றை அனுப்புவதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகளை செய்கிறான். 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இரு முகன் . 
படத்தின் ஈர்ப்பு மையமே,  லவ் ஆக நடிக்கும் வில்லன் விக்ரமின் முக பாவனைகள் , உடல் மொழிகள், தோற்றம் , கெட்டப் , பிஹேவியர் இவைதான் . 
இன்னொரு பக்கம் அகிலன் கதாபாத்திரத்தின் மூலம்  மனைவியை இழந்த விரக்தி,  வேலைக்கு வந்த பிறகு காட்டும் தீவிரம் , கவனமான அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதம் ….
 எல்லாமே அபாரம . இருமுகன் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குள்ளும் பல முகங்கள்  காட்டுகிறார் . 
 iru-5
தான் எப்போதுமே  ஒரு காதலுக்குரிய கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் விக்ரம் . சபாஷ் கென்னி !
அடுத்து நயன்தாராவின் குறையாத … அல்லது குறையவில்லை என்று நம்பப் படுகிற கவர்ச்சி . ஆனாலும் ஏ டி எம் வழியாக குறையும் பேங்க் பேலன்ஸ் மாதிரி , அது   காலி ஆவதும் தெரிகிறது 
நுண்ணிய எக்ஸ்பிரஷன்கள் மூலம் அடிக்கடி வாவ் சொல்ல வைக்கிறார் நித்யா . 
படமாக்கலில் அசத்துகிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். 
பாடல்களில் பலன் இல்லை என்றாலும் பின்னணி இசையில் சமாளிக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் . ராஜ சேகர்…. ராஜ ஒளிப்பதிவு . 
பின்னிப் பெடல் எடுக்கிறார் சண்டை இயக்குனர் அன்பறிவ். 
irun
கமல்ஹாசன் நடித்த விக்ரம் உள்ளிட்ட பல படங்களை நினைவு படுத்தும் வழக்கமான திரைக்கதைப் போக்கை தவிர்த்து இருக்கலாம் . நயன்தாரா உயிர் தப்பிய காரணத்தை புதுசாக யோசித்து இருக்கலாம் . 
ஒரு பெண்ணை செத்து விட்டார் என்று சொல்லி விட்டு பிளாஷ்பேக்கில் உடனடியாக டூயட்  ஆரம்பிப்பது எல்லாம் மிக குழந்தைத்தனமான  திரைக்கதை மற்றும் டைரக்ஷன் உத்தி .
நயனுக்கு இருக்கும் கிரேஸ் காரணமாக அந்த பாட்டு தப்பிக்கிறது . 
இப்படி எல்லாம் இல்லாமல் கதை  திரைக்கதையில் நிறைய முயன்று இருந்தால் இருமுகன் இன்னும் கூட அரும் முகனாக வந்து இருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *