“கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்”

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward),

என்ற  தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன்,

அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்,பேராசிரியர். அனில் சட்கோபால்,

தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர், பேராசிரியர் எம்.நாகநாதன், SBOA பள்ளிகளின் தாளாளர், தாமஸ் பிராங்கோ, இயக்குநர் பா.இரஞ்சித்,

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் C.S. ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ஜே.அமலோற்பவ நாதன், மருத்துவர் அனுரத்னா,

குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், பொறியாளர், எழுத்தாளர் பி.கே.ராஜன்,

தமிழ்நாடு கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பினை சார்ந்த பேராசிரியர் என்.மணி, நாடகவியலாளர் பிரளயன், மருத்துவர் எஸ்.காசி, மருத்துவர் எழிலன்,

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். C. லட்சுமணன், பெங்களுரு இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு மாணவர் S.ஸ்ரீநாத்,

தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த CVMP எழிலரசன், தலித் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த A.பிரான்சிஸ்,

முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த பழவேற்காடு M.அ,ன்சாரி, முற்போக்கு மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பாரதி பிரபு,

இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த V.மாரியப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினை சேர்ந்த S.தினேஷ்,

திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், முன்னாள் துணைவேந்தர் V.வசந்திதேவி,

அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் G.ஹரகோபால்,

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த K. சாமுவேல்ராஜ், தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பாக P.B.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட, பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.இரஞ்சித் பேசும்போது

” இன்று  தமிழகத்தின் மிக முககியமான தேவையாக இந்த நிகழ்வு.  ஏனென்றால் இந்த   சமூக நீதியற்ற, சமத்துவமற்ற கல்விச் சூழலில்   

  ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா போன்ற சமூக ஆர்வலர்கள் நமக்குத் தேவை  என்று நான் நினைக்கிறேன். 

இவர்கள் எல்லோரும்தான் நமக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார்கள். 

அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்   கொள்கிறேன்.

தோழர் வசந்தி தேவி பேசும்போது, இங்கு கல்வியே சமம் இல்லாமல் இருக்கிறது. 

அதை நாம் சரி செய்யாமல் 

நீட் மாதிரியான எந்த ஒரு பொதுத் தேர்வுவந்தாலும், அது யாருக்கு அனுகூலமாக

 இருக்கும்” என்பதை மிகத் தெளிவாக நமக்கு புரிய வைத்தார்.

 முன்னெல்லாம் கல்வி கற்கவில்லை என்பதுபிரச்சனையாக இருந்தது. இப்போது கல்வி   கற்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. 

உதாரணத்திற்கு சட்டக்கல்லூரி மாதிரியான கல்லூரிகளில்ஒடுக்கப்பட்டவர்கள் அதிகம் படிக்கிறார்கள் என்பதால்

அங்கு கட் ஆப் மார்க் அதிகமாக இருக்கும். இவர்கள் அடிமைப்பட்டு கிடந்த வடிவத்தையும்வெறுக்கிறார்கள்,

 எழுச்சி பெறும் வடிவத்தையும் வெறுக்கிறார்கள்.

 பொதுவாக இன்றைக்கு கல்வி நிலையங்கள் என்னவாக இருக்கின்றன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

இட ஒதுக்கீடு பெற்று படிக்கிறார்கள் என்றுஇங்கு கேலிக்குள்ளாக்கும் நேரத்தில் தான், மெரிட்டில் தேர்வாகும் மாணவர்களும் கொலைக்கு ஆளாகிறார்கள். 

ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் முதல்                 கலைக்கல்லூரி மாணவன் பிரகாஷ் வரை  கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய அரசியலால் மட்டுமே சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

சாதியக் கட்டமைப்பைஉடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும்.

 தொடர்ந்து இட ஒதுக்கீடு குறித்த தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.  யார் யாருக்கு எவ்வளவு சதவீத இட ஒதுக்கீடு என்பதை 

முதலில்பொதுத்தளத்தில் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். அப்போது தான் இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது என்ற புரிதலை நாம் ஏற்படுத்த முடியும்.

கல்வி சார்ந்த எழுச்சி என்பது நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை. தொடர்ந்து கல்வி நிலையங்கள் சமூகத்திற்கு 

தேவையான அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர்களை வேலை செய்யும்  இயந்திரங்களாக உற்பத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

 நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை  இல்லை. நீட் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான பிரச்சினை. 

எனவே தான்நீட் தேர்வை எல்லோரும் இணைந்தே எதிர்த்தாக வேண்டிய மிக  முக்கியமான தேவை இருக்கிறது.

 சாதியாக பிரிந்திருக்கிற இந்த சமூகத்திற்கு மாணவர்களையும் சாதியாளர்களாக உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அங்கேசமூக நீதி கல்வியே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. இன்றைக்கு  என்னைசமூக வலைதளங்களில் சாதி ரீதியாக விமர்சிப்பவர்கள் கூட ,

நன்குபடித்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதிலிருந்து, நம் கல்வி நிலையங்கள் மாணவர்களை எப்படிப்பட்டவர்களாக உருவாக்குகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

 இந்த மாதிரியான எல்லா சிக்கலையும் கடந்தே, நாம் எல்லோரும் நீட் தேர்விற்கு எதிராக  போராட வேண்டிய  தேவை  இருக்கிறது. 

தமிழகத்தின் முற்போக்குமாணவர்களும், இளைஞர்களும் இந்த  விவாததையும்,  உரையாடலையும் பொதுத்தளத்திற்கு  எடுத்துச் செல்ல வேண்டும். 

கல்வி முன்னால் உள்ளசவால்களை அனைத்து  மாணவர்களிடமும்  விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். அது சமூக நீதி                                            

 கல்வி குறித்தும், நீட் எதிர்ப்பு குறித்துமானதாக இருக்கவேண்டும்.

இப்போது நீட் மட்டுமல்ல இன்னும் இருக்கிற அத்தனை பொதுத் தேர்வு முறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். 

அதற்கு நாமெல்லாம் சாதியை ஒழித்து விட்டுஒன்றிணைய வேண்டும். நம்மைப் போலவே சிந்திக்கிற நேச சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். 

இது ஒரு மிகப்பெரிய வேலை தான், ஆனால் இங்குகுழுமியிருக்கிற முற்போக்கு மாணவர்களைப் பார்க்கும் போது அது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்றார் . 

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்…

நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு

கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் திரும்பவும் சேர்க்க வேண்டும்.

கல்வியை உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புக்குள் கொண்டு செல்லக்கூடாது.

தீர்மானங்கள் முழு விவரம் அறிய, கீழே நீல நிறத்தில் உள்ள  நீலம் என்ற வார்த்தையை சொடுக்கவும் !

நீலம்

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *