காலக் கூத்து @ விமர்சனம்

மதுரை ஸ்ரீ கள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ,

எம்.நாகராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் காலக் கூத்து. படத்தின் கலைக் கூத்து எப்படி ? பேசலாம் . 

சிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள் ஈஸ்வரும்( பிரசன்னா) ஹரியும் (கலையரசன்) . ஹரிக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் ( சாய் தன்ஷிகா) காதல் . 
 
 ரேவதி என்ற ஒரு பெண் (சிருஷ்டி டாங்கே) ஈஸ்வரை விரும்புகிறாள். தன் காதலுக்கு ஹரியின் உதவியை நாடுகிறாள் . ஒரு நிலையில் அவளை ஈஸ்வரும் காதலிக்க ஆரம்பிக்கிறான் . 
இந்த நிலையில் அடாவடி பெண் கவுன்சிலர் ஒருவரின் தம்பி , இந்த நண்பர்களின் நெருங்கிய நண்பனின் தங்கையிடம் தவறாக நடக்க முயல, அவனை அடி பின்னி எடுக்கிறான் ஈஸ்வர் . 
 
கவுன்சிலர் மேயர் தேர்தலுக்கு நிற்கும் நிலையில் ஜெயிக்கும் வரை அமைதி காத்து அப்புறம் ஈஸ்வரை கொல்ல திட்டமிடுகிறது . 
 
ஒரு சூழலில் திடீர் என்று ரேவதி, ஈஸ்வரை புறக்கணித்து அப்பா பார்க்கும் நபரை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள். 
இந்த நிலையில் காயத்ரி வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் . விஷயம் தெரிந்து ஹரியும் காயத்ரியும் ஈஸ்வர் உதவியுடன்  ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள, 
 
அந்த அவமானத்தில் காயத்ரி வீட்டில் ஓர் எதிர்பாராத சம்பவம் . 
 
அந்த கோபத்தில் அவர்கள் ஹரியையும் காயத்ரியையும் தேட, அதே நேரம் தேர்தலில் ஜெயித்த பெண் மேயர் , ஈஸ்வரை கொலை செய்ய களம் இறங்க, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் . 
 
மதுரையை களமாகக் கொண்டு பயணிக்கும் இந்தப் படத்தில் மதுரைத் தமிழை மிக அட்டகாசமாக கையாண்டுள்ளனர் . நண்பர்களின் உடல் மொழிகளிலும் அப்படி ஒரு மதுரைத்தனம். 
நிறுத்தி நிதானமாக அழுத்தமாக ஷாட் வைக்கிறார் இயக்குனர் . 
 
அன்பறிவின் சண்டைக் காட்சிகள் பின்னிப் பெடல் எடுக்கின்றன. அபாரம் . அசத்தல் . 
 
கலை அரசன் மிக இயல்பாகவும் பிரசன்னா மிக அழுத்தமாகவும் நடித்து உள்ளனர் .
 
சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே இருவரும் ஒகே . 
 
ரேவதியின்(சிருஷ்டி டாங்கே)  ஈஸ்வர் மீதான காதல் ஒரு மெல்லிய கவிதையாய் ஆரம்பித்து மலர்கிறது . படத்தின் மிக உயிர்ப்பான கேரக்டர் அதுதான் . 
 
ஆனால் ஒரு நிலையில் அந்த கேரக்டரை சிதைத்துச் அழித்து விட்டார்கள் . படத்தின் பெரும் பலவீனம் அது . 
அடுத்து என்ன நடக்கும் என்று  யாராலும் யூகிக்க முடிகிற   நீட்சி மற்றும் திருப்பங்கள் காரணமாக  தரைக்கதை ஆகிக் கிடக்கிறது திரைக்கதை . 
 
தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகளில் பங்கப் பட்டு நிற்கிறது படத் தொகுப்பு . 
 
பார்த்து அலுத்துப் புளித்த காட்சிகளின் தொகுப்பாக இருப்பதால், 
 
காலக்கூத்து … வெறும் கூத்து . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *