லைக்கா இல்லாமல் கத்தி வருதுங்கோ

IMG_6857“உலகம் முழுக்க லைக்கா என்ற பெயர் கொடிகட்டிப் பறக்கிறது. லைக்கா என்ற பெயர் இல்லாமல் இந்தப் படம் வரவேண்டும் என்றால் அந்தப் படமே வெளியே வரவேணாம் “

— என்று கத்தி படத்தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் அல்லிராஜன் முழங்கியது  எல்லாம் செல்லுபடி ஆகவில்லை .

 விஜய்யும் ஏ.ஆர் முருகதாசும் பெருமளவு அப்செட் ஆன செய்தி வந்தபோது (உழைச்சவனுக்குதானே வலி தெரியும் ),  தமிழ் சினிமா உலகமே அடை மழையிலும்  கொந்தளித்தது .

படத்தில் விஜய் பெயர் கதிரேசன் . அதன் சுருக்கமே கத்தி . கதிரேசன் என்று கூட பெயர் போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் லைக்கா என்ற பெயர் இருந்தால் ரிலீஸ் ஆகாது என்று உறுதியாகக் கூறியது .
இதற்கு மேலும் அல்லிராஜன்  பிடிவாதம் பிடித்தால் அது நல்லதில்லை என்று இணை தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாசிடம் கறாராய்க் கூறியது .

விளைவு ?

கத்தி ரிலீஸ் ஆகிறது .

 எப்படி ?

உலகம் முழுக்க லைக்கா புரடக்ஷன்ஸ் பெயருடன் கத்தி ரிலீஸ் ஆகும் .

ஆனால் தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மட்டும் லைக்கா பெயர் இல்லாமல் ரிலீஸ் ஆகிறது . (ஒப்பன் மவனே சிங்கம்லே !)

ஆக,  நாளைக்கு தியேட்டரில்  விஜய்க்கு ‘ஓ/ போட எல்லோரும் ரெடியாகலாம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →