உயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா

புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை சாடிய சூர்யாவுக்கு எழுந்த எதிர்வினைகளை ரஜினி கூல் செய்த நிகழ்வாக காப்பான் ஆடியோ லாஞ்ச் அமைந்தது . 

அடுத்து,  படத்தின் டீசரில் இடம் பெற்ற காவிரி , தமிழ்நாடு சம்மந்தப்பட்ட வசனங்களையும் கலப்பையையும் காரணம் காட்டி ஒரு குழு தன் கதை என்று சொல்லி வழக்குப் போட,

 சற்றும்  முகாந்திரம் இல்லாத அந்த வழக்கை எதிர்கொண்டு வென்ற கே வி ஆனந்த் உள்ளிட்ட படக் குழு , வரும் 20 ஆம் தேதி படம் வெளியாவதை ஒட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது . 

சூர்யா , நாயகி சாயீஷா , அவரது கணவரும்  படத்தில் நடித்து இருப்பவருமான ஆர்யா , இவர்களுடன் சமுத்திரக் கனி  மற்றும் பலர் . 

நிகழ்ச்சிகாகவே உருவாக்கப்பட்ட துணை முன்னோட்டம் , பழைய முன்னோட்டம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன . 

பிரபல தலைவர்களின் பாதுக்காப்புக்காக இயங்கும் எஸ் பி ஜி பாதுகாப்புப் படையின் சிறப்புகளை கூறிய இயக்குனர் ஆனந்த் ( சாகறதுக்கே சம்பளம் வாங்குறாங்களோ என்று நினைக்கும் அளவுக்கு மிக ஆபத்தான பணி அது )  அந்த கதாபாத்திரத்துக்கு சூர்யா பொருந்திய விதத்தை பாராட்டினார் .

 

சாயிஷாவின்  திறமையை புகழ்ந்தார் . மோகன் லாலை வியந்தார் . 

கணவர் ஆர்யாவோடு நடித்தது சந்தோசம் என்று சொன்ன சாயீஷா , சூர்யாவின் உழைப்பை பாராட்டினார் . 

சமுத்திரக் கனி , தான் இந்தப் படத்தில் நடித்ததற்கு சந்தோஷப் பட்டார் . 

கே வி ஆனந்த் படத்தில் நடித்தது மிக்க சந்தோசம் என்றார் ஆர்யா . 

சூர்யா பேசும்போது , ” இந்தப் படத்தில் ஆர்யா நடித்த கேரக்டருக்கு வேறொரு நடிகரை புக் செய்து இருந்தோம். அவரால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை . உடனே ஆர்யாவை தொடர்பு கொண்டோம் . ஐந்து மணி நேரத்தில் தயார் ஆகி லண்டனுக்கு விமானம் ஏறினார்  . மிக்க  நன்றி அவருக்கு . 

இன்னொரு முக்கியமான விஷயம் .. கட் அவுட் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீயின் நினைவுகள் மனதை அழுத்துகின்றன . மிகக் கொடிய மரணம் அது . இனி என் படங்களுக்கு கட் அவுட்டுகள் வேண்டாம் . காப்பான் படத்தில் இருந்தே அதை ஆரம்பிக்கிறேன் . அதற்கு பதிலாக ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வகையில் செயல்  பட வேண்டும் ” என்றார் . 

உண்மை .  ஊடக வளர்ச்சி பெரிதாக இல்லாத காலத்தில் கட் அவுட் என்பது விளம்பரத்துக்கு தவிர்க்க முடியாத விசயமாக இருக்கலாம் . ஆனால் மொபைல் பொன் மூலம் ஒவ்வொரு மனிதனுமே ஒரு மீடியாகவாக ஆகி விட்ட நிலையில் இனி கட் அவுட் என்பது காட்டுமிராண்டித்தனமே!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *