களவானி மாப்பிள்ளை @ விமர்சனம்

ராஜ புஷ்பா பிக்சர்ஸ் சார்பில் ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரிக்க, தினேஷ் , அதிதி மேனன், ஆனந்த ராஜ் , தேவயானி, ரேணுகா, முனீஸ்காந்த்,
 
நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் காந்தி மணிவாசகம்  இயக்கி இருக்கும் படம் களவானி மாப்பிள்ளை .  மாப்பிள்ளை முறுக்கா ? இல்லை கிறுக்கா? பேசலாம் . 
சின்ன வயசில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது பொறாமைக் கார நண்பன் கீழே தள்ளிவிட அடிபட்டதால் அதன் பின்னர், 
 
எந்த வாகனமும் ஓட்டக் கற்றுக் கொள்ளாமல் வளர்ந்து விட்ட இளைஞன் தேவாவுக்கு ( தினேஷ்) துளசி என்ற பெண்ணோடு ( அதிதி மேனன்) காதல் வருகிறது . 
துளசியின் அம்மா ராஜேஸ்வரி (தேவயானி) . காதலித்த போது கார் ஓட்டத் தெரியும் என்று பொய் சொல்லி கல்யாணம் செய்து கொண்ட
 
ஒரே காரணத்துக்காக கணவன் கார்மேகத்தை (ஆனந்த ராஜ்) தள்ளி வைத்து இருப்பவள் . 
 
ராஜேஸ்வரியிடம் கார் ஓட்டத் தெரியும் என்று தேவா பொய் சொல்ல , மகளின் காதலுக்கு சம்மதிக்கிறாள் ராஜேஸ்வரி . 
கல்யாணத்துக்குள் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணிய  தேவாவின் முயற்சிகள் தோற்க , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கலைவாணி மாப்பிள்ளை . 
 
கலர்புல்லாக இருக்கிறது படம் ( ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யு , கலை மாயா பாண்டி , )
 
தினேஷ் தனக்கே உரிய பாணியில் நடித்து உள்ளார் 
அதிதி மேனன் அழகாக இருக்கிறார் . நன்றாக நடிக்கவும் செய்கிறார். 
 
ஆனந்த ராஜ் தேவயானி , ரேணுகாவும் கேரக்டருக்கு பொருத்தம் 
 
ரகுநந்தன் இசையில் என்ன செஞ்ச புள்ள பாடல் மிக இனிமை .
மனோபாளால் , ராஜேந்திரன் , முனீஸ்காந்த் , , சாம்ஸ் , கிரேன் மனோகர் என்று நிறைய காமெடி நடிகர்கள் … இருக்கிறார்கள் . 
 
கதை, திரைக்கதையில் இன்னும் சிறப்பாக முயன்று இருக்கலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *