மாமியார் மருமகன் பிரச்னையை சொல்லும் ‘களவாணி மாப்பிள்ளை’

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட, 

16   படங்களைத்  தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறது.                                       

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா,

மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு –  சரவணன் அபிமன்யு 

இசை  – என்.ஆர்.ரகுநந்தன்                                                                                                                                                      

பாடல்கள் –  மோகன்ராஜன், ஏக்நாத் 

கலை  –  மாயா பாண்டி                                                                                                                                                    

எடிட்டிங்     –        பொன் கதிரேசன் 

நடனம் – தினேஷ்                                                                                                                                                                                              

ஸ்டன்ட்      –        திலீப்சுப்பராயன்                                                                               

தயாரிப்பு  மேற்பார்வை    –  சிவசந்திரன்.நிர்வாக தயாரிப்பு  –  ஸ்டில்ஸ் ராபர்ட்                                                                                                                                            

இணை தயாரிப்பு   – திருமூர்த்தி                                                                       

தயாரிப்பு   –  ராஜேஸ்வரி மணிவாசகம்.                                                                   

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  காந்தி மணிவாசகம்.  

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜி வி பிரகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினர்                                              

நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிய   இயக்குனர் காந்தி மணிவாசகம்,  “என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார்.மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார்…அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது.

அதைத்தான் நானும் தொட்டிருக்கிறேன்.  பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். 

வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள்தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது.

மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்…அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.                                           தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார்.. முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார்.

அந்தளவுக்கு மாமியார் மருமகன் பிரச்சனையை  இதில் கையாண்டிருக்கிறோம்.  ஜாலியான பொழுது போக்கு படமாக, 

களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது” என்றார் இயக்குனர் காந்திமணிவாசகம்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *