பத்திரிக்கையாளர்களைப் பின்தொடர்ந்தரா நிக்கி கல்ரானி ?

nikki 4
RS இன்போடைன்மென்ட் எல்ரட் குமார் தயாரித்து, சரத் இயக்கி இருக்கும் படம் கோ 2 .
 
பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
‘டார்லிங்’ படத்தில்  பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிக்கி  கல்ரானி,  இந்தப்   படத்தில் கதாநாயகியாக  நடித்துள்ளார் 
 
 படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனைவரும்  நிக்கியின் நடிப்பை  பாராட்டுகின்றனர் .
 
” ஒரு  நடிகைக்கு  அழகு  மட்டும் முக்கியம் அல்ல. உழைப்பும் திறமையும் கட்டாயம் வேண்டும் .
 
nikki 1
ஒரு படத்தில் நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது.  புதுப்புது வேடங்களையும், பலப்பல கதாபாத்திரங்களையும் நான் தேடிச செல்வேன் .
அப்படி  சென்ற போது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தான் கோ 2.
 
லியான் ஜேம்ஸ் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் ரேடியோவிலும், ஐ டியுன்சிலும் தொடர்ந்து முதல் வரிசையை பிடித்து வருகிறது  இந்த பாடல்களின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
 
தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான  சூழ்நிலையில், அரசியலையும், ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் ,
nikku 2
நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். 
 
இந்தப்  படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில்  நடிக்கும் நான், அந்த கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய  வேண்டும் என்பதற்காக, பல நிஜ பத்திரிகையாளர்களைப்  பார்த்து,
அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம்,..
 
அட அவ்வளவு ஏன் … அவர்கள் எப்படி தங்களின் மைக்கை பிடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது முதல் கொண்டு, (யூ மீன்  பத்திரிக்கையாளர்கள் ?) அனைத்தையும் கற்றுக் கொண்டேன். 
nikki 5
என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகிறேன். 
 
மே 13 ஆம் தேதி  படம்  வெளிவரும் நாளை  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்கிறார் அழகாகத்   தமிழ் பேசும்  நிக்கி கல்ரானி 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →