கார்த்தி-17

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,

இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment  ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை இயக்கி வைத்தார் 

 வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து   கார்த்தி , ரகுல்  பிரீத்சிங்   ஜோடி மீண்டும்   இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்  .   இவர்களுடன் முக்கிய வேடத்தில்  நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர்  கதை திரைக்கதை, வசனம் எழுதி  டைரக்டராக அறிமுகமாகிறார்.

 இவர் ,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன் ,  ,பிரபல  இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் ,இயக்குநர்  R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

படத்திற்கு, 

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R  வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்


கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்

நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட்  தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

 படத்தை   ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட்   வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த  சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .

தற்போது  திரிஷா  நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார்.

சென்னையில் துவங்கிய படப்பிடிப்பு ,  தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும்  உருவாகிறது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *