மோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”

ஜெய்வந்த்தின் ஒயிட் ஹர்ஸ் சினிமாஸ் மற்றும் யுரேகாவின் யுரேகா சினிமா ஸ்கூல் தயாரிப்பில் ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன் , மாரிமுத்து நடிப்பில், 

யுரேகா எழுதி இயக்கும் காட்டுப் பய சார் இந்த காளி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன . 

ஒரு சைக்கோவை தேடி நாயகனான இன்ஸ்பெக்டர் அலைவது போல முன்னோட்டத்தின் காட்சிகள் இருந்தன .
 
சைக்கோ ஒரு பெண்ணா என்ற கேள்வியுடன் முன்னோட்டம் முடிகிறது . 
 
மோடி அரசின் அராஜகத்தை விமர்சிக்கும் பாட்டு ஒன்று உள்ளது . 
 
அதோடு ‘விலைமாதர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் . சென்னைக்கு சிவப்பு விளக்குப் பகுதி வேண்டும்’ என்ற, 
 
யுரேகாவின் வழக்கமான கோரிக்கையை வலியுறுத்தும் பாடல்கள் காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன . 
 
படத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரனும் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . 
நாயகி ஐரா வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும் நிகழ்ச்சியில் நல்ல தமிழில் பேசினார் ” யுரேகாவும் ஜெய்வந்தும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டனர் ” என்றார் . 
 
நாயகன் ஜெயவந்த் தன் பேச்சில் , “தமிழ் நாட்டில் தமிழன் வாழ வேண்டும் வெல்ல வேண்டும் என்ற இன உணர்வோடு,
இந்தப் படத்தை தயாரித்து நடித்து  இருக்கிறேன் . அதற்கேற்ற சிறப்பான கதையை யுரேகா கொடுத்து இயக்கி இருக்கிறார் ” என்றார் . 
 
யுரேகா தனது பேச்சில் , ” லாபம் அப்புறம்.. ஒரு நல்ல படம் தர வேண்டும் என்றார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஜெய்வந்த் . அப்படி ஒரு படத்தையே கொடுத்துளேன் . 
 
ஜெய்வந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் . ஐரா எந்த நாயகியும் ஏற்கத் துணியாத கேரக்டரில் நடித்துள்ளார் . 
 
இன்று தமிழகம் முழுக்க வட மாநில ஆட்கள் திட்டமிட்டு திணிக்கப் படுகிறார்கள் . எல்லா கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும் டோல்கேட்டிலும் அவர்கள் நம்மிடம்
 
‘கியா ….கியா…. ‘ என்கிறார்கள் . நாம் அவர்களை தமிழில் பேசச் சொன்னால் அவர்கள் நம்மிடம் ‘இந்தியில் பேசு’ என்கிறார்கள் . நாம் வட இந்தியா சென்று வேலை பார்த்துக் கொண்டு நம்மிடம் அவர்கள் இந்தியில் பெசும்போது,  நாம் அவர்களிடம் ‘தமிழில் பேசுடா’ என்றால் சும்மா இருப்பார்களா ?
 
அது மட்டுமல்ல … தமிழ் நாட்டில் நடைபெறும் கொலை , கொள்ளை , கற்பழிப்பு , திருட்டு,  வழிப்பறிஉட்பட்ட  பல குற்றங்களின் பின்னால் இருப்பவர்கள் இந்த வடக்கத்தியர்களே 
 
இதற்குப் பின்னால்  பிரதமர் நரேந்திர மோடியின் சதி இருக்கிறது என்ற யூகம் எல்லோருக்கும் உள்ளது .
 
எனக்கும் உள்ளது . அதை  சொல்லி இந்தப் படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ” என்றார். .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *