‘புலி’யோடு மோதும் காமெடி ‘கத்துக்குட்டி’

PON_3658
OWN பிக்சர்ஸ் சார்பில் எம்.அன்வர் கபீர், ஆர்.ராம்குமார், பி.ஆர்.முருகன் ஆகியோர் தயாரிக்க , நரேன்,  சூரி, சிருஷ்டி டாங்கே  நடிப்பில்,   பத்திரிக்கையாளர் இரா.சரவணனின் கதை திரைக்கதை வசனம் படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில்,  தஞ்சை மாவட்ட கிராமத்துப் பின்னணியில்,   காமெடி தளும்பும் படமாக உருவாகி இருக்கிறது  ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.

இந்தப் படத்துக்காக முதன் முறையாகக் கிராமத்து நாயகனாகக் களமிறங்கி இருக்கும் நரேன், காமெடி நாயகனாக நடித்து இருக்கிறார் . கெட்டப் தொடங்கி கேரக்டர் வரை மிக வித்தியாசமான நரேனை இந்தப் படத்தில்  பார்க்க முடியுமாம்

 
PON_3040
படத்துக்கு ஆரம்பத்தில் 12 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த சூரி , கதை மிகவும் பிடித்துப் போய், 32 நாட்களை ஒதுக்கிக் கொடுத்து ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில் காமெடி கச்சேரியையே நிகழ்த்தி இருக்கிறாராம்.

”கதையும் காமெடியும் பின்னிப் பிணைஞ்ச புது மாதிரியான திரைக்கதைதான் ‘கத்துக்குட்டி’யோட ஸ்பெஷல். என் வாழ்நாளுக்கும் நான் பெருமைப்படக் கூடிய படம் இது. வழக்கமான வார்த்தைகளா இதை நான் சொல்லலை.

படத்தைத் தியேட்டர்ல பார்க்குறப்ப நான் எவ்வளவு ஆத்மார்த்தமா இதைச் சொல்லி இருக்கேன்னு எல்லோருக்கும் தெரியும். அவ்வளவு நம்பிக்கையான படம்” என்று குறிப்பிடும் சூரி, படத்தில் ‘காதல்’ சந்தியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு போட்டி ஆட்டமும் போட்டிருக்கிறார். 
 
1K3A2218
‘ஸ்ருஷ்டி டாங்கே தஞ்சை மண்ணின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக கிராமத்து நாயகியாக நடித்திருக்கிறார். “இந்தப் படத்துக்காக என்னை நடிக்க அழைத்துப் போய்த் தங்க வைத்த இயக்குனர் சரவணன், பதினைந்து நாட்கள் என்னை வைத்து ஒரு காட்சி கூட எடுக்கவில்லை. தஞ்சை மாவட்ட கிராமத்து மக்களோடு பழக விட்டார் .
இப்போது நான் தஞ்சாவூர் பெண்கள் பாணியில் முடியைக் கொண்டையாக முடிந்து கொண்டு சண்டை போடக் கூடக் கற்றுக் கொண்டு விட்டேன் ” என்கிறார் சிருஷ்டி டாங்கே .

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இந்தப் படத்தில்  நரேனின் தந்தையாக குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர் நடிக்க ஒத்துக் கொண்ட முதல் படமே இதுதான்.

 
PON_3745
படத்தில் எந்த இடத்திலும் ‘கட்’ கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ”தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்” என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள். தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாளே  வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது. 
”நூறு சதவிகித காமெடிப் படமாக ‘கத்துக்குட்டி’ உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக்கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம்.
1K3A3281
நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“படத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வியலை சொல்கிறோம் . மீத்தேன் திட்டத்துக்கு எதிரான குரலை பதிவு செய்கிறோம் .இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் ‘கத்துக்குட்டி’ வெளியாக இருக்கிறது” என்ற இயக்குனர் சரவணனிடம்…

” அக்டோபர் ஒன்றாம் தேதி  விஜய் நடித்த புலி திரைப்படம் வெளியாக இருக்கிறது . அந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறுகிறீர்களே . புலி படத்தோடு மோதுவதாக விளம்பரப்படுத்தி பரபரப்பை உண்டாக்கி விட்டு,  பின்னர் கடைசி நேரத்தில் ‘ தியேட்டர்கள் போதுமான அளவில்  கிடைக்காத காரணத்தால் படத்தை தள்ளிப் போடுகிறோம்’ என்று அறிவிப்புக் கொடுக்கத்  திட்டமா?” என்று கேட்டேன் நான்  .

VEL_8118

இதற்கு முதலில் பதில் சொன்ன நடிகர் நரேன் ” சில மாதங்களுக்கு முன்பு இளையதளபதி விஜய்யை நான் சந்தித்த போது ,’ உங்க புலி படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு சொல்லுங்க சார். அது வராத நாளா பார்த்து எங்க படத்தை ரிலீஸ் செய்யணும்’னு கேட்டேன் . விஜய் சார் சிரிச்சுகிட்டு ‘ எல்லா படமும் பெரிய படம்தான் நரேன் . புலி எப்போ ரிலீஸ்னு இன்னும் முடிவு பண்ணல’ன்னு சொன்னார் .

நாங்க அக்டோபர் 1 என்று தேதி முடிவு பண்ணினோம் . இப்போ புலி படமும் அதே தேதிக்கு வருது . அட, அந்த படத்துக்கு போற ஆடியன்ஸ் ஹவுஸ்புல் ஆன பிறகு அப்படியே எங்க படத்துக்கு வரட்டுமே சார்.புலி கூட ரிலீஸ் ஆகும் இந்த பூனைக் குட்டியும் பிழைச்சுக்கும் ” என்றார் .

DSC_0096

அதையே ஒட்டி பதில் சொன்ன இயக்குனர் சரவணன் ” கண்டிப்பா படம் அக்டோபர் 1 ஆம் தேதி வந்துடும் . நரேன் சார் சொல்ற மாதிரி விஜய் சார் படத்தை  பார்க்க வர்றவங்க அப்படியே எங்க படத்தையும் பார்த்துட்டு போகட்டும் . கத்தி படத்துல விஜய் சார் சொன்ன விசயங்களின் தொடர்ச்சியாதான் எங்க கத்துக்குட்டி படமும் இருக்கும் . அதனால் விஜய் சார் ரசிகர்களுக்கு எங்க கத்துக்குட்டி படமும் பிடிக்கும் ” என்கிறார் நம்பிக்கையோடு.

வாழ்த்துகள் சரவணன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →