கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா .

விவசாயம் , கூட்டுக் குடும்பம் , கால்நடைகள் மீதான நேயம், தமிழ் உணர்வு இவற்றை வீரியமாகச சொல்லி ,

தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் , 

 நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி , ஆலங்குடி ஆர்.பெருமாள் , திருவலஞ்சுழி சேகர் , விதைநெல் விஜயலட்சுமி உள்ளிட்ட, 

ஐந்து சிறப்பான இயற்கை விவசாயிகளுக்கு தலா இரண்டு லட்சம் பரிசு வழங்கிய 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா ,

அதோடு அகரம் பவுண்டேஷனின் மேற்பார்வையில் விவசாய மேம்பாட்டுக்காக இயற்கை விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார் .

தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ சேகரப் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ்  , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் ,

இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் பேசிய நெல் ஜெயராமன் , “இதுவரை 170 ரக பாரம்பரிய நெல்விதைகளை மீட்டு இருக்கிறேன் .

என்னை தாக்கிய புற்று நோய் குணம் ஆவதில் நான் சாப்பிடும் பூசணி சாறு மற்றும் பூங்கார் அரிசிக்கும் பங்கு உண்டு . 

இப்போது ஐ டி கம்பெனி இளைஞர்கள் பலரும் இயற்கை விவசாயத்துக்கு வருகிறார்கள் . இன்னும் கொஞ்ச ஆண்டுகளில், 

விவசாயம் செய்பவனே நிஜமான கோடீஸ்வரன் என்ற நிலைமை வரும் . ” என்றார் சூர்யா பேசும்போது “ எல்லா புகழும் இறைவனுக்கே. இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றிப் படமாகக் கொடுத்திருக்க முடியாது.

பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. 

சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று இந்தப் படம் நிருபித்துள்ளது. 

தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியைக் கொண்டு வருவது கடினமான  விஷயமாக உள்ளது

இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான்

எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால்தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களைத்தான் எடுப்போம்” என்றார் சூர்யா.கார்த்தி  தன் பேச்சில், “நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும்.

திரையரங்கில் மல்லிப் பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது.

நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வெள்ளை சர்க்கரையை எப்படி நிறுத்துவது, 

நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் அதிகம் பயன்படுத்துவது என்பதை பற்றி ,

எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவம் பற்றி, 

இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும்.  தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது “என்றார் .சத்யராஜ் பேசியபோது ”  சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு  இந்த படத்தை  முதலில் போட்டு காட்ட வேண்டும்.

இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளதுதான்.

படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது.

நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.” என்றார் .இயக்குநர் பாண்டிராஜ்  தனது பேச்சில் , ” படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.

ஒருவாரத்துக்குப் பிறகு எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களிடம் கோபமாக நடந்து கொள்வேன்  என்ற புரளியை கிளப்பியுள்ளார்கள்.

அது சுத்தப் பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள்.

அதை படத்தில் கொண்டுவர நானும இணை தயாரிப்பாளர் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம். . பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு, 

ஒன்றரை நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். இந்த மேனகா காந்தி என்ன நினைப்பில் இப்படி எல்லாம் செய்கிறார் என்பது தெரியவில்லை.

எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன்தான்.

எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து, 

இன்னொரு இடத்துக்கு ஓட்டிக் கூட்டிச் செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ? அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது ? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலைப் பட வேண்டாம்.

ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் சாப்பிடாமல் மாட்டுக்கு தீனி போடணுமே  , தண்ணி  வைக்கணுமே என்று, 

ஓடி வருவோம் அவர்களை கவனிக்க. !  மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டு ஜீவகாருண்யம் பேசும் உங்ககளுக்கு இது எப்படி தெரியும்?” என்றார்.

நியாயம் ! 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *