காத்தாடி @ விமர்சனம்

கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க, 

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தன்ஷிகா , அவிஷேக் கார்த்திக்,  வி எஸ் ராகவன், நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், சம்பத் ,  பேபி சாதன்யா நடிப்பில் வந்திருக்கும் படம் காத்தாடி . நம்பி சுற்றலாமா ? பார்க்கலாம் .

வெளிநாட்டுக்குப் போய் பிழைத்துக் கொள்ள விரும்பும் பெட்டி கேஸ் திருடர்கள் இருவர் ( அவிஷேக், டேனி) அதற்கான பணத்துக்காக ஒரு சிறுமியைக் (பேபி சாதன்யா ) கடத்த , ஒரு பெண் இன்பெக்டர் ( தன்ஷிகா) அவர்களை மறிக்கிறார். 
 
ஆனால் அவள் நிஜ போலீஸ் அல்ல. திருடியே . மூவரும் சேர்ந்து குழந்தையைப் பறிகொடுத்தவருக்கு (சம்பத்) பொன் செய்து பணம் கேட்கிறார்கள் . அவன் பணத்தோடு வர , குழந்தையோ அவனோடு அனுப்பாதீர்கள் என்கிறது . 
 
ஏன் என்று காரணம் சொல்ல , இவர்கள் குழந்தையோடு ஓட , அவன் பணத்தோடும் பிறகு அடியாள் பலத்தோடும் துரத்த , அப்புறம் என்ன நடந்தது என்பதே காத்தாடி . 
 
திரைக்கதையில்  இதை  … 
 
 இயற்கைக் காட்சிகளை  போட்டோ எடுக்கும் ஒரு போட்டோகிராபரின் பார்வையில் ஒரு விபத்து நடக்கிறது . அவர் போட்டோ எடுத்த தாய் , மகள்  இருவரில் ஒருவர் (வினோதினி) இறக்கிறார் .
 
அந்த நிகழ்ச்சியை ஒருவர் பார்க்ககிறார் என்று ஆரம்பித்து சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் கதையில் சம்மந்தப்படுத்தி அசத்துகிறார் இயக்குனர் கல்யாண் . 
ஒரு காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் எல்லாம் வரலாம் அல்லவா ?
 
அப்படி ஒரு காட்சியில் சாதாரணமாக வரும் எல்லோருமே பின்னர் கதைப்படி முக்கியத்துவக் கதாபாத்திரங்களாக அமைந்தால் எப்படி  இருக்கும் ? அப்படி ஒரு  சிறப்பான திரைக்கதை . 
 
விபத்து , அம்மா இறப்பு, (கடத்தப்படும் சிறுமி),  காரில் இருந்து சிறுமியை கடத்தும் ஹீரோ,   மறிக்கும் பெண் போலீஸ் , அவள் போலீஸ் இல்லை என்பது, கடத்தியவர்களிடமே கெஞ்சும் சிறுமி , துபாய் நண்பன் இருக்கும் இடம் என்று , 
 
வரிசையாக திருப்பம் காணும் திரைக்கதை கடைசியில் ஆக்சிடென்ட் செய்தது யார் என்று சொல்லும் வரை அப்புறம் காளி வெங்கட்டுக்கு மார்ச்சுவரியில் அடிக்கும் அதிர்ஷ்டம் வரை , 

திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது .(ஊட்டிக்குப் போய்க்கிட்டே  திரைக்கதை எழுதினீங்களா கல்யாண்?)
 
காளி வெங்கட்டின் மகள் செண்டிமெண்ட்  அருமை   
 
ஜான் விஜய்யின் கிராம போன் கருவி பின் புலம் , அவரது பேச்சு, வி எஸ் ராகவனின் வண்டி,  என்று வித்தியாசமான விசயங்களுக்கும் பஞ்சமில்லை . 
 
 பேபி சாதன்யா பரிதாபம்  ஏற்படுத்தும் வகையில் நன்றாக நடிக்கிறார் . 
 
 
தன்சிகா பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார் . 
 

துபாய் கணவன் கேரக்டரில் முருகானந்தம் , வில்லன் கேரக்டரில் சம்பத் பொருத்தம் . 

 
டேனி கேப் விடாமல் பேசி அப்பப்போ சிரிக்க வைக்கிறார் . 
 
 
பார்த்து சலித்த பழைய கதை என்பதுதான் பெரிய குறை . 
 
பழைய மாவில் இப்படி பக்காவாக தோசை சுட்ட இயக்குனர் , கதையிலும் மெனக்கெட்டிருந்தால்  ரசிகர்களை,  சும்மா சுத்த விட்டிருக்கும் காத்தாடி .
 
எனினும் ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தியை தருகிறது காத்தாடி . 
 
காத்தாடி .. வேகம் ஒகே . ஆரம் கம்மி  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *