ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட ‘கணிதன்’ படவிழா Gallery & News

செய்திக் கட்டுரை புகைப்பட கேலரிக்குக் கீழே ….

DSC_5568

Picture 2 of 54

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா,  கேதரின் தெரசா,  இயக்குனர் பாக்யராஜ் , தருண் அரோரா ஆகியோர் நடிக்க ,

 ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராகப் பணியாற்றிய டி என் சந்தோஷ் இயக்கியுள்ள படம் கணிதன் .
இந்தப்  படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பெற்றுக் கொண்டார் . 

டிரம்ஸ் மன்னன் சிவமணி இசை அமைத்து இருக்கும் இந்தப் படத்தில் ”சேகுவாரா…”  என்று துவங்கும் ஒரு பாடலை புலவர் புலமைப் பித்தனும் இரண்டு பாடல்களை மதன் கார்க்கியும் ,
ஒரு பாடலை நவீன் என்பவரும் எழுதி இருக்கின்றனர் . 
விழாவின் துவக்கத்தில் டிரம்ஸ் சிவமணி , மாண்டலின் ராஜேஷ் ஆகியோர் நடத்திய டிரம்ஸ் மாண்டலின் இணைப்பிசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது . சிவமணியுடன் அவரது மனைவியும் பாடினார் . டிரம்ஸ் இசைத்தார் .
DSC_5907
டிரம்ஸ் சிவமணியின் குருநாதர்களான  காரைக்குடி மணி , கடம் விக்கு விநாயக் , சிவமணியின் சினிமா இசை வாழ்க்கைக்கு பேருதவி செய்த எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ,
சிவமணியை வாழ்த்தினார்கள்  . படத்தில் எஸ் பி பி ஒரு பாடல் பாடி இருக்கிறார் . 
கலைப்புலி எஸ் தாணு, தான் தயாரிக்கும் படங்களில் சிறப்பாக வேலை செய்யும் உதவி இயக்குனர்களை இனம் கண்டு ,
அவர்களை தானே அழைத்து கதை சொல்லச் சொல்லி,
படம் தரும் நல்ல பண்பை பலரும் பாராட்டினார்கள்.
“எனது இயக்கத்தில் அவர் தயாரிக்கும் தெறி படத்தில் பணியாற்றும் எனது உதவியாளர் இருவருக்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ” என்று கூறி அரங்கை அலற வைத்தார் இயக்குனர் அட்லி 
“ஒரே நேரத்தில் கபாலி , தெறி என்று இரண்டு சூப்பர் ஸ்டாரின் படங்களைத் தயாரித்தாலும்,  அதே நேரம் அதர்வாவை வைத்து கணிதன் படத்தையும் தயாரிக்கும்  தாணு சார்,  
DSC_6088அந்த பெரிய படங்களை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு இந்த படத்தையும் நேசிப்பார்” என்று பாராட்டினார்    ஏ ஆர் முருகதாஸ் .
“டிரம்ஸ் சிவமணியின் அன்புக்காக இந்த விழாவுக்கு வந்தேன் ” இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் 
“எஸ் தாணு சார் மாதிரி ஒரு தயாரிப்பாளரிடம் முதல் படம் பண்ண வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பாக்கியம்” என்று சொன்ன இயக்குனர் டி என் சந்தோஷ்
“அதற்குக் காரணம் எனது குருநாதர் முருகதாஸ் சார்தான் . அவரிடம் பணியாற்றி வெளியே வந்தால் சினிமாவின் சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளலாம் ” என்றார்.
எஸ் தாணு பேசும்போது
DSC_6095” துப்பாக்கி படத்தில் சந்தோஷ் ஒரு உதவி யக்குனராக மிக சிறப்பாக பணியாற்றியதைப் பார்த்து கவரப்பட்டேன் . கதை சொல்லச் சொன்னேன் . சொன்னார் . பிரம்மாதமாக இருந்தது .
படத்தை ஆரம்பித்தேன் . படம் முடிந்து படத்தைப் பார்த்த போது வியந்து போய் விட்டேன் . 
படம் அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது . இப்போது அந்தத் தம்பி மீது கூடுதல் மரியாதை வருகிறது . பத்திரிகையாளர்களின் சக்தியை சொல்லும் படம் இது ” என்றார் . 
நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை,  தவறானவர்கள் தங்களுடையது போல மாற்றிக் கொண்டு,  ஏமாற்றி வேலைக்குப் போய் விட்டு ,
DSC_5866
உண்மையான திறமைசாலிகளை வேலை கிடைக்காமல் தவிக்க வைக்கும்,  ஒரு குற்றம் பற்றிய படம் இது என்பது,  முன்னோட்டத்தில் தெரிகிறது . 
பாடல்களில் அதர்வா உற்சாகமாகவும் கேதரின் தெரசா படு கிளாமராகவும்  இருக்கிறது . சிவமணியின் இசை அதிர அடிக்கிறது 
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு… சும்மா அசத்தோ அசத்து என்று அசத்துகிறது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →