காஷ்மோரா — பாகுபலி … ஒற்றுமை — வேற்றுமை !

kash-1

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , நயன்தாரா , ஸ்ரீதிவ்யா , விவேக்  நடிப்பில் ,

‘இதற்குத் தானா ஆசைப்பட்டாய்  பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி இருக்கும் படம் காஷ்மோரா 

தீபாவளி விருந்தாக வரும் அக்டோபர் 28 அன்று  வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்கான  பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினர். 
kash-4
“படத்தில் கிராபிக்ஸ்  வேலைகள் எக்கச்சக்கம் . வேறு எந்த யூனிட்டாக இருந்தாலும் படம் பொங்கலுக்குத்தான்  வந்திருக்கும் .
நாங்கள் ஓய்வே இல்லாமல் வேலை பார்த்து  படத்தை  தீபாவளிக்கு கொண்டு வருகிறோம் ” என்றார்  வி எஃப் எக்ஸ் மேர்பாரவையாளர்  ஸ்டாலின் சரவணன் 
“இயக்குனர் கோகுலின் இயக்கமும் கார்த்திக்கின் நடிப்பும் இந்தப் படத்துக்கு பெரும்பலம்” என்றார் ஒளிப்பதிவாளர்  ஒம். 
நடிகர் விவேக்  பேசும்போது
kash-6
”  சத்தியம் அது நிச்சயம் என்ற  படத்தில் நான் சிவகுமார் சாரின் மகனாக நடித்தேன் . இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு அப்பாவாக நடித்தேன் .
இந்தப் படத்துக்காக கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டார் . படத்தில் வரும் ராஜ் நாயக்  கேரக்டருக்காக  அதிகாலை  மூன்று  மணிக்கு மேக்கப்  போட ஆரம்பித்த்தால் அவர் மேக்கப் முடிய மணி இரண்டு ஆகும் .  
இரண்டு மணி நேரம்தான் நடிக்க முடியும் . அதற்குள் மேக்கப் உருக ஆரம்பித்து விடும் .  வேகமாக நடிக்க வேண்டும் . நன்றாகவும் நடிக்க வேண்டும் . அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து உள்ளார் ” என்றார் . 
இயக்குனர் கோகுல் தனது பேச்சில்
kash-3
” நான் கற்பனையில் யோசித்ததை  தனது நடிப்பால் பல மடங்கு கார்த்தி உயர்த்தினார்.
தயாரிப்பாளர்  எஸ் ஆர பிரபு அல்லாமல் வேறு யாராக இருந்தாலும் இந்தப்  படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்காது ” என்றார் 
கார்த்தி பேசும்போது
kash-2
“நான் இந்தப் படத்தில் நடித்த போதுதான் கமல் சார் விதம் விதமான மேக்கப்பில் எவ்வளவு கஷ்டப்பட்டு  இருப்பார் என்பது புரிந்தது .
நயன்தாரா ஒரு மகாராணியாக  அந்தக் கேரக்டரை விரும்பி நடித்தார் . படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார் . ஸ்ரீ திவ்யாவும் அப்படியே . 
kash-5
இன்னொரு முக்கியமான விஷயம் . இந்தப் படத்தை பாகுபலியோடு ஒப்பிடுகிறார்கள் . அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை . படத்தில் வரும் வரலாற்றுப் பாத்திரம் அரை மணி நேரம் மட்டுமே வரும் .
மற்றது எல்லாம் நிகழ்காலக் கதைதான் . எனவே பாகுபலிக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தமே இல்லை ” என்றார் . 
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன் பேச்சில்
kash-7
” கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முழு உழைப்பையும் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம் .
படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ” என்றார் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *