சுத்திகரிப்புக் கமல்ஹாசன்

Kamal Haasan Narpani Iyakkam Social Welfare Activities Event Stills (25)

Picture 28 of 28

விவசாய நிலங்களுக்கும் வன விலங்குகளுக்கும்  முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தென் சென்னை மாடம்பாக்கம் ஏரி நாளடைவில் திறந்த வெளி குப்பைக்கிடங்காக மாறி மக்காத குப்பைகளால் நிரம்பியதால் வன விலங்குகளும் சுற்றுச் சூழலும் பெரிதும் பாதிக்கப்பட இந்திய சுற்றுச் சூழல் அறக்கட்டளை என்ற அமைப்பு தன்னார்வலர்கள் குழுவோடு இணைந்து 2012 ஜூலை மாதம் இந்த ஏரியை சுத்தப்படுத்த முயன்றது.

ஏரி   பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் மாடம்பாக்கம்  பஞ்சாயத்து இவற்றின் ஆதரவோடு இதுவரை 24 முறை குப்பை அகற்றப்பட்டது. இதனால் 60 சதவீதம் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் ..

 தூய்மை இந்தியா  திட்டத்தில் கமல்ஹாசனும் பங்கெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்ற கமல் தனது பிறந்த நாளான நவம்பர் ஏழாம் தேதி  காலையில்,  நீர்ப்பரப்பு மற்றும் சுற்றுச் சூழல் இவற்றின் அவசியத்தை வெகு ஜன மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில், மேற்படி  இந்திய சுற்றுச் சூழல் அறக்கட்டளையோடு சேர்ந்து மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் நேரடியாக ஈடுபட்டார். பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும்  கலந்து கொண்டார் .

கமலுடன் இணைந்து மாடம்பாக்கம் பள்ளிகளில் இருந்து பல தன்னார்வலர்களும் பொதுமக்களும் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர் . 25வது முறையாக நடந்த இந்த தூய்மைப் படுத்தும் பணியால் மாடம்பாக்கம் ஏரி  மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சீரமைப்பு பணியில் பெருவாரியான பொதுமக்களை இடம் பெற வைக்கவும் இதோடு சேர்ந்து மாடம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரத்தை மீண்டும் சீரமைக்க அரசுடன் சேர்ந்து விஞ்ஞான ரீதியிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம்.

காலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் மாலை நான்கு மணிக்கு பத்திரிக்கையாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து தூய்மை இந்தியா இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதில் தனது நற்பணி இயக்கத்தின் பங்கு , பொது மக்கள் இதில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி அழுத்தமாக பேசினார். நற்பணி மன்றத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏழைகளுக்கும்  மூன்று சக்கர சைக்கிள் மற்றும் தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Comments are closed.